இந்த கட்டுரை தொடரின் நோக்கம் தோற்று போன ஒரு படுகொலை முயற்சியை எழுதுவது இல்லை. அனாலும் ஒரு முறை ஒலி ஒளி வடிவத்தில் கண்ட இந்த செய்த்திப்பதிவை நான் பதிவிட நினைக்கிறேன்.
இதன் ஆதாரங்கள் உங்களுக்கு கிட்டலாம்.
என்னிடம் சரியான ஆதாரம் என்று கூறும் அளவில் எதுவும் கிட்டவில்லை. எனவே புறம்தள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு.படிப்பவர்கள் இதன் நம்பத்தன்மையை ஆராய நினைப்பதன் மூலம் காணமல் போன ஒரு வரலாற்று நிகழ்வு நமக்கு கிட்டலாம் என்கிற ஆவலின் அடிப்படையில் எழுத்தப்படும் பதிவே இது.
உலகின் உயர்வான மனிதர்களுள் அவருக்கு ஒரு பெயர் உண்டு.உலகமே வியந்த மனிதர் அவர்.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல என்றைக்கும் அவருக்கு புகழ் உண்டு.
மானுட வரலாற்றில் பூத்த பெருந்தலைவன் என்கிற கருத்து அவரது நாட்டை சேர்ந்தவர்களைப்போலவே இல்லாவிட்டால் கொஞ்சம் அதிகமாகவே மற்ற நாடுகளில் உண்டு.
காலை கதிரவன் வானில் பூக்க அந்த நகரம் சோம்பல் முறித்தது. பறவைகள் இரைதேடி பறக்க செவிக்கு உணவு தேடி ஒரு கூட்டம் வேற்று நகரங்களில் இருந்தும் வந்திருந்தது.
உலகத்தின் ஆட்சி மனிதர்களை கேள்வி கேட்கும் ஆற்றல் படைத்தவர் என்று நம்பப்பட்ட அந்த மனிதர் இன்று அந்த மண்ணில் உரை நிகழ்துக்கிறார்.
சீருடையிலும் வேறு உடையிலும் காவல் மனிதர்கள்.
மாநாட்டு பந்தல் மனித திரளில் தினறிக்கொண்டு இருந்தது.
அந்த மனிதர் வந்த நான்கு சக்கர வாகனம் மெதுவாகவே நகர வேண்டி இருந்தது.
கூட்டம் அதிகம். வண்டி மாநாட்டு பந்தலை நோக்கி நகர நகர் மக்களும் வண்டியோடு நகர்ந்தனர்.
அந்த இளைஞர்கள் நால்வர் அவரது வண்டிக்கு அருகில் வந்து வண்டியோடு பயணித்தனர்.அவர்கள் இடைவாரில் மௌனமாய் உறங்கிக்கொண்டு இருந்ததன கை துப்பாக்கிகள்.
கண்கள் துறுதுறுக்க அவர்கள் வண்டியோடு நடந்தனர்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
நேரம் சரியாக இருந்தால் - சிரச்சேதம் செய்ய ஆயத்தமாய் இருந்தனர்.
இடை வாரை தொட்டுப்பார்தனர் உள்ளே இருந்த துப்பாக்கி நலம் என்று சொன்னது.
உயிர் குடிக்க நேரம் கேட்டு நின்றது.
பொறுமை - நேரம் இன்னும் வாய்க்கவில்லை - என்று நெஞ்சுக்கும் ஆயுதத்திற்கும் சொல்லி விட்டு இன்னும் நடந்தனர்.
தலைவர் பார்த்து கை அசைத்தபடி வந்தார்.
அவர்கள் நெருங்கி விட்டனர். காலம் களம் அமைத்து கொடுத்தது.
அவர்கள் துப்பாகிகளை எடுக்க எத்தனிக்க காவலர்கள் அவர்களை பிடித்தனர்.
யாரும் பெரித்தும் கலவரப்படாத வகையில் அவர்களை அப்புற படுத்தினர்.
விசாரித்தனர்.
"எங்கள் தலைவனின் மரணத்திற்கு காரணமான அவரை கொல்ல வந்தோம்"
இளமை வேகத்தில் உண்மை வார்த்தைகளாய் வந்து விழுந்தது.
1931 - லாகூர் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு இது என்று சொல்லப்பட்டது அந்த பதிவில்.பகத் சிங் என்கிற ஒப்பு உயர்வு அற்ற ஒரு வீரனின் மரண தண்டனையை இந்தியாவின் அண்ணல் அறப்போரில் விடுதலை வேட்கை நடத்திய அமைதி வீரர் மகாத்மா காந்தி அந்த மாவிரனை காக்க மனம் வைக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.
ஆயிர கணக்கான அமைத்திபோராளிகளின் விடுதலையை உறுதி செய்த காந்தி அவர்கள் பக்கத்தின் மரணம் நிகழ்வதை தடுக்கவில்லை என்பது அவர்களின் வாதமும் வருத்தமும்.
தன் தந்தையின் வேண்டுகோளாலோ - இல்லை யாருடைய வேண்டுகோளாலும் தான் வெள்ளைய சட்டத்திடம் பிச்சை எடுக்க
விரும்பவில்லை பகத் சிங்.
"அறவழி மாந்தர், அஹிம்சையின் உருவம் என்னிடம் விட்டுவிடுங்கள் விடலை போராளிகளை" என்ற போது நான் வியந்தேன் - உடன்பட மறுத்தேன் - என்று இர்வின் துரை அவர்கள் தனக்கும் காந்திக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி பதிவு செய்ததாகவும் கேள்வி.
காந்தியும் தான் இர்வினிடம் கேட்டதை கூட்டம் முடிந்து திரும்பு போது கருப்பு ரோசாக்களை வாங்கி கொண்டு சொல்கிறார்.ஆனால் அங்கேதான் அவர் ஒரு வரியை போடுகிறார் " நான் எப்போதும் அஹிமசையின் பக்கம்தான்"
இன்றும் இந்த நிகழ்வுகள் குறித்து குழப்பமான நிலை நீடிக்கிறது. அவற்றை பற்றி சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல.
தொடரும்
present
ReplyDelete//
ReplyDeleteஇன்றும் இந்த நிகழ்வுகள் குறித்து குழப்பமான நிலை நீடிக்கிறது. அவற்றை பற்றி சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல.
//
எனக்கும் கொஞ்சம் குழப்பமா இருக்கு கார்த்தி....
கார்த்தி மிக முக்கியமான கட்டுரைகளில் இதுவுமொன்று. என் அனுபவத்தை பொறுத்தவரை வன்முறையை மட்டும் வைத்துக் கொண்டு யாராலும் சாதிக்க முடியாது. உங்கள் வளர்ச்சிக்கு என்றும் என் ஆதரவிருக்கம்
ReplyDeleteகார்திக் குழப்பமோ! பொய்யோ! கேட்க நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் நடை அதை விட அருமை.
தொடருங்கள்
இன்றும் இந்த நிகழ்வுகள் குறித்து குழப்பமான நிலை நீடிக்கிறது. அவற்றை பற்றி சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல.
ReplyDelete......தொடரின் நோக்கம் எதுவாக இருந்தாலும், சிந்திக்க வைக்கிறீர்கள்.
அருண் பிரசாத் சொன்னதைத் தான் நானும் இதற்கு பின்னூட்டமாக கொடுக்க நினைத்தேன் க.சித.
ReplyDeleteஉங்கள் நடை அருமை.
ReplyDeleteதொடருங்கள்
நன்றி
ReplyDelete@ஆனந்தி
@வழிப்போக்கன் - யோகேஷ்
@ம.தி.சுதா
@அருண் பிரசாத்
@Chitra
@சே.குமார்
அரசியல் எல்லா இடங்களிலும் இதேதான்போல !
ReplyDelete