Skip to main content

தமிழ் வளர்ப்போம் வாருங்கள்!

சில சமயங்களில் நான் பெருமையோடு பார்க்கும் விடயம் தமிழில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் தமிழாக்க வார்த்தைகள்.

HOME என்று ஆங்கில இணையதளங்களில் இருந்த வார்த்தை தமிழுக்கு வந்த பொது முகப்பு ஆனது. அருமையான கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் இந்த வார்த்தை ஒரு வகுப்பினரிடம் அன்றாட புழக்கம்.

ஈமெயில் - மின்னஞ்சல் ஆனது.
Chat - என்பது அரட்டை / இனைய அரட்டை.
டவுன்லோட் - தரவிறக்கம் / தகவிறக்கம் ஆனது

இந்த சூழ்நிலையில்தான் கவிஞர் திரு வைரமுத்து அவர்கள் தமிழ் சார்ந்த அரசுத்துறையில் தமிழ் ஆட்சி மொழிக்காக வார்த்தை உருவாக்கும் போது - நிகழ்ந்த ஒன்றை அறிந்தேன். அதில் நீர் வீழ்ச்சி என்று வார்த்தை அவர்கள் குழுவின் காரணமாக உருவாக்கப்பட்டதாகவும் - பின்னர்தான் அவர்கள் அந்த வார்த்தை என்பது ஏற்கனவே தமிழில் அருவி என்று இருப்பது தெரியவந்ததாகவும் பதிகிறார்.

நாம் பல வார்த்தைகளை இலக்கியத்திலும் வரலாற்றிலும் வைத்து விட்டு, புதிதாக சில வார்த்தைகளை கண்டு வருகிறோமோ ?

திரு பழமைபேசி அவர்களின் தளத்தில் சில வார்த்தைகளை அறிந்து வருவது உண்டு.
MUTE - மௌனப்படுத்தல் , அமைத்திபடுத்தல் என்கிற வார்த்தைக்கு மூகாத்தல் சரியாக இருக்கலாம்
பிளாஸ்மா panel , LCD டிவி - இதற்கு எல்லாம் ஏதாவது வார்த்தை இருக்கா ? .... இல்லை நீங்கள் கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் ?
GADGET, WIDGET ( சிறுவி என்று நான் பதிவில் விழித்திருந்தேன் ), ரிங்க்டோன் ( மணி ஓசையா ? ), GPS ( இது அமெரிக்க வாழ் தமிழர்களின் தேவை ) - இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம் ?

உங்களால் முடிந்த வார்த்தைகளை ஆராய்ந்து இங்கே பின்னூட்டமாய் கொட்டுங்கள். பார்ப்போம். நான் கொடுத்த வார்த்தைகள் மட்டும் அல்ல புதிய வார்த்தைகளும் வரவேற்க்கபடுகின்றன.

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.

நன்றிகளுடன்,
கார்த்திக் சிதம்பரம்

Comments

  1. உங்கள் பின்னால் இருந்த பேரை வைத்தே யூகித்தேன். நீங்களும் காரைக்குடியாய்த் தான் இருக்க வேண்டும் என்று.

    சரிதானே?

    நானும் பழமைபேசி மூலமாகத்தான் சில விடங்களை கற்றுவருகின்றேன் கார்த்திக்.

    ReplyDelete
  2. //ஆளும் வளரனும் அறிவும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
    தமிழனும் வளரனும் தமிழும் வளரனும் - அதுதாங்க வளர்ச்சி.
    //

    உண்மை உண்மை..

    இதெல்லாம் எப்படி தமிழ் படுத்தலாம்னு யோசிச்சிட்டு வரேன் :)

    ReplyDelete
  3. தேடல் தேடல் தேடல்.ஆனால் ஒன்று... பேசும்போதும் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தணும்.உதாரணத்திற்க்கு உணவகம்,
    மகிழூந்தி என்கிறோம்.பேசும்போது பயன்படுத்த வரமாட்டேன் என்கிறதே !

    ReplyDelete
  4. @ஹேமா -
    நீங்க சொல்றது எல்லாம் நகரத்திலும் அயல்நாட்டிளும்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.
    மதுரைக்கு நான் புதிது அந்த சமயத்தில். மிதிவண்டி puncher ( பாருங்க இது கூட தமிழில் வரமாட்டேங்குது) ஆகிடுச்சு.
    நேரா போய் ஒரு கடையில் விட்டேன். அங்கே ஒரு நபர்தான் இருந்தார். அவருடைய உதவியாளர் இல்லை.

    அவர் வண்டியை சரி செய்ய ஆரம்பித்தார். ஒரு இடத்தில் என்னை திரும்பி பார்த்து.
    "தம்பி அந்த திருப்புலிய எடுங்க" என்றார்.

    எனக்கு புரியவில்லை. பின்னர்தான் தெரியும் அது - Screw டிரைவர் என்று.
    சிலி என்கிற நாட்டில் இருந்து மிளகாய் வந்த போது - அதை சில்லி என்றே படித்தவன் அழைக்க தொழில் செய்யும் மனிதர்கள் "மிளகாய்" என்றனர். நாம் இந்த உழைக்கும் மக்களின் தமிழ் உணர்வை பெறவேண்டும். அதைவிடுத்து அவர்களின் தமிழ் உணர்வும் நிறையவே கெடுகிறது நம்மால்.

    ReplyDelete
  5. நீங்கள் ஊகித்தது ஓரளவுக்கு சரிதான் ஜோதிஜி.

    ReplyDelete
  6. seekkiram vaarththaigalodu vaanga Prassanna

    ReplyDelete
  7. //GPS //

    http://maniyinpakkam.blogspot.com/2009/10/blog-post_22.html

    ReplyDelete
  8. இடநியசு - GPS

    மிக்க நன்றி பழமைபேசி. இந்த பதிவை நான் படிக்க விட்டு இருந்தேன். சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. //Chat //

    http://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_07.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது.  தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு.  இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை  தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.  புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது.  இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது எ...