பழுப்பு மார்டின் லூதரும், கருப்பு காந்தியும்: தன் அறையில் திரு மார்டின் லூதர் கிங் |
உலகத்தின் தலைவர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்கள் படுகொலை செய்ய பட்டு உள்ளனர். இவர்களின் படுகொலைகளுக்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கும். சில காரணங்களா என்றும் தோன்றும் ?
காந்தியின் படுகொலைக்கு பின் சாட்சியம் அளித்த கொலையாளி நாதுராம் விநாயகம் கோட்சே - காந்தி இந்து மத தளங்களில் இஸ்லாமிய வாங்கு ஊத சொன்னத்து கூட தான் அவரை கொள்ள காரணம் என்று சொன்னான்.
மார்டின் லூதர் கிங் அவர்களை கொன்ற பொடித்திருடன் காரணம் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. கென்னடியின் கொலை அரசியல் கொலை என்றும் அதில் ஹைடி மற்றும் அமெரிக்காவின் தலைமைகள் பங்கு ஆற்றி இருக்கலாம் என்றும் சிலர் சொல்வது உண்டு.
ஹைடியின் அப்போதைய ஆட்சி கென்னடி கொலை தங்களின் வழிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று நினைத்தாம்.
கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகத்துடன் தொடர்வது லால் பகதுரின் மரணம்.
ராஜிவின் கொலை மர்மங்களின் முடிச்சாகவே இன்றும் உள்ளது. அது மர்மங்களின் அட்சய பாத்திரம்.
அதில் முழு உண்மை வெளிவந்து உள்ளதா என்று நம்மை குழப்பும் செய்திகள் ஏராளம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ரோய் என்ற பெருமைக்கு உரிய லார்ட் லூயி மவுண்ட் பட்டேர்ன் அவர்களின் படுகொலை தொடர்பிலும் கேள்விகள் உண்டு. மவுண்ட் பட்டேர்ன் தன்னுடைய மரணத்தை தானே தேடி கொண்டவர் என்பது இன்றும் ஆங்கில மனிதர்களின் கருத்து.
படுகொலைகளில் பெண்கள் அதிர்டசாலிகள் - அவர்கள் பெரும்பாலும் தப்பித்தே இருக்கிறார்கள். படுகொலையில் இருந்து தப்பிய மார்கெட் தட்சேர், சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் பற்றியும் கேள்விகள் ஆயிரம் இருக்கும்.
படுகொலையில் இறந்த இந்திரா அம்மையாரின் கடைசி நாட்களை பற்றி பதிவு செய்யும் திருமதி சோனியா - "இந்திராவிற்கு தான் படுகொலை செய்யப்படப்போவது தெரியும்" என்றே சொல்கிறார். எல்லோரும் அப்படியே பதிவு செய்கின்றனர்.
அபிரகம் லின்கானின் படுகொலை மக்கள் திரள் மிகுந்த இடத்தில் நடந்தும் கொலையாளி தப்பி ஓடுகிறான் அதுவும் ஒரு கால் உடைந்த நிலையில்.
கால் உடைந்த ஓட்டம் என்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் தங்களை காத்துக்கொள்ளவே விரும்பினாரோ. ஏன் கொலையாளி உடனடியாக அதே இடத்தில பிடிபடவில்லை ? என்று கேள்விகள் எழலாம்.
நான் படித்தவைகள் பற்றி பகர்கிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டவும்.
தொடரும்
good info
ReplyDeleteசிறப்பான பகிர்வு தல.. பார்த்து (பதிவ) சுட்டுட போறாங்க :)
ReplyDeleteநல்ல தொடக்கம், தொடருங்கள்
ReplyDeleteநல்ல பதிவு. இன்னும் சற்றே விரிவாக சொல்லி இருக்கலாமோ.
ReplyDeleteபுதுவிதமான பதிவு.உண்மையில் நல்லாருக்கு சி.கார்த்திக்.
ReplyDeleteநன்றி
ReplyDelete@கலாநேசன்
@பிரசன்னா -- அதுவும் இது சுடும் பதிவுதான் :))))
@அருண் பிரசாத்
@தமிழ் உதயம்
@ஹேமா
முதலில் எனக்கு திரட்டிகளின் பட்டியல் தந்தமைக்கு நன்றி.. தற்போது தான் வரலாற்றின் பக்கம் ஆர்வம் வந்திருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் வலைதளம் படிக்க கிடைத்திருப்பது ஒரு நல்ல co-incident என்றே நினைக்கிறேன். நல்ல அறிமுகம். தொடருங்கள்.. உங்கள் தளத்தை இப்போதைக்கு favoriteல் இணைத்துவைத்துள்ளேன். அவ்வப்போது படித்து கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் நேரம் கிடைத்தால் வாருங்கள்.. எனது முகவரி..
ReplyDeletehttp://naadodii.blogspot.com/
நன்றி.