Skip to main content

ராம ராவணன் : தமிழர் விரோத படமா ?

இந்த படத்தை பற்றி சில நாட்களாக கேள்வி பட ஆரம்பித்தேன்.

இந்த படம் மலையாள புதினமான மனோமி என்பதை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிந்தேன்.



மலையாள புதினங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. தமிழை ; ஆங்கிலத்தை தவிர வேறு எந்த மொழியும் படிக்க தெரியாத மனிதர்களுள் நானும் ஒருவன்.



மாதவி குட்டி என்கிற மலையாள புதின எழுத்தாளரின் கற்பனை கதை இது என்றே அறிகிறேன். புதின கதையின் படி - தமிழ் போராளி ஒருவன் சிங்கள பெண்ணை காதல் செய்வதாகவும் அதன் காரணமான நிகழ்வுகளும் சொல்லபடுகின்றன.



மனோமி என்கிற பெயரில் இந்த புதினம் எழுதப்பட்டு உள்ளதாகவும். திரைபடத்திற்கு ராம இராவணன் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அறிகிறேன்.

இதில் ராமன் யார் ராவணன் யார் என்று தெரியவில்லை.



சிங்கள பெண் ஒருத்தியை காதலிக்கும் தமிழ் இளைஞனின் கதையாக வந்த படமே புன்னகை மன்னன். கமல் அவர்கள் நடிப்பில் வெளி வந்த படம்.

சிங்களத்து சின்னக்குயிலே என்று ஒரு பாடலே அதில் உண்டு.



தமிழர்களின் நிலையை அறியாமலும் அதன் பின் புலம் தெரியாமலும் எழுத்தப்பட்ட கதையா இந்த ராம ராவணன் என்று தெரியவில்லை.

ஆனால் அப்படி இருக்கவே சாத்தியங்கள் உண்டு என்று நினைக்கிறேன்.



புன்னகை மன்னனிலோ தெனாலியிலோ கமலும் பெரிதாக தீவு தேசத்தின் நிலையை பற்றி சொல்லவில்லை. கன்னத்தில் முத்தமிட்டால் ஓரளவுக்கு சொல்ல முயன்றாலும் முழுமை குறை இருந்தது.



போர் நிலைகளை அடிபடையாக கொண்டு நிறைய திரைப்படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் தமிழில் அதுவும் நம் அண்டை மண்ணில் நடந்த நிகழ்வுகள் குறித்த படங்கள் வெளிவந்தது கிடையாது.



கன்னத்தில் முத்தமிட்டால் - மணி அவர்களின் இயக்கம் என்பதால் விருது கூட பெற்றது.



ஆரோக்கியமான விவாதமும் அப்பாவி தமிழர்களின் நல்வாழ்விற்கான முயற்சிகளும் உயிர் பெருத்தல் நலம்.

Comments

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத...