Skip to main content

மீண்டும் நான்

இந்திய மண்ணிற்கு வந்து. பின்னர் இனைய இணைப்பு பெற்றுவிட்ட பின்னும் இன்றுதான் எழுதுகிறேன்.

இந்தியா, தமிழகம், என் இல்லம் - இவற்றில் நான் எதிர்பார்த்த பலவும் அப்படியே உள்ளன.

மதுரையில் நிறையவே உள்ளூர் தொலைக்காட்சிகள். இன்னும் மண் மனம் மாறவில்லை. பேருந்துகளில் சென்னையை போல் நகரும் மின் எழுத்துக்கள். கட்டணம் பற்றி கேட்பது இந்த பதிவில் தடை செய்யபடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் நாம் அமெரிக்கத்தனம் நோக்கி நகர்கிரோமோ என்று கூட நான் சில இடங்களில் நினைத்தேன்.

அம்மா தினமும் கோயில் செல்கிறார். வழக்கம் போலவே. அப்பா நிறைய அரசிலும் சமூகமும் பேசுகிறார் வழக்கம் போலவே.

எப்போது சென்னை வருகிறாய் என்று நண்பர்கள் கேட்கிறார்கள் வழக்கம் போலவே. மிட்டாய்கள் விநியோகம் வழக்கம் போலவே.

வாழ்க்கை உயிர்ப்புடன் மட்டும் அல்ல சுட சுடவும் உள்ளது. அப்புறம் தமிழ் நாடு முழுதும் மழை மதுரை நீங்கலாக.

எழுதுவதை தொடர்வேன். அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடுவேனா ?

Comments

  1. வருக.வணக்கம். நலமா?

    ReplyDelete
  2. மீண்டும் வந்ததற்க்கு வணக்கங்கள். அடுத்த பதிவு எப்போ?

    ReplyDelete
  3. எல்லாம் வழக்கம் போல....
    நீங்கள் எழுதுங்கள் வழக்கம் போல.
    மதுரையா நீங்க....?

    ReplyDelete
  4. வாங்க கார்த்திக்.சுகம்தானே !

    ReplyDelete
  5. Welcome back!!!

    உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம், வழக்கம் போலவே......

    ReplyDelete
  6. நன்றி ஜோதிஜி. நலம். நீங்களும் நலம் என நம்புகிறேன்.
    நன்றி அருண் பிரசாத். மிக விரைவில்

    நன்றி கலாநேசன்
    நன்றி சே.குமார். அமாம் நான் மதுரை - நீங்களுமா ?
    நன்றி கே.ஆர்.பி.செந்தில்
    நன்றி ராம்ஜி_யாஹூ
    நன்றி ஹேமா. நான் நலம். நீங்கள்?
    நன்றி சித்ரா. வழக்கம் போல எழுத ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.