Skip to main content

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 8

ரும் பாறை கருனைன்றி என் கண்களுக்கு முன்னால். அதில் அந்த சேலை தலைப்பு ரத்தக்கறையுடன். என் இதயம் என்னிடம் இல்லை. மெல்ல அதன் அருகில் சென்றேன் சேலை தலைப்பை எடுத்தேன்.
"மாட.....சாமி......" - நான் அலறினேன்.

காடு முழுக்க அது எதிரொலித்தது. நெஞ்சு வெடிக்க கதிரினேன். என் கை துப்பாக்கியை எடுத்து வானம் நோக்கி சுட்டேன். வேறு என்ன செய்ய முடியும் அருகில் இருப்பவர்கள் எல்லாம் எங்களவர்கள்.

எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் அதிர்ச்சி இருந்தது.

என்னை விட அவர்கள் எல்லோரும் ஒரு அடி தள்ளியே இருந்தனர். நான் அங்கு வேதனையின் வலியில் துக்கத்தின் விழிம்பில் நின்று கொண்டிருந்தேன். என் கால்கள் வலு இழந்துகொண்டிருந்தன.

நான் அந்த கரும்பாரையில் அவளுடைய சேலை தலைப்புடன் அமர்ந்தேன். அருவி என் கன்னத்தில் அறைந்தது. இந்த நதி அவளுக்கு நடந்த கொடுமையை பார்த்திருக்கும்.

நான் கண்களில் வைத்துக்கொண்டேன் அந்த சேலை தலைப்பை. வானத்தை பார்த்தேன். சூரியன் உச்சியில் இருந்தான்.நெஞ்சுக்குழிக்குள் அந்த நினைவுகள் விழுந்தன. அவளை நான் முதன் முதலில் பார்த்த நாள்.

எங்கள் திருமணம் ஒரு நிச்சயக்கப்பட்ட திருமணம். அவளை நான் பார்த்த நாளில் திருமணம் மட்டும் அல்ல காதலும் நிச்சயம் ஆனது.
அவள் முகத்தில் விழும் அந்த சுருள் முடி என் நெஞ்சில் விழும்போது சொர்க்கம் அருகில் இருக்கும் இன்பம் இதயத்தில் நிற்கும்.

என் அருகில் அவள் இருந்தால் - அவள் விழியில் நான் இருந்தால் அது சொர்க்கம்.

இளையபெருமாள் ஓடி வந்தார்.

என் தோள்களை பிடித்தார்.
"சார்"

நான் நிமிர்ந்து பார்த்தேன். எங்கள் வீரர்கள் துப்பாகிகளை கையில் வலுவாக பிடித்திருந்தனர். அவர்கள் தேட தயாராக இருந்தனர். என் கையில் அந்த சேலை தலைப்பை கட்டிக்கொண்டேன். ரணத்தை கீறி விட்டால்தான் எதிரியின் பிணத்தை பார்க்க முடியும். எந்த நிலையிலும் நாம் போரிடுவதில் பின் வாங்க கூடாது.

எங்கள் வீரர்கள் என் அருகில் வந்தனர். நான் அவர்களை பார்த்தேன். எழுந்து நின்றேன். எங்கள் பூட்ஸ்கள் தடதடத்தன. எங்கள் பயணம் மீண்டும் ஆரம்பம் ஆனது.

என் விழிகளுக்குள்ளும்  நெஞ்சுக்குள்ளும் வெறி கொடினாட்டியது. என் கண்கள் சிவந்தன. மாடசாமியை எப்படியும் பிடித்தே ஆகவேண்டும்.
தீர்மானத்துடன் நடந்தேன்.

நான் முன்னேறி நடக்கும் போதுதான் எனக்கு அந்த சந்தேகம் வலுத்தது. அந்த கபடம் உள்ள கண்கள் என் முதுகுக்கு பின்னால் இருந்து என்னை பார்த்து கொண்டிருந்தன. என் படையில் இப்படி ஒருவன் எப்படி ?

என் படைக்குள் இருந்த அவனை தரதறேவென இழுத்தேன். என் கை துப்பாக்கியை அவன் வாய்க்குள் வைத்தேன். எல்லோரும் பயத்துடன் பார்த்தனர்.

"சொல்லு" - என் டிரிகரை அழுத்தினேன். அவன் கண்களில் சாவு பயம் இருந்தது.

அவன் நெஞ்சுக்கு நடுவில் கை வைத்து கும்பிட்டான்.
எங்கள் ஜீப்புகள் கிளம்பின. மாடசாமி எங்கள் வலைக்குள் வந்து விட்டான்

தொடரும்

Comments

  1. "காக்க .... காக்க......" படத்தில வர சூர்யா - ஜோதிகா - எல்லாம் இந்த தொடர் கதை ல வர கேரக்டர்களுக்கு முகம் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க..... ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  2. கதையைக் கொஞ்சம் தனித்துவமான நடையில் எழுதினால் நன்றாக இருக்கும் தோழா! வாழ்த்துக்கள் உங்களின் முயற்சிக்கு.

    ReplyDelete
  3. சித்ரா - இது வேற கதை.
    நண்பர் தமிழ் மதுரம் அவர்களே ... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் கார்த்திக் சிதம்பரம்.ஒரே மூச்சில் உங்கள் தொடர் வாசித்தேன்.முயற்சியின் வேகம் அபாரம்.நடு நடுவில் சொல்லும் வேகம் முறிவதுபோலவும் இருக்கு.ஆனாலும் தொற்றிக்கொள்கிறீர்கள்.அழகுதான்.அதெல்லாம் பெரிய விஷயமில்லை.சரியாயிடும்.கதை சுவாரஸ்யமா இருக்கு.சித்ராவுக்கு சூர்யா-ஜோ தெரியிற மாதிரி எனக்கு எட்டப்பன் கருணா
    தெரியிற மாதிரி இருக்கு.தொடருங்கள்.

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கு நன்றி ஹேமா. நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  6. காக்க காக்க மாதிரி செம த்ரிலிங்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

இந்தியாவிற்கு என்று ஒரு பணக்குறியீடு: வல்லரசு விளையாட்டு

திரு கோவி கண்ணன் அவர்களின் பதிவு வாயிலாகவே இதை முதலில் அறிந்தேன். இந்திய நிலம் கொஞ்சம் காலமாகவே ஒரு வார்த்தைக்கு ஆயத்த படுத்தபடுகிறது;கனவு காண உந்தபடுகிறது; பெருமைபட நினைக்கிறது. அந்த வார்த்தை வல்லரசு. வல்லரசு என்கிற வார்த்தையின் போதையை நம் ஆட்சியாளர்கள், ஊடகங்கள் தங்களால் இயன்றவரை ஊட்ட முயல்கின்றன. வல்லரசாக இந்திய மண் மாறுவதில் நிறைய உள்ளங்களில் மகிழ்ச்சி இருக்கிறது. ஐ நா மன்றத்தில் இந்திய அரசு தனுக்கென ஒரு நிரந்தர இருக்கை நாடுகிறது.ஆயுதம் விற்பதில் நாமும் குத்தித்து விட்டோம். தென் ஆசிய பகுதியில் தன் அதிகாரத்தை நிலை நாட்ட இந்திய அதிகாரம் நினைக்கிறது. பொருளாதாரம், ஆயுத ஆற்றல், அரசியல் அதிகாரம் என்று எல்லா முனைகளிலும் தன்னை முன்னிருத்திகொள்ளும் முயற்சியில் இந்திய அதிகார நிலைகள் முனைப்புடன் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் உலகத்தின் ஒரு முதன்மையான சந்தை என்கிற நிலையை இந்தியா அடைய முயன்று ஓரளவுக்கு வெற்றியும் கண்டு உள்ளது. உற்பத்தி துறையிலும் அதன் கவனம் நன்றாகவே உள்ளது. பொருளாதாரத்தில்தான் சில நேரங்களில் ஏற்கனவே வளர்ந்த நாடுகளின் வல்லரசுகளின் வணிக முறையை கொஞ்சமும் கூச்சம் இன்