Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, August 28, 2010

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது.

போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன்.

இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு.

போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே.

திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம்.

முருகனின் அருளின் காரணமாகவே எல்லாளனை தான் வென்றதாக துட்டகாமினி நினைத்ததாக ஒரு செய்தி சிங்கள மக்களிடம் உண்டாம். முருகன் தமிழ் கடவுள் என்பது நம் நம்பிக்கை.

இப்படி நான் எந்த அளவுக்கு குழம்பி உள்ளேனோ அதே போன்ற குழப்பங்களின் மேல் நகர்கிறது விஜய் தொலைகாட்சியில் வரும் யாமிருக்க பயமேன். ஆய்வுக்கு உரிய செய்திகள் வருகின்றன.

அதே போல தேரையார் என்கிற சித்தர் பற்றியும் ஆய்வு நிறைய செய்ய வேண்டி உள்ளது. பால் எல்லாம் எண்ணெய் என்கிற மொழி சித்த பாடல்களில் உண்டு.

பல்லவர்களின் ஆரம்பகால கோயில்கள் எல்லாம் இடித்து தரைமட்டம் ஆன கதைகள் உண்டு. மாமல்லபுரம் அதன் காரணமாகவே வந்தது.
பல்லவர்களின் அழிக்கப்பட்ட கோயில்கள் புத்த கோயில்களோ என்கிற கேள்வி இன்னும் உண்டு.

பசுபதி நாதர் வழிபாடு கொண்டவர்கள் தமிழர்கள். முருகன் அவர்கள் தெய்வம் என்பது மோகன்ஜதரோ சொல்லும் செய்தி. முருகன் தமிழ் கடவுள் என்கிற பதமே ஆய்வின் சாவி. புத்த மதம் மற்றும் சைவம் சார்ந்த இருவரும் முருகனை வழிபட்டு உள்ளனர் என்று நினைக்க வேண்டி உள்ளது.

புலிப்பாணியின் வேண்டுகோளின்  படி உருவாக்கப்பட்ட சிற்பம் பழனி சிற்பம்.

அப்புறம் வஜ்ராயனம் என்கிற வார்த்தை தமிழில் இருந்து உருவான வார்த்தை. ஆங்கிலம் தவிர்த்த ஐரோப்பிய மொழிகள் வைரம் என்று எழுத வஜ்ரம் என்றுதான் எழுத வேண்டும் ஆனால் படிக்கும் போது வைரம் என்று படிப்பார்கள்.

நான் இருந்த அமெரிக்க நகர் ஒன்றின் பெயர் சான் ஜோஸ் ஆனால் சான் யோசே என்பார்கள். காரணம் J  - அதாவது ஜா என்கிற எழுத்து வடிவிற்கு Y  அதாவது யா என்கிற உச்சரிப்பு. அதாவது வஜ்ரம் ( Vajram )- வய்ரம் ( vairam ) வஜ்ரம் வட மொழி அல்ல. வஜ்ராயனம் என்கிற பீடம் நிறுவும் நிலை - அயனம் - நிலை. சயனம் - தூங்கும் நிலை. அசயணம் ( அசையாத நிலை ) - அமர்ந்த நிலை ( இதைதான் ஆசனம் என்கிறாகள். தமிழிலும் ஆசனம் என்கிற வார்த்தை உண்டு).அயனம் என்பதற்கு வழி என்றும் பொருள் உண்டு.

சரி! குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். மதங்களின் பால் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை ஆனால் இந்த ஆய்வு சுவாரசியமாய் எனக்கு தெரிகிறது. நண்பர் ஒருவர் ஒரு நூலகத்தை அறிமுக படுத்தி தொடருங்கள் ஆய்வை என்றார். நம்ம வேலையே மாறுதே என்று குழப்பத்துடன் மௌனம் காத்தேன்.

9 மறுமொழிகள்:

அருண் பிரசாத் said...

நல்ல ஆய்வு கார்த்திக். முடிவு என்ன? ஆய்வு தொருமா?

Krubhakaran said...

பல்லவர் பற்றி எழுதியதாம் பல்லவர் பற்றிய என் படப்பதிவு ஒன்று
http://viewsofmycamera.blogspot.com/2010/08/blog-post.html

Chitra said...

இது கொஞ்சம் அலசல் அல்ல..... ரொம்பவே அலசி இருக்கீங்க.....ம்ம்ம்ம்.......

வானவன் யோகி said...

எனக்கென்னவோ மிகவும் மேம்போக்கான கட்டுரையாகவே தெரிகிறது.

சில விடயங்களில் போதிய ஆழ்ந்த சிந்தனை இல்லையோ என எண்ணுகிறேன்.

எங்கேயோ மண்டபத்தில் சொன்னதைக் கேட்டுவிட்டு இங்கே பதிவு செய்ததாகத் தெரிகிறது.

\\மதங்களின் பால் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை\\
நமக்குத் தெளிவில்லாத விடயங்களை பதிவிடுதல் மற்றோருக்கும் நமக்கும் குழப்பம் தரும் ஒன்று.

அதை நீங்களும் அறிந்தே உள்ளீர்கள்.

இது அறிவுரை அல்ல.ஆனாலும் வாசகர்களை அயர்ச்சி அடைய வைக்கக் கூடாது.

மற்றபடி சுவாரசியமாக எழுதுவதுதான் என்னைப் போன்றோரை ஈர்க்கிறது.

வாழ்த்துக்கள்.....

'பரிவை' சே.குமார் said...

நல்ல ஆய்வுங்க. ஆமா முடிவு என்ன? இல்லை ஆய்வு இன்னும் தொடருமா?

Karthick Chidambaram said...

நன்றி அருண் பிரசாத்
நன்றி க்ருபா
நன்றி சித்ரா
நன்றி வானவன் யோகி
நன்றி சே.குமார்
ஆய்வை தொடரலாம் என்று நினைக்கிறேன். சிலர் இது தொடர்பாக சில விடயங்களை சொல்லி உள்ளனர்.
ஆனால் மீண்டும் தொடங்க கொஞ்ச காலம் பிடிக்கும்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி :-))

தனி காட்டு ராஜா said...

நல்ல ஆராய்ச்சி ...
ஆராய்ச்சி "புலி"- பாணி நன்றாக இருக்கிறது .....

Kavi said...

உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை