சில நாட்களுக்கு முன்னாள் நான் பார்வை இடும் பதிவுகளில் தெரிந்த அந்த அரசபறவையின் பார்வை, என் பார்வையை இழுத்தது.
கருப்பு மேனியும் கருத்து வேகமுமாய்; கருப்பு விழியும் அதில் பொறுப்பு வழியும் பார்வையும்; வெள்ளி தலையும் சொல்லில் புரட்சி நிலையும் என்று அது ஒரு புரட்சி சின்னம். அமெரிக்காவிற்கும் அதுதான் சின்னம் என்பது வேறு கதை.
நண்பர் தேவா, தம்பிகள் சௌந்தர், விஜய் ஆகியோரின் கருத்து களம் என்று அறிகிறேன்.
இப்படி ஒரு கருத்து களம் உருபெற்று உள்ளத்தில் மகிழ்ச்சியே! தொடர்ந்து நடத்துவோம் என்கிற வெறியோடு கூடிய பொறுப்புணர்வு தேவை என்பதை நண்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.
தமிழ் நாட்டின் இருகட்சி ஆட்சி முறை பற்றி ஒரு விவாதத்தை அவர்கள் வெளி இட்டு உள்ளனர். வரவேற்கவேண்டிய முயற்சி.
என்னோடு இணைந்து கொள்ளுங்கள் அவர்களை வாழ்த்துவதில்.
அவர்களின் வலை பூவை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைப்பு தரலாம் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.
வாழ்த்துகிறேன் - நல்ல பதில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்கிற ஆசையுடன். மொக்கைகளை உங்கள் பதிவுகளில் வைத்துக்கொள்ளுங்கள். கழுகை பறக்கவிடுங்கள்.
http://kazhuhu.blogspot.com/
நண்பர்களின் இந்த கழுகு தளத்தை இன்றுதான் பார்த்தேன்.
ReplyDeleteபுதிய முயற்சி.வாழ்த்துகிறேன்.
புரட்சியாளர்கள் மூவரும் வாழ்க வளர்க.
ReplyDeleteஅருமையா சமூக அக்கறையோட எழுதுறாங்க.
நாங்கள் இன்னும் பல முயற்சிகளை செய்ய இருக்கிறோம் உங்கள் வாழ்த்துகளுடன்.
ReplyDeleteநன்றி....நன்றி....
தோழர் கார்த்திக் சிதம்பரம்.......
ReplyDeleteமகிழ்வோடு ஆரத்தழுவி உங்களின் கட்டுரைக்கு நனாறி பகிரும் அதே நேரத்தில் கழுகு நமது அனைவரின் தளம்தான் என்பதனையும் பதிய விழைகிறேன்.
சமுதாயத்தின் மீது ஈடு பாடும், அ நீதிகளின் மீது வெறுப்பும், சத்தியத்தின் மீது ஈடுபாடும், சமூக பிரஞையும், விசாலமான பார்வையும், எல்லா நிறங்களையும் தாண்டியா எண்ணமும், குறிப்பாக நமது காலத்தில் இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் நமது தலைமுறைக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவரும்.........கழுகின் அங்கங்களே.....
" ஏகாத்தியபத்தியத்துகு எதிராய் எந்த மூளை சிந்தித்தாலும் அவன் எமது தோழனே" என்று அறைகூவல் விடுத்த சேகுவராபோல....
நாம் அனைவரின் கருத்துக்களும் சமுதாய சீர்திருத்தவும், மனித நேயத்தை வளர்ப்பதாகவும் இருந்தால் நாம் தோழர்களே....!
கருத்துக்களின் களம்..! ஆரோக்கிய விவாதங்கள் மூலம் உண்மை எட்ட ஒரு முயற்சி......எட்ட எட்ட பறந்தாலும்.....அடையப் போகும் பொருளின் மீது வைக்கும் தீர்க்கமான பார்வை...
இது தன் கழுகு!
மிக்க நன்றி கார்த்தி சிதம்பரம்....! நீங்களும் கழுகுதான்!
மிக்க நன்றி கார்த்திக்,
ReplyDeleteஉங்களுடைய வளைய தளத்தில் கழுகை பற்றி நல்லதொரு மதிப்பை கொடுத்தற்கு,
நான், சௌந்தர்,விஜய் சேர்ந்து ஆரம்பித்தது இப்பொழுது உங்களை போன்றோரின் நல் அறிவு சார் மனிதர்களோடு கைகோர்த்து அழகாய் வட்டமிட்டு , இந்த சமுதாதயத்துக்கு தேவையான விவாதங்களையும், புரட்சிகளையும், சிறந்த தகவல்களையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது,