Skip to main content

ஜோவும் நாமும்!

காலகணிதம் என்கிற ஜோதிடம் நம்மை படுத்தும் பாடு கொஞ்சம் நகைச்சுவையும் அவலச்சுவையும் ஏற்படுத்துவது.

ஆரம்ப காலம் தொட்டே இந்த கணிதம் என்று இல்லை எந்த கணிதமும் நமக்கு பிடிப்பதில்லை. எல்லா பாடத்திலையும் நல்ல மதிப்பெண் வாங்கிவிட்டு கணிதத்தில் கோட்டை விட்ட நாட்கள் எல்லாம் நிறைய உண்டு.

"உலக கோப்பை வாங்கினால் என்ன எங்ககிட்ட தோத்த அணிதனே அது " - என்று பாகிஸ்தான் உலக கோப்பை வாங்கியபோது தேற்றிக்கொண்ட எல்லா இந்தியனை போல. கணிதத்தில் போனா என்ன ... மத்ததுல வந்தொட்டோம்ல என்று நினைத்து கொள்வேன். ( வேற வழி? )

கிளி ஜோதிடம், கை ஜோதிடம், கட்டம் போட்ட ஜோதிடம் எல்லாம் நமக்கு மனதிடம் வர்ற மாதிரி பெரிதாக எதுவும் சொல்லவில்லை.

"பையன் நல்ல படிப்பானா ?" - என்று கேட்டால்
"பையன் வெளிநாடு போவான் நல்ல வருவான்" - என்று பதில் வந்து விழும்.

அர்த்தம் என்ன? - பையன் பெரிசா ஒன்னும் படிச்சு கிழிக்க மாட்டான்.

கணிதம் தான் நம்ம வில்லன். ஜோவும் ( அட! ஜோதிகா இல்லைங்க, ஜோதிடத்தை செல்லமா கூப்பிட்டேன் ) - நமக்கு வில்லன்தான்.

"போரடி ஜெய்ப்பீர்கள்" - இப்படி ஒருத்தர் என்கிட்டே சொன்னார். ஜோதிடமாம் .நல்லவேளை ஜெயபீர்கள் என்று சொன்னார்.

ஜோதிடம் என்கிற வார்த்தையே தமிழ் மாதிரி தெரியல. ஆனால் ஜோதிடம் என்கிற வார்த்தை வருவதற்கு முன்னே ஜோதிடம் வந்து இருக்கும்.
நான் அதான் காலகணிதம் என்று தமிழ் படுத்தினேன். தப்புனா சொல்லுங்க.

சில பேருக்கு கல்யாணம் தள்ளிபோச்சுனு அங்க நம்ம ஜோவுக்கு நிறைய பங்கு உண்டு.

பல பேரு நொந்து போனா உடனே நம்ம ஜோவா பாக்க வந்துடுவான். "இப்ப உங்களுக்கு கொஞ்சம் நேரம் சரி இல்லை. வர்ற ( எதோ ஒரு மாசம் இங்க போட்டுக்குங்க ) மாசத்துக்கு அப்புறம் உங்க கஷ்டம் எல்லாம் போய் விடும்"  - இது ஜோவின் பஞ்ச் டயலாக்.

ஜோவும் லேசு பட்ட ஆள் இல்ல. இந்த சாமிய கும்பிடு. உனக்கு சனி இருக்கு. இப்படி நிறைய நிகழ்ச்சி நிரல் வச்சிருக்கு உங்களுக்கு. மங்கள இசை என்னைக்கு அப்படிங்குறது அது கிட்டதான் இருக்காம்.

ஜோவின் பெரிய ரசிகர் வட்டாரம் என்றால் அது அரசியல் தலைங்கதான். யாக மோகத்தை அவர்களுக்கு உண்டு பண்ணுவதில் ஜோ பெரிய ஆளு.
"இந்த தேர்தல ஏன் நீங்க தோத்தீங்க ?" - என்று ஒரு அரசியல்வாதி மனசிடம் கேட்டுப்பாருங்கள். எந்த அரசியல்வாதியாவது மக்களுக்கு ஒன்னும் செய்யல அதான் தோத்தம்னு நெனச்சா  நாடு முன்னேறும். யாகம் பண்ணல அதான் தோத்தோம்னு நெனச்சா .... அது ஜோவின் வெற்றி! மக்களாட்சியின் தோல்வி.

வேலை கிடைக்காத போது திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலுக்கு போற பசங்க உண்டு. நானும் போய்  இருக்கேன். நான் கடவுள் மறுப்பாளன் எல்லாம் இல்லை. ஆனால் அதில் ஆர்வம் இல்லை அவ்வளவுதான்.

யாரோ இந்த கோயில் போய் வாங்க ... வேலை கிடைக்கும்னு சொன்னா நம்ம பசங்க படை எடுப்பாங்க. இந்த மாதிரி பரிந்துரை சொல்வதில் ஜோதிடர்கள் திடமானவர்கள். எல்லாத்துக்கும் இப்படி ஒரு பரிந்துரை உண்டு. இது ஜோ ஸ்டைல்.

வயிறு வலியா? -  இந்த மருந்து. தலை வலியா? - இந்த மருந்து - அப்படிங்கிற மாதிரி எல்லாவற்றிற்கும் ஒரு கோயில் உண்டு.

ஜோதிடம் என்பது மனதிடம் இல்லாதவர்களிடம் நிறைய எடுபடும். பலவீனமான மனம் நம்ம கஷ்டம் எப்படா தீரும்னு நினைக்க அதுக்கு ஒரு இனிப்பு மிட்டாய் தந்து அழுகிற குழந்தைய அமைதி படுத்தும் நுட்பம்தான் ஜோதிடம். இல்லாவிட்டால் இந்தியாவில் புரட்சி வெடிச்சு இருக்கும் ?

"கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்" - இது ஜோதிட கொள்கை பரப்பு பாடல். நம்ம ஊர்ல கட்டம் சில ஊர்ல வட்டம்.

ஜோதிடம் படிச்சா தலையே சுத்துமுங்க ... சூரியன் சுத்துறான், பூமி சுத்துறான், அப்படியே தலை சுத்தும். அடிக்கடி இந்த ஆளுங்க வீடு வேற மாறிக்கிட்டே இருப்பாங்க.

இந்த  ஜோதிடங்களால் அரசாங்களுக்கு ஒரு நன்மையும், மக்களுக்கு ஒரு நன்மையும் (?) நடந்திருக்கு.

அரசாங்கங்களுக்கு பெரிசா புரட்சி ஏற்படாது. (ஏற்பட்டா  நசுக்கிட மாட்டார்கள்?)
தற்கொலைகள் ஜோ இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகரித்திருக்கும் ( மனச அப்ப அப்ப அமைதிபடுத்துறாங்க இல்ல ?)

ஜோவின் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம். நானும் ஜோவிடம் என்னைக்காவது போகலாம். அரசியல்வாதி பேச்சைகேட்டு மட்டும்தான் ஏமாறனுமா ?

ஜோ எப்பவுமே சிரிக்கும் . சில நேரம் கலகலன்னு. சில நேரம் லக்கலக்கன்னு. நாமதான் புலம்பணும்.

ஆமா ஜோவின் சேவகர்களே ....! இந்த முறை வோட்டு போட என்ன குடுப்பாங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். Ipod , iphone , Laptop ?

Comments

  1. ஹா ஹா செல்ல பேர் சூப்பர் :)

    ReplyDelete
  2. ஜோ எப்பவுமே சிரிக்கும் . சில நேரம் கலகலன்னு. சில நேரம் லக்கலக்கன்னு. நாமதான் புலம்பணும்.


    ...... எப்படிங்க..... ஜோவியலா, ஆழமான கருத்துக்களை அருமையாக சொல்லிட்டீங்க.... சூப்பர்!

    ReplyDelete
  3. ஜோ....பாத்தா யோசிப்பாங்க !

    ReplyDelete
  4. அரசாங்கங்களுக்கு பெரிசா புரட்சி ஏற்படாது. (ஏற்பட்டா நசுக்கிட மாட்டார்கள்?)
    தற்கொலைகள் ஜோ இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகரித்திருக்கும் ( மனச அப்ப அப்ப அமைதிபடுத்துறாங்க இல்ல ?)

    ஜோவின் ரசிகர்கள் கோவிக்க வேண்டாம். நானும் ஜோவிடம் என்னைக்காவது போகலாம். அரசியல்வாதி பேச்சைகேட்டு மட்டும்தான் ஏமாறனுமா ?//

    நல்லா கலக்கல எழுதுறீங்க மேல உள்ளவரிகளை மிக ரசித்தேன்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நன்றி
    @பிரசன்னா - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
    @சித்ரா மேடம் - உங்க அளவுக்கு இல்லை சிரியஸ்
    @வார்த்தை - உங்க ஸ்மைலிக்கு நன்றி
    @ஹேமா அக்கா - ஜோதிகா எல்லாம் நம்ம பதிவ படிப்பாங்களா என்ன ? படிச்சுட்டு காப்புரிமை எதுவும் கேட்டுரபோறாங்க ஆஆ..வ்வ்வ்! :))
    @சி. கருணாகரசு -உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நல்லா கலக்கல எழுதுறீங்க...

    ReplyDelete
  7. அப்பாடி ஒரு ஜோதிடத்திற்குள் இம்புட்டு இருக்கா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்