Skip to main content

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம்.
"என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம்.

இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது.

மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல.

அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம்.

விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவதை தடுக்க முடியாது. அடப்பாவிகளா! சென்னையை இப்படி கெடுத்தீடங்கலேன்னு ஒரு புரட்சியும் வரப்போரத்தில்லை, இப்படி கெடுத்துடோமேன்னு ஒரு ஆதங்கமும் வந்து திருந்தப்போறதும் இல்லை. கூவத்தில் வழக்கம் போல குப்பை விழத்தான் போகுது.

அரசாங்கத்தின் மெத்தனம் என்று விடுதலைக்கு பின்னைய ஆட்சிகளை குறை சொல்லப்போவதில்லை. யாரும் எதுவும் மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

சென்னையில் ஏன் இந்த மக்கள் நெருக்கடி - இரண்டாம் தர நகரங்கள் தமிழ் மண்ணில் ஏன் முன்னேற்றபடவில்லை? இந்த கேள்வி படம் பார்ப்பவர்களின் இதயத்தில் எழுந்து உள்ளதா என்று தெரியவில்லை.

திரையில் கூட நகரம் என்றால் சென்னைதான் ரொம்ப காலமாய். இப்போதுகூட மதுரை அரிவாள் தூக்கும் பெரிய கிராமம் அவ்வளவுதான்.
திருநெல்வேலியும் இப்படிதான். தஞ்சையை மையமாக வைத்து அல்லது கதைகலனாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கா ? இது பெரும்பான்மை தமிழ் நகரங்களின் நிலை. நகரம் என்றால் சென்னை. மாநகரம் என்றாலும் சென்னைதான். அதில் இருந்து மக்களும் மாறவில்லை - ஆட்சிகளும் மாறவில்லை. பெல் திருச்சிக்கு வந்தது என்றால் அது தெளிவான சிந்தனை.

கூவம் எப்படி இப்படி ஆச்சு ? தண்ணீர் வளம் இப்படி எப்படி ஆனது ? ஏதாவது ஆய்வு நடக்க போவதில்லை. தமிழ் மண்ணில் மீண்டும் நீர் மேலாண்மை வந்துவிடப்போவதில்லை.


மீண்டும் வைகை கதைக்கு வருகிறேன். கலைவாணர் சொன்னது ரெண்டு நாளில் நடந்தது. மதுரை வெள்ளத்தில் மூழ்கியது.கலைவாணரை போல நாமும் நம்பிக்கையை விதைப்போம். சென்னை மீண்டும் நலம்பெற. இந்த முறை அந்த நம்பிக்கை விதை விருட்சமாகட்டும்.

டிஸ்கி: நான் இன்னும் மதராசபட்டினம் பார்க்கவில்லை

Comments

  1. ரொம்ப கடினம் என்றாலும் நம்பிக்கையோடு இருப்போம் சுத்தமான நதியை காண.. டிஸ்கியில் என்ன ஒரு திருப்பம் :)

    ReplyDelete
  2. ஆமாம் கேட்கனும்னு இருந்தேன்.. ஏன் திரட்டிகளில் இணைப்பதில்லை..

    ReplyDelete
  3. நன்றி பிரசன்னா. தமிழ் மனத்தில் இணைத்து உள்ளேன். டெம்ப்ளேட் மாற்றியதில் ஓட்டு பட்டை காணமல் போய்விட்டது.
    மற்றவற்றிலும் இணைக்கிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. படத்தை பாருங்க....
    வெள்ளைக்காரன் கேபிட்டல் அதுதான்...துறைமுகம்... நகரத்துக்கு காரணம்..

    ReplyDelete
  5. நன்றி ஜாக்கி சார் ... நிச்சயம் பார்க்கிறேன். தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளேன். வந்தபின் பார்கிறேன்.

    ReplyDelete
  6. //திரையில் கூட நகரம் என்றால் சென்னைதான் ரொம்ப காலமாய். இப்போதுகூட மதுரை அரிவாள் தூக்கும் பெரிய கிராமம் அவ்வளவுதான்.
    திருநெல்வேலியும் இப்படிதான். தஞ்சையை மையமாக வைத்து அல்லது கதைகலனாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கா ? இது பெரும்பான்மை தமிழ் நகரங்களின் நிலை. நகரம் என்றால் சென்னை. மாநகரம் என்றாலும் சென்னைதான். அதில் இருந்து மக்களும் மாறவில்லை - ஆட்சிகளும் மாறவில்லை. பெல் திருச்சிக்கு வந்தது என்றால் அது தெளிவான சிந்தனை.//

    தஞ்சையை மையமாக வைத்து களவாணி வந்து இருக்கே Karthick ..
    இப்ப கோயம்புத்தூர் -ல Tidel park கட்டிட்டு இருக்காக.....
    செம்மொழி கோயம்புத்தூர் -ல வளர ஆரம்பிச்சு இருக்கே....
    ஈரோடு,திருப்பூர் எல்லாம் தொழில் நகரம் .....
    மத்த படி மதுரை,திருநெல்வேலி எல்லாம் அரிவாள் தூக்கும் பெரிய கிராமம் அவ்வளவுதான்.............

    ReplyDelete
  7. அட! நீங்க சொல்றது நெசந்தாங்க தனி காட்டு ராஜா . ஆனால் கோவைக்கு tidel வர இவ்வளவு நாள் ஆச்சுன்னா ? திருச்சி மதுரை எல்லாம் ?
    ஈரோடு,திருப்பூர் - இரண்டும் அரசாங்கத்தை நம்பி வளர்ந்த ஊர்கள் இல்லை.

    ReplyDelete
  8. இன்னும் படம் பார்க்கலையா.. பார்த்துவிட்டு எழுதி இருந்தால் பதிவுல இன்னும் சில வரிகள் சேர்ந்திருக்கும். நீங்க சொன்னதுபோல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    ReplyDelete
  9. நா(ன்)னும் இன்னும் மதராசபட்டினம் பார்க்கவில்லை.பதிவு ஆதங்கம்.

    ReplyDelete
  10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    @ஹேமா
    @Priya

    ReplyDelete
  11. என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம்.

    ....... குழந்தையும் நகரமும் - சென்னைவாசியையும் சென்னையையும் - எப்படிங்க, இப்படி போய் compare பண்றீங்க? அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  12. நானும் இன்னும் மதராசபட்டினம் பார்க்கவில்லை.பதிவு ஆதங்கம்.

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு கார்த்திக். நிச்சயம் படத்தைப் பாருங்கள்.

    ReplyDelete
  14. நன்றி
    @Chitra
    @சே.குமார்
    @உமாஷக்தி

    ReplyDelete
  15. மக்கள் எதையுமே நாளைக்கு தேவைனு கூட நினைக்க மாட்டுக்காங்க. இன்னிக்கு பாடு கழிஞ்சா போதும்னு இருக்காங்க. அப்படியிருக்கிற வரை பெரிய மாற்றம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது கார்த்திக்.. அப்புறம் மதராசபட்டினம் கண்டிப்பா பாருங்க..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.