அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான். "என்னோடு அணிவகுப்பில் வர இருந்த மூணு பேருக்கும் உடல் நலமில்லை" "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார் "திடீர் என்று உடல் நலமின்மை" "மூவருக்குமா ?" வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான். நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி. "கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான் "அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன் "நல்லது அவர்களை பயன்படுத்திகொள்" தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார். வீரனும் ஒரு தளபதிதான். அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால். அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன. அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது. அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நட...