Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, July 30, 2010

ஞாநியும் குமுதமும் வெற்றி பண்பலையும்

ஊடக விடுதலை குறித்து எழுதும் போது இந்தியாவில் அது மோசம் இல்லை என்று நம்பிக்கையை விளைவித்த பதிவை திரு லோஷனின் பதிவில் கண்டேன்.

அவர்களது ஊடகம் மீதான தாக்குதலின் காரணம் தெரியாத போதிலும் - தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவையே.


திரு ஞாநி அவர்கள் தன் கருத்து உரிமையின் கழுத்து நெரிக்கபடுவதில் வெறுத்து போய் தற்போதைய  குமுத வாழ்வின் கடைசி தருணங்களை கடிதம் எழுதி முடித்து கொண்டு உள்ளார்.


ஞாநி அவர்களின் மீது கருத்து மாறுபாடு என்றுமே நான் கொண்டதில்லை என்று சொல்வது தவறு. ஆனாலும் அவரின் எழுத்துக்களில் என்றும் நான் ஈர்ப்பு இழந்தது இல்லை.


ஞாநி அவர்களின் ஒ பக்கங்கள் தமிழ் நாட்டின் அரசியல் தொடர்பான ஒரு ஆவணமாக உருமாறி நிச்சயம் ஒரு நாள் நூலகங்களில் ஆசனம் கொள்ளலாம்.  அது ஒரு தனி மனிதனின் பார்வை மட்டும்தானே ஒழியே தமிழ் நாட்டின் பார்வை இல்லை. ஆனாலும் ஒரு ஆய்வறிவு கொண்ட மனிதனின் ஆழமான பார்வை.


ஞாநி அவர்களின் ஆளுமை தமிழ் செய்தி உலகில் ஆழம் கொண்டது. அவருடைய பிரச்னைக்கு உரிய கட்டுரையை நான் படிக்கவில்லை. எனவே அது
தொடர்பாய் கருத்து வெளியிட நான் விரும்பவில்லை. ஆனாலும் கருத்து கூறுவது அவர் பனி. எனக்கு பிடிக்காத ஒன்றை எழுதினால் வெளியேறு என்பது கொஞ்சம் அதிகம்தான்.

திரு ஞாநி அவர்களின் ஒ பக்கங்கள்  தொடர்பாக ஒரு விவாத குழு எங்களிடம் இருந்தது. அதிகம் விவாதிப்போம். அவரை நான் எழுத்து உலகின் பழுத்த கருத்துரிமை மனிதராக பார்க்கிறேன்.


அவர் எழுதிய ஒரு கட்டுரை வெளியிட முடியாமைக்கு கரணங்கள் சொல்லி உள்ள குமுதம், அந்த கட்டுரையை வெளியிட்டு அதற்கு தன் நிலை விளக்கம்  அளித்து இருக்கலாம்.


ஏடுகள் தங்களை கருத்துக்கள் சொல்லும் களமாக இல்லாமல் காசு பார்க்கும் காலமாக மாறிப்போவது  மனதுக்கு வருத்தம் தருகிறது.

மக்களாட்சியின் நான்காம் தூண் வீழ்ந்து போவது ஏடுகளுக்கு மட்டும் அல்ல - யாருக்கும் நல்லதல்ல.

குமுதம் தன் கருத்து சரி என்று எண்ணி கட்டுரையை நிறுத்தி  இருக்கலாம். அவர்கள் மீண்டும் ஒரு ஆய்வு களத்தை தங்கள் வர்த்தக எண்ணங்களை தாண்டி மீண்டும் துவக்கலாம்.  குமுததின் மீது நான் ஆத்திரம் கொள்ள வில்லை இத்தனை நாள் குமுதத்தில் இந்த தொடர் வந்ததற்கு நன்றி சொல்லி நாளையை நோக்கி பயணிப்போம்.


ஞாநி அவர்களின் கருத்து உரிமைக்கு நான் அதரவு தருகிறேன் - அவர் கருத்தில் என்றேனும் நான் வேற்றுமை கொண்டு இருந்தாலும்.

ஞாநி அவர்களே உங்களோடு  நாங்கள் உள்ளோம். மீண்டும் ஒரு இதழ் உங்களை உச்சி முகர்ந்து முத்தமிடம். அங்கும் ஒரு நிலையில் இப்படி வந்து விழலாம்  ஒரு நிகழ்ச்சி அப்போதும் ரௌத்திரம் கொள்ளுங்கள். அது உங்கள் இயல்பு - அதில் உறுதி கொள்ளுங்கள்.

வெற்றி பண்பலை - இது ஏன் தாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. ஊடக உலகம் தங்கள் கருத்தை சொல்ல பயம் கொள்ள வேண்டும் என்று யாரேனும் நினைத்தால் வீழப்போவது  அவர்கள்தான்.


வெற்றி பண்பலையில் பனியாற்றிய இருவர் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டதாக அறிந்தேன். தீக்கு  செய்தி நிலையம்  இறையாக்கபட்டதாம்.

தீ அணைப்பு வண்டி வந்தும் பெரிதும் எதுவும் காப்பாற்ற முடியவில்லையாம்.

வெற்றியில் வேலை செய்யும் எல்லோருக்கும் என் கவலையை தெரிவிக்கிறேன். உண்மை சுடும் என்று கேள்வி பட்டு உள்ளேன். ஆனால் எரிக்கும் என்று என்பதும் தெரிய வந்து உள்ளது.


கண்ணுக்கு விருந்தும் மதிமயக்க நகைச்சுவையும் மட்டுமே போதும் என்ற நிலை வந்தால், தமிழினம் வீழ்ந்து விடும்.


ஒரே நேரத்தில் ஊடகங்கள் பயம் கொண்ட, பயம கொள்ள செய்த  நிகழ்வுகள் கரையின் இரண்டு புறங்களிலும். வங்க கடல் நம் மானத்தை வாங்கி விலை பேசி கொண்டு உள்ளது. வாங்குவார் யாரோ ?

13 மறுமொழிகள்:

ஜோதிஜி said...

கார்த்திக் தளத்தில் எல்லா அலங்காரங்களையும் செய்து உள்ளீர்கள். இணைப்புகள், மின்அஞ்சல் போன்ற அத்யாவ்ஸ்ய தேவைகள் எங்கே.

வார்த்தைகள் கோர்த்த விதம் ரொம்ப பிடித்து இருந்தது.

ஹேமா said...

ஊடக நசித்தல் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.நேற்றும் கொழும்பில் நடந்திருக்கிறது கார்த்திக்.

'பரிவை' சே.குமார் said...

இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.. குமுதம் தன் வசூலை இழக்க விரும்பவில்லை போலிருக்கு. அடுத்த பத்திரிக்கை அழைத்தால் தனது தன் மானத்துக்கு பங்கம் வராமல் இருக்க ஞாநி சிந்திக்கட்டும்.

Karthick Chidambaram said...

நன்றி நண்பரே @ஜோதிஜி! உங்கள் ஆலோசனைகளை நடைமுறைபடுத்தி உள்ளேன்.
நன்றி @ஹேமா.
நன்றி @சே குமார்

Unknown said...

//ஒரு ஆய்வறிவு கொண்ட மனிதனின் ஆழமான பார்வை//

நிச்சயமாக. இதனால் ஞாநிக்கு இழப்புகள் ஏதுமில்லை. குமுதத்திற்குத் தான்.....

Karthick Chidambaram said...

நன்றி @கலாநேசன்

கடல் அன்பன் said...

ஒரு நல்ல விமர்சகர் என்பவர் ஒரு செய்தியின் உட்கருத்தை புரிந்து கொண்டு,
சார்பு நிலை கொள்ளாமல் விமர்சிக்க வேண்டும்.
"அவருடைய பிரச்னைக்கு உரிய கட்டுரையை நான் படிக்கவில்லை"- 'இலங்கையில் IIFA விழாவில்
இந்திய திரைபடத்துரையினர் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
அதை தடுத்த தமிழ் திரைபடத்துரையினர் செய்தது தவறு'-இதுதான் ஞாநி அவர்களின் கட்டுரையின் மையக்கருத்து.
குமுதம் இணையதள தொலைக்காட்சியில்,இயக்குனர் வேலு பிரபாகரனின்(காதல் அரங்கம் படத்தின் இயக்குனர்)
நேர்க்காணலில்,அப்துல் கலாமும் அவரும் தனக்கு ஒன்றே என்று ஞாநி அவர்கள் கூறி இருந்தார்.

தன்னை ஒரு விமர்சகர் என்று காட்டி கொள்வதர்க்காகவே,பலவற்றை விமர்சனம் செய்திருக்கிறார்.

"ஊடக விடுதலை குறித்து எழுதும் போது இந்தியாவில் அது மோசம் இல்லை என்று நம்பிக்கையை ... "
தி ஹிந்து பத்திரிக்கை ஜெயலலிதா முதலர்வர் காலத்தில் அடித்து நொறுக்க பட்டது.
மதுரையில் தினகரன் பத்திரிக்கை கருணாநிதி முதல்வர் ஆன காலத்தில் தீயிடப்பட்டது.
எந்த ஒரு பத்திரிக்கையும் ஆளும் வர்க்கத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டே எழுத முடியும்.
பத்திரிக்கை சுதந்திரம் எல்லாம் இந்தியாவில் ஒரு பேச்சுக்குதான்.

Karthick Chidambaram said...

தங்களின் மூலமாக அந்த கட்டுரை பற்றி அறிய நேர்ந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் ஞானியின் எல்லா கருத்துக்களையும் ஆதரிப்பவன் இல்லை என்பதை என் கட்டுரையில் சொல்லி உள்ளேன்.

அவருடைய கருத்துக்களில் - சிலவற்றில் நானும் உடன்படவில்லை. அதன் காரணமாய் அவரை வெளியேற்ற வேண்டுமா? என்பது என் கேள்வி.

a said...

கார்த்தி :நல்ல தெளிவான பதிவு....

கடல் அன்பன் said...

ஏற்கனவே ஆனந்த விகடனில் ஞாநி எழுதி கொண்டு இருந்தார்.
ஏதோ காரணதிற்காக அத்தொடர் நிறுத்தப்பட்டது.
அதன் பின்புதான் குமுதத்தில் எழுத தொடங்கினார்.
சமீபத்தில் குமுதம் இதழின் நிர்வாகனதரிடையே ஒரு பிரச்சனை எழுந்தது.
அதை முதல்வர் கருணாநிதி தலையிட்டு அப்பிரச்சனை தீர்ந்தது.
கருணாநிதியை அதிகம் விமர்சித்தவர் ஞாநி.
எனவே அரசியல் காரணத்திற்காக அவர் நீக்கப்பெற்று இருக்கலாம்.
இது எனது கணிப்பு மட்டுமே.

கடல் அன்பன் said...

எனக்கும் ஞானியின் அரசியல் விமர்சனமும், நுட்பமான அறிவும் பிடிக்கும் தான்.
நீங்கள் சொன்னவாறு ஒரு சில முரண் பாடுகளும் உண்டு.
ஆனால் எம் இனத்தை கொத்து கொத்தாக கொன்று குவித்த,
இன வெறி பிடித்த சிங்கள பாசிஸ்டுகளுக்கு சார்பாக ஒத்து பேசுவதை
என்னால் மன்னிக்கவே முடியாது. இந்த ஒரே காரணத்திற்க்காக ஞானியை முற்றிலும்
புறம் தள்ளுகிறேன்.மடத்தனமாக தோன்றினாலும், என் மனசாட்சி இப்படியே சொல்கிறது.

பின் குறிப்பு:
இந்த பின்னூட்டம் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பியது.
இதை வெளீடுவது உங்கள் விருப்பம்.

கடல் அன்பன் said...

குமுதம் இதழில் ஏன் ‘ஓ’ பக்கங்கள் இல்லை ?
http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=158&Itemid=9

Karthick Chidambaram said...

நன்றி கடல் அன்பன்.உங்கள் கருத்தை வெளியிடுவதில் தவறு எதுவும் உணரவில்லை நான்.
இது எனக்கு மட்டும் நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து இல்லை என்று நம்புகிறேன்.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை