Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 11

என் துப்பாக்கியின் குழல் ஒரு வெறியுடன் மாடசாமியை தேட ... அங்கே இருந்தது ஒரு டேப் ரெகார்டர்.

அவன் பேச தொடங்கினான். இவன் என்ன குடியரசு தலைவரா என்ன ? இந்த டேப் ரேகோர்டேரை இங்கே எங்களிடம் மரணம் அடைந்த ஒரு பழங்குடியினன் தான் போட்டிருக்க வேண்டும்.

நாங்கள் டேப் ரேகோர்டேரை எடுத்து எங்கள் குடிலுக்குள் போட்டு கேட்டோம்.

"நாந்தேன் மாடசாமி பேசுறேன். கும்பிடுறேங்க. நீங்க எல்லாரும்  பெரிய பெரிய துப்பாக்கியோட குண்டோட என்ன பிடிக்க வந்திருப்பீங்க.
நீங்க புதுசு. அதுனால  எங்க போராட்டத்த பத்தி சொல்லுதேன். உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும் இருந்தாலும்.

நாங்க தாயா நெனச்ச மலைல ஏதோ கனிம வளம் - ஏதோ குந்தனைத் அப்படினாக. அது இருக்குன்னு யாரோ சில பேரு கண்டுபிடிச்சு அரசாங்கத்துக்கு சொன்னாங்க. அரசாங்கம்  வெளிநாட்டுகாரங்களுக்கு  சொன்னுச்சு.

வந்தாக படிச்சவுக. ஏதோ எங்க நிலத்த எல்லாம் தரனும்னாக. முதல்ல அடிவாரத்துல ஆரம்பிச்சுது இந்த கூத்து. அஞ்சு வருஷம் ஆச்சு நெலத்த குடுத்தவுகளுக்கு பணமும் வரல வேலை வெட்டியும் வரல. அப்புறம் எங்க ஆளுக எல்லாம் இனிமே நெலத்த தரமுடியாதுன்னு சொன்னாக. நான் கிராமதலைவன்கிற   மொறைல அவுகளுக்கா அரசாங்கத்துகிட்ட மனு கொடுத்தா...  எங்கள தாக்க ஆரம்பிச்சாக. இந்த நதில போனம் விழுந்துச்சு. இந்த நேரத்துல தான் இந்த கனிமவள தொண்டால் ஒரு அம்பது வருசத்துல முடிஞ்சா அப்புறம் இங்க ஒரு புல்லும் பூண்டும் மொளைக்கதுன்னு தெரியவந்துச்சு. ஏங்க இந்த மலைய மலடி ஆக்கனுமாங்க ?

அப்புறம் எங்கள சட்ட விரோதினாக. இப்ப எங்க பொண்டு புள்ளைகள  தொட அரம்பிச்சுடாக. எங்க கூட்டத்துல ஒருத்தி அவள .... அந்த நாலு பயலுகளையும் ஒப்படைச்சுட்டு ஒங்க வீட்டுக்கார அம்மாவ கூட்டிட்டு  போங்க. நீங்க அந்த நாலு பேரையும் ஒன்னும் பன்னமாட்டீக. உங்க மேல எங்களுக்கு நம்பிக்க இல்ல. இந்த மலைய காப்பதுறதுல எங்க உசிரு போனாலும் பரவ இல்ல சாமி"

அந்த சட்ட விரோதி நியாயம் பேசுகிறான். இவனை எல்லாம் பேச விடுறதே தப்பு. அரசாங்கம் எங்களை இங்கே அனுப்பி உள்ளது இவனை பிடிக்கத்தான். இவன் பக்கத்தில் இருப்பவர்கள் இவனால்தான் பாதிக்கபடுகிறார்கள்.

நான் டேப் ரேகோர்டேரை அமைத்தி படுத்திவிட்டு இளைய பெருமாளை பார்த்தேன்.

"ஒப்படச்சுடுலாமா சார்  ?"
நான் பெருமாளின் கண்ணை பார்த்தேன். அவன் குடிலுக்குள் குனித்து நின்று என் வாயை பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் எங்கள் படையை பார்த்தேன்.
ஒரு பெண்ணை தொடுவது குற்றம். குழந்தையை கொல்வது குற்றம்; பாவம். எல்லாம் உண்மைதான்.
ஆனால் மாடசாமி  யார் நீதிபதியா ?

யுத்தம் என்று வந்து விட்டால் அதில் நியாயம் அநியாயம் பார்க்க முடியாது.

நான் எதுவும் சொல்லாமல் குடிலுக்கு வெளியில் வந்தேன். அப்போது அந்த பறவை ஒரு குன்றின் மீது பறந்து கொண்டிருந்தது.

எங்கள் அதிரடி படையில் இருந்தவன் ஒருவன் என் அருகில் வந்து சல்யுட் அடித்தான்.

அந்த பறவை பறப்பத்தை காட்டினான்.  நான் என் மோவாய் தடவிக்கொண்டே பார்த்தேன்.

அதில் எனக்கு ஒன்றும் புதிதாய் தெரியவில்லை.

என் காதுக்குள் அவன் சொல்ல ஆரம்பித்தான்.
அது ....

தொடரும்

Comments

  1. Can you include the blog archives link to your blog page too?

    I was away for few days and looks like, I missed a part of the story. :-(

    ReplyDelete
  2. The Blog archive was in my home page. Now It is in right hand side. You can see. Thanks for reading.

    ReplyDelete
  3. Thodarnthu padiyungal Thangamani theriyum.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர