சில சமயங்களில் நான் பெருமையோடு பார்க்கும் விடயம் தமிழில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் தமிழாக்க வார்த்தைகள்.
HOME என்று ஆங்கில இணையதளங்களில் இருந்த வார்த்தை தமிழுக்கு வந்த பொது முகப்பு ஆனது. அருமையான கண்டுபிடிப்பு.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த வார்த்தை ஒரு வகுப்பினரிடம் அன்றாட புழக்கம்.
ஈமெயில் - மின்னஞ்சல் ஆனது.
Chat - என்பது அரட்டை / இனைய அரட்டை.
டவுன்லோட் - தரவிறக்கம் / தகவிறக்கம் ஆனது
இந்த சூழ்நிலையில்தான் கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் தமிழ் சார்ந்த அரசுத்துறையில் தமிழ் ஆட்சி மொழிக்காக வார்த்தை உருவாக்கும் போது - நிகழ்ந்த ஒன்றை அறிந்தேன். அதில் நீர் வீழ்ச்சி என்று வார்த்தை அவர்கள் குழுவின் காரணமாக உருவாக்கப்பட்டதாகவும் - பின்னர்தான் அவர்கள் அந்த வார்த்தை என்பது ஏற்கனவே தமிழில் அருவி என்று இருப்பது தெரியவந்ததாகவும் பதிகிறார்.
நாம் பல வார்த்தைகளை இலக்கியத்திலும் வரலாற்றிலும் வைத்து விட்டு, புதிதாக சில வார்த்தைகளை கண்டு வருகிறோமோ ?
திரு பழமைபேசி அவர்களின் தளத்தில் சில வார்த்தைகளை அறிந்து வருவது உண்டு.
MUTE - மௌனப்படுத்தல் , அமைத்திபடுத்தல் என்கிற வார்த்தைக்கு மூகாத்தல் சரியாக இருக்கலாம்
பிளாஸ்மா panel , LCD டிவி - இதற்கு எல்லாம் ஏதாவது வார்த்தை இருக்கா ? .... இல்லை நீங்கள் கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் ?
GADGET, WIDGET ( சிறுவி என்று நான் பதிவில் விழித்திருந்தேன் ), ரிங்க்டோன் ( மணி ஓசையா ? ), GPS ( இது அமெரிக்க வாழ் தமிழர்களின் தேவை ) - இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம் ?
உங்களால் முடிந்த வார்த்தைகளை ஆராய்ந்து இங்கே பின்னூட்டமாய் கொட்டுங்கள். பார்ப்போம். நான் கொடுத்த வார்த்தைகள் மட்டும் அல்ல புதிய வார்த்தைகளும் வரவேற்க்கபடுகின்றன.
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
நன்றிகளுடன்,
கார்த்திக் சிதம்பரம்

உங்கள் பின்னால் இருந்த பேரை வைத்தே யூகித்தேன். நீங்களும் காரைக்குடியாய்த் தான் இருக்க வேண்டும் என்று.
ReplyDeleteசரிதானே?
நானும் பழமைபேசி மூலமாகத்தான் சில விடங்களை கற்றுவருகின்றேன் கார்த்திக்.
//ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
ReplyDeleteதமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
//
உண்மை உண்மை..
இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம்னு யோசிச்சிட்டு வரேன் :)
தேடல் தேடல் தேடல்.ஆனால் ஒன்று... பேசும்போதும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தணும்.உதாரணத்திற்க்கு உணவகம்,
ReplyDeleteமகிழூந்தி என்கிறோம்.பேசும்போது பயன்படுத்த வரமாட்டேன் என்கிறதே !
@ஹேமா -
ReplyDeleteநீங்க சொல்றது எல்லாம் நகரத்திலும் அயல்நாட்டிளும்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
மதுரைக்கு நான் புதிது அந்த சமயத்தில். மிதிவண்டி puncher ( பாருங்க இது கூட தமிழில் வரமாட்டேங்குது) ஆகிடுச்சு.
நேரா போய் ஒரு கடையில் விட்டேன். அங்கே ஒரு நபர்தான் இருந்தார். அவருடைய உதவியாளர் இல்லை.
அவர் வண்டியை சரி செய்ய ஆரம்பித்தார். ஒரு இடத்தில் என்னை திரும்பி பார்த்து.
"தம்பி அந்த திருப்புலிய எடுங்க" என்றார்.
எனக்கு புரியவில்லை. பின்னர்தான் தெரியும் அது - Screw டிரைவர் என்று.
சிலி என்கிற நாட்டில் இருந்து மிளகாய் வந்த போது - அதை சில்லி என்றே படித்தவன் அழைக்க தொழில் செய்யும் மனிதர்கள் "மிளகாய்" என்றனர். நாம் இந்த உழைக்கும் மக்களின் தமிழ் உணர்வை பெறவேண்டும். அதைவிடுத்து அவர்களின் தமிழ் உணர்வும் நிறையவே கெடுகிறது நம்மால்.
நீங்கள் ஊகித்தது ஓரளவுக்கு சரிதான் ஜோதிஜி.
ReplyDeleteseekkiram vaarththaigalodu vaanga Prassanna
ReplyDelete//GPS //
ReplyDeletehttp://maniyinpakkam.blogspot.com/2009/10/blog-post_22.html
இடநியசு - GPS
ReplyDeleteமிக்க நன்றி பழமைபேசி. இந்த பதிவை நான் படிக்க விட்டு இருந்தேன். சுட்டி தந்தமைக்கு நன்றி.
//Chat //
ReplyDeletehttp://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_07.html