Skip to main content

த நா தள வரலாறு: பிறவி பகை தமிழர்கள்

தமிழனின் ஒற்றுமை உலகறிந்த உண்மை. உலகத்தில் பல நாடுகளில் தமிழும் தமிழனும் இருந்தததாக சொல்லப்பட்டாலும். ஆய்வுகள் நிரூபித்தாலும்.
தமிழன் தன் ஒற்றுமையால் அதை உறுதி படுத்துகிறான்.

தமிழன் தனக்கு எதிராக இன்னொரு தமிழனை பார்கிறான். சிங்கத்திற்கு பகை சிங்கமாகதானே இருக்கவேண்டும்.

தமிழ் மண்ணில் இரண்டு கிராமங்கள் - இன்றும் தங்களை பிறவி பகையளிகளாய் நினைப்பதை ஒரு முறை அறிந்தேன்.


அவற்றின் பெயர் பாகனேரி & பட்டமங்கலம். ஒரு ஊரின் தலைவனுக்கும் இன்னொரு ஊரின் தலைவனுக்கும் நடந்த தகராறில் இந்த ஊர் பகை முகிழ்த்தது. ஒரு ஊரை சேர்ந்த தலைமை குடும்பத்தான் நாயின் கழுத்தில் இன்னொரு ஊரின் தலைமை குல பெண்ணிற்கான தாலியை கட்டி அனுப்பி கேவலபடுத்தியதே காரணமாம்.

இன்னும் அதிகம் தெரிய வேண்டும் என்றால் - கலைஞரின் தென் பாண்டி சிங்கத்தை படியுங்கள்.

தொடரும்

Comments

  1. அப்படியா? :-)

    ReplyDelete
  2. ஆமாங்க ! அப்படித்தான் @ சித்ரா

    ReplyDelete
  3. தல கொஞ்சம் விரிவா அலசுங்க ...

    ReplyDelete
  4. இப்போது விரிவாக அலச ஆரம்பித்து உள்ளேன் என்று நம்புகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத...