தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Monday, July 5, 2010

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 12

இது மீண்டும் பைரவி. மாடசாமியிடம் ஒருவன் ஓடி வந்து எதோ காதில் கிசுகிசுத்தான்.

மாடசாமி வானத்தை ஒரு முறை பார்த்தான். பின்னர் குகைக்குள் திரும்பி பார்த்தான். நான் பயத்தில் இருந்தேன்.

திரும்பவும் இடம் மாறல் ஆரம்பித்தது.
பாட்டி எங்களை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தனர் - அதாவது என்னையும் அந்த இளம் பென்னையும்.

காடு மலை. மீண்டும் வானம் கொட்டியது.
என் கால்கள் கல்லிலும் முள்ளிலும் நடந்தது.

சில இடங்களில் "
பார்த்து நடங்கள்" என்று மாடசாமி சொல்லும் போது. அதில் முரட்டுத்தனம் இல்லை.

நாங்கள் நதியின் வேறு ஒரு பக்கத்திற்கு வந்தோம்.
மீண்டும் ஒரு குகை கண்ணில் பட்டது. நாங்கள் உள்ளே போனோம்.

"என்ன மாடசாமி?" - கிழவி கேட்டாள்.
"அந்த பறவைங்க சத்தம் பதிவாகிடுச்சுல அதேன்"

அந்த பதிவு ஞாபகத்திற்கு வந்தது எனக்கு. அவன் அவர்களது போராட்டத்தை சொல்லி அனுப்பிய பதிவு அது.
என்னோடு இருக்கும் இளம் பெண்தான் பாதிக்கப்பட்டவள்.

அவர்கள் ஆயுதம் தூக்க நிறைய காரணங்கள் இருக்கு. அவர்களின் தாய் நிலம் - அங்கே இருந்து அவர்கள அப்புறபடுத்தபடுத்த நிறைய திட்டங்கள்.
எல்லாம் வளம் வாய்ந்த இந்த மலைககாக.

முதலில் மனுவெல்லாம் கொடுத்து தோற்றுபோய் ஆயுதம்
ந்த ஆரம்பித்து உள்ளனர். தோற்று போகும் ஒரு அறப்போராட்டம் ஒரு ஆயுத போராட்டத்தின் ஆரம்பம் ஆக சில தருணங்களில் உள்ளன.

அன்று இரவு வரை நாங்கள் அங்குதான் இருந்தோம். மாட
சாமிக்காக  சிலர் போரடி நேற்று காவல்துறையை நேற்று திசை திருப்பி உள்ளனர்.

இந்த மலையின் வளத்தை சிலர் வருவாய் ஈட்டும்  ஒன்றாக நினைக்க அதனோடு இந்த பகுதி பணக்காரர்கள் இணைந்து கொண்டனர். அவர்கள் இந்த மலை வாழ் மக்களின் காரணமாகவே அவர்களுக்கான பண்ணை வீடுகள், தோப்புகள் என்று மலைக்குள் வந்து குடி அமர முடியவில்லை.

தாய் நிலத்திற்காக அதன் அரசிடமே இன்று போராடும் நிலையில் மாடசாமியின் கூட்டம் இந்த மலை கூட்டம்.

உணவு சமைக்க ஆரம்பித்தா
ள் பாட்டி.
இன்னொருவன் ஓடி வந்தான்.
"அண்ணே நம்ம சனம் எல்லாம் தயாரா இருக்கு. அவனுக்கு உங்கள தொட முடியாது" - சொல்லி விட்டு எட்டி பார்த்தான்.
உள்ளே நானும் பாட்டியும் அந்த இளம் பெண்ணும்.
"ராக்காயீ அக்கா ..." - கொஞ்சம் மெதுவாக சொன்னான்.
அவன் காதில் மாடசாமி ஏதோ சொன்னான்.

வானம் கொட்டுவது நின்று இருந்தது.
ராக்காயீ - யார் இவள் ? 


அந்த நிகழ்வு நடந்தது. நாங்கள் மௌனமானோம். இரவு கவிழ தொடங்கியது.

நிலவும்  நட்ச்சத்திரங்கள் மௌனம் காத்தன. அந்த நிகழ்வு....

தொடரும்.

6 மறுமொழிகள்:

Chitra said...

இந்த மலையின் வளத்தை சிலர் வருவாய் ஈட்டும் ஒன்றாக நினைக்க அதனோடு இந்த பகுதி பணக்காரர்கள் இணைந்து கொண்டனர். அவர்கள் இந்த மலை வாழ் மக்களின் காரணமாகவே அவர்களுக்கான பண்ணை வீடுகள், தோப்புகள் என்று மலைக்குள் வந்து குடி அமர முடியவில்லை.

தாய் நிலத்திற்காக அதன் அரசிடமே இன்று போராடும் நிலையில் மாடசாமியின் கூட்டம் இந்த மலை கூட்டம்.


..... கதை சொல்ற சாக்குல, மேட்டர் நிறைய சொல்றீங்க..... பாவம்ங்க, அவங்க நிலைமை.... நல்லபடியான ஒரு முடிவு, உங்கள் கதையிலாவது கிடைக்கட்டும்.

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... இப்படி நிருத்திடீங்களே கார்த்திக்... என்ன ஆகும்னு guess பண்ண முடியல... சீக்ரம் அடுத்த பார்ட் போடுங்க

ஹேமா said...

ம்ம்ம்..கதையோட கதை சமூகத்தையும் தொடத் தொடங்கியிருக்கீங்க.நல்லது.தொடருங்க.

Karthick Chidambaram said...

நன்றி சித்ரா, தங்கமணி & ஹேமா

ஜோதிஜி said...

கார்த்திக் உங்கள் விமர்சன வார்த்தைகளில் ஆழமான அக்கறையும நல்ல தமிழ் ஆர்வமும் இருக்கிறது. எப்போதும் உங்கள் குறிப்பிட்ட இடுகையின் பெயர் வருமாறு எந்த இடத்திலும உங்கள் பின்னூட்டத்தை போடுங்கள். சற்று குழம்பிப் போய்த்தான் இதைக் கண்டு கொண்டேன்.

இயல்பாக நீங்கள் எழுதிய இளம் தகப்பனார் நிறைய சொன்னார் என்ற வாசகம் என்னை நிறையவே யோசிக்க வைத்தது. வாழ்த்துகள்.

அதிகம் எழுதக்கூடிய அத்தனை தகுதியும் உங்களிடம் இருக்கிறது.

Karthick Chidambaram said...

நன்றி நண்பரே ஜோதிஜி ...!

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை