Skip to main content

நல்ல தமிழ்

எனக்கு தெரிந்த சில நல்ல தமிழ் வார்த்தைகளை இங்கே பகிர்கிறேன். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவைகளை பகிருங்கள்.

Screw  driver - திருப்புளி ( இது மதுரையில் நான் கேட்ட வார்த்தை )
முழுத்தம் ( முகுர்த்தம் என்னும் வடமொழியின் உண்மை வார்த்தை - சிலப்பதிகாரம் இதனை பயன்படுத்துகிறது. இதன் பயன்பாடு கடந்த தலைமுறையுடன் நின்றுவிட்டது )
போகணி ( Tumbler , drinking Glass என்கிற வார்த்தைகளின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது )
மெய்யாளும் (  நிஜம் என்கிற வார்த்தையின்  தமிழ் பதம் - சென்னையில் மட்டும் வாழ்கிறது )
வாழ்வரசி ( சுமங்கலி என்கிற வடமொழி வார்த்தையின் தமிழ் வார்த்தை - இன்றும் சிலரிடம் பயன்பாட்டில் உள்ளது )
மைக் - ஒலி வாங்கி


பழமை பேசி அவர்கள் தந்த சில தொடுப்புகளின் மூலம் அறிந்து கொண்ட சில நல்ல தமிழ் வார்த்தைகள் கீழே

ஜெட் லாக் - மெய்க்குணகம்
Out of sync - பிறழ்வு
குணகம்ன்னா, இடத்தைப் பொறுத்து பொருள் மாறுமுங்க....
multiplier கூட குணகம்தான்....
குணகு அப்படின்னா, பிறழ்ந்து பிசகுவது.... பெயர்ச்சொல்லா மாறும் போது குணகம் ஆயிடுது...

இடநியசு - GPS
Chat  மின்னாடல் ( நான் இதனை இது நாள் வரை இனைய அரட்டை என்றே பயன்படுத்திவந்தது உள்ளேன் )

தொடர்பான பதிவு
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_16.html

பழமை பேசி அவர்களின் தளம்
http://maniyinpakkam.blogspot.com/

நன்றி,
கார்த்திக் சிதம்பரம்

Comments

  1. //Screw driver - திருப்புளி ( இது மதுரையில் நான் கேட்ட வார்த்தை )//
    சேலத்துல கூட திருப்புளினு தான் சொல்வோம்.

    நல்பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அடேங்கப்பா, இத்தனை புதிய தமிழ் வார்த்தைகள்..... ம்ம்ம்ம்....

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு கார்த்திக்

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு கார்த்திக்

    ReplyDelete
  5. மெய்யாலும் - நாங்களும் யாழ் தமிழில் இப்பவும் பாவிக்கிறோம் கார்த்திக்.

    வெதுப்பகம் - பேக்கரி

    மகிழூந்து - கார்

    ReplyDelete
  6. இப்படி தான் தமிழ வளர்த்தனுமா ?

    ReplyDelete
  7. ஹேமா அக்காவை போல மற்றவர்களும் தங்களுக்கு தெரிந்த நல்ல தமிழ் வார்த்தைகளை பகிருங்கள்.
    நன்றி
    @கலாநேசன்
    @சித்ரா
    @அருண் பிரசாத்
    @ஹேமா
    @தனி காட்டு ராஜா - இப்படியும் தமிழ் வளர்க்கலாம் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர