க ரும் பாறை கருனைன்றி என் கண்களுக்கு முன்னால். அதில் அந்த சேலை தலைப்பு ரத்தக்கறையுடன். என் இதயம் என்னிடம் இல்லை. மெல்ல அதன் அருகில் சென்றேன் சேலை தலைப்பை எடுத்தேன். "மாட.....சாமி......" - நான் அலறினேன். காடு முழுக்க அது எதிரொலித்தது. நெஞ்சு வெடிக்க கதிரினேன். என் கை துப்பாக்கியை எடுத்து வானம் நோக்கி சுட்டேன். வேறு என்ன செய்ய முடியும் அருகில் இருப்பவர்கள் எல்லாம் எங்களவர்கள். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் அதிர்ச்சி இருந்தது. என்னை விட அவர்கள் எல்லோரும் ஒரு அடி தள்ளியே இருந்தனர். நான் அங்கு வேதனையின் வலியில் துக்கத்தின் விழிம்பில் நின்று கொண்டிருந்தேன். என் கால்கள் வலு இழந்துகொண்டிருந்தன. நான் அந்த கரும்பாரையில் அவளுடைய சேலை தலைப்புடன் அமர்ந்தேன். அருவி என் கன்னத்தில் அறைந்தது. இந்த நதி அவளுக்கு நடந்த கொடுமையை பார்த்திருக்கும். நான் கண்களில் வைத்துக்கொண்டேன் அந்த சேலை தலைப்பை. வானத்தை பார்த்தேன். சூரியன் உச்சியில் இருந்தான்.நெஞ்சுக்குழிக்குள் அந்த நினைவுகள் விழுந்தன. அவளை நான் முதன் முதலில் பார்த்த நாள். எங்கள் திருமணம் ஒரு நிச்சயக்க...