தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Wednesday, July 14, 2010

தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுவி

நீண்ட நாட்களாக இந்த தேடல் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர்கள் பலர் "உங்கள் வலைப்பூ முகவரியை தாருங்கள்" - என்னும் தருணத்தில் "தரலாம்தான் ஆனால் என் வலைப்பூ தமிழில் இருக்கிறது" என்றவுடன். "நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது இல்லையா ?"
என்கிற கேள்வி வந்து விழும்.

"எழுதினேன். ஆனால் இப்போது இல்லை " - என்பது உண்டு.

அவர்கள் என் எழுத்துக்களை படிக்க விரும்புகிறார்கள். மற்ற மொழி நண்பர்கள் அவர்கள்.

இந்தி மொழியில் எழுதினால் கூகிள் ஆண்டவர் வரம் தருகிறார் - மொழி பெயர்த்துக்கொள் என்று. அதற்கு ஒரு சிறுவி ( widget ) அல்லது ஒரு கருவி ( tool ) இருக்கு. தமிழில் இல்லை.

இந்தியாவின் ஒரே வாழும் செம்மொழி நொண்டுகிறது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் சிருவியோ கருவியோ வர நாம் செய்ய என்ன வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே சில பல்கலை கழகங்கள் முயன்று உள்ளன. ஆனால் இனைய வெளியில் பயன்பாட்டிற்கு என்று ஒன்றும் இல்லை.

பல நண்பர்களின் தமிழில் எழுத்தப்பட்ட கருத்துக்கள் மனித முயற்சி இன்றி வேற்று மொழி நண்பர்களுக்கு புரிய வைக்கும் சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன்.

தமிழ் மொழி பெயர்ப்பு கருவிக்கு தமிழக அரசோ, இந்திய அரசோ, சிங்கை போன்ற அரசுகளோ, தமிழ் ஆர்வலர்களோ, தமிழ் கணிப்பொறி நண்பர்களோ இதுவரை செய்தவை எதுவும் உள்ளனவா என்று தெரியவில்லை.

இணைத்தில் இது தேவை என்று நான் உணர்கிறேன். தமிழில் செய்தி திரட்டிகள், வலைப்பூ திரட்டிகள் என நிறைய படிக்க வழி அமைத்தபின்னும் தமிழ் வேற்று மொழியாளர்களை சென்றடைய வழி வரவேண்டும்.

தமிழ் கல்வி மற்ற மொழியாளர்களுக்கு கற்பிக்கப்படல் அதிகரிக்கபடவேண்டும். தமிழ் பரப்பு கழகங்கள் உருவாக்கபடவேண்டும்.

இந்தி மொழியாளர்கள் பிரசார சபா என்று ஒன்று வைத்து உள்ளார்கள். அதை பாராட்ட வேண்டும். அது அவர்கள் மொழி மீது அவர்கள் கொண்ட பற்று. தமிழ் மண்ணிற்கு இந்தி பயன்பாடு அவசியம் இல்லை என்பது வேறு கதை.

எழுத்துக்களின் பயன்பாடே இல்லாத சௌராஸ்டிரம் போன்ற மொழிகளை தமிழ் மண் இன்னும் காத்து வரும்போது. தமிழை விடலாம் ?

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். என்ன செயலாம் தமிழ் மொழி பெயர்ப்பு கருவியோ சிருவியோ செய்ய ? மற்றவர்களிடம் விவாதியுங்கள். இந்த பதிவை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்.

நன்றிகளுடன்
கார்த்திக் சிதம்பரம்

7 மறுமொழிகள்:

சந்ரு said...

நானும் இப்படி ஒன்று இருந்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். நானறிந்தவரை இதுவரை இல்லையா? அல்லது எனக்கு கிடைக்கவில்லையோ தெரியவில்லை.

உங்கள் ஆதங்கமே. என் ஆதங்கமும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..

Robin said...

இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

Karthick Chidambaram said...

உங்கள் வலைப்பூவை பார்த்தேன். தங்களுடன் தங்கள் ஆய்வில் இணைந்து கொள்ள விரும்புகிறேன் ராபின். நன்றிகள்.

Karthick Chidambaram said...

நண்பர் ராபினை தெரிந்துகொள்ளுங்கள்.
http://language.worldofcomputing.net/machine-translation/challenges-in-machine-translation.ஹ்த்ம்ல்
ஆங்கிலத்தில் நண்பர் அழகாக சில விசயங்களை எழுதி உள்ளார்.

இன்னும் படிப்பேன் ராபின்.

ஹேமா said...

உபயோகமான தேடல்.

கோவி.கண்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..
//

வழிமொழிகிறேன்

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை