Skip to main content

தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு சிறுவி

நீண்ட நாட்களாக இந்த தேடல் என்னிடம் உள்ளது. என்னுடைய நண்பர்கள் பலர் "உங்கள் வலைப்பூ முகவரியை தாருங்கள்" - என்னும் தருணத்தில் "தரலாம்தான் ஆனால் என் வலைப்பூ தமிழில் இருக்கிறது" என்றவுடன். "நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது இல்லையா ?"
என்கிற கேள்வி வந்து விழும்.

"எழுதினேன். ஆனால் இப்போது இல்லை " - என்பது உண்டு.

அவர்கள் என் எழுத்துக்களை படிக்க விரும்புகிறார்கள். மற்ற மொழி நண்பர்கள் அவர்கள்.

இந்தி மொழியில் எழுதினால் கூகிள் ஆண்டவர் வரம் தருகிறார் - மொழி பெயர்த்துக்கொள் என்று. அதற்கு ஒரு சிறுவி ( widget ) அல்லது ஒரு கருவி ( tool ) இருக்கு. தமிழில் இல்லை.

இந்தியாவின் ஒரே வாழும் செம்மொழி நொண்டுகிறது. தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் சிருவியோ கருவியோ வர நாம் செய்ய என்ன வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே சில பல்கலை கழகங்கள் முயன்று உள்ளன. ஆனால் இனைய வெளியில் பயன்பாட்டிற்கு என்று ஒன்றும் இல்லை.

பல நண்பர்களின் தமிழில் எழுத்தப்பட்ட கருத்துக்கள் மனித முயற்சி இன்றி வேற்று மொழி நண்பர்களுக்கு புரிய வைக்கும் சாத்தியம் இல்லை என்றே உணர்கிறேன்.

தமிழ் மொழி பெயர்ப்பு கருவிக்கு தமிழக அரசோ, இந்திய அரசோ, சிங்கை போன்ற அரசுகளோ, தமிழ் ஆர்வலர்களோ, தமிழ் கணிப்பொறி நண்பர்களோ இதுவரை செய்தவை எதுவும் உள்ளனவா என்று தெரியவில்லை.

இணைத்தில் இது தேவை என்று நான் உணர்கிறேன். தமிழில் செய்தி திரட்டிகள், வலைப்பூ திரட்டிகள் என நிறைய படிக்க வழி அமைத்தபின்னும் தமிழ் வேற்று மொழியாளர்களை சென்றடைய வழி வரவேண்டும்.

தமிழ் கல்வி மற்ற மொழியாளர்களுக்கு கற்பிக்கப்படல் அதிகரிக்கபடவேண்டும். தமிழ் பரப்பு கழகங்கள் உருவாக்கபடவேண்டும்.

இந்தி மொழியாளர்கள் பிரசார சபா என்று ஒன்று வைத்து உள்ளார்கள். அதை பாராட்ட வேண்டும். அது அவர்கள் மொழி மீது அவர்கள் கொண்ட பற்று. தமிழ் மண்ணிற்கு இந்தி பயன்பாடு அவசியம் இல்லை என்பது வேறு கதை.

எழுத்துக்களின் பயன்பாடே இல்லாத சௌராஸ்டிரம் போன்ற மொழிகளை தமிழ் மண் இன்னும் காத்து வரும்போது. தமிழை விடலாம் ?

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். என்ன செயலாம் தமிழ் மொழி பெயர்ப்பு கருவியோ சிருவியோ செய்ய ? மற்றவர்களிடம் விவாதியுங்கள். இந்த பதிவை வேண்டுமானால் அனுப்பி வையுங்கள்.

நன்றிகளுடன்
கார்த்திக் சிதம்பரம்

Comments

  1. நானும் இப்படி ஒன்று இருந்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். நானறிந்தவரை இதுவரை இல்லையா? அல்லது எனக்கு கிடைக்கவில்லையோ தெரியவில்லை.

    உங்கள் ஆதங்கமே. என் ஆதங்கமும்.

    ReplyDelete
  2. மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..

    ReplyDelete
  3. இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

    ReplyDelete
  4. உங்கள் வலைப்பூவை பார்த்தேன். தங்களுடன் தங்கள் ஆய்வில் இணைந்து கொள்ள விரும்புகிறேன் ராபின். நன்றிகள்.

    ReplyDelete
  5. நண்பர் ராபினை தெரிந்துகொள்ளுங்கள்.
    http://language.worldofcomputing.net/machine-translation/challenges-in-machine-translation.ஹ்த்ம்ல்
    ஆங்கிலத்தில் நண்பர் அழகாக சில விசயங்களை எழுதி உள்ளார்.

    இன்னும் படிப்பேன் ராபின்.

    ReplyDelete
  6. உபயோகமான தேடல்.

    ReplyDelete
  7. //கே.ஆர்.பி.செந்தில் said...

    மாநாடு போட்டு குடும்பத்தை மொழிக்கு முன் நிறுத்தும் கூட்டம் இருக்கும்வரை நம்ம உமறுதம்பி போல தனி மனித முயற்சிகள் மட்டுமே பயன் தரும் ..
    //

    வழிமொழிகிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாக...