அவருடைய வேலை பளுவுக்கு இடையில் அந்த நாடகம் பார்ப்பது அவருக்கு சற்று இளைப்பாற செய்யும்.
அதுவும் அந்த நாடகத்தின் ஒரு சிரிப்பு நிகழ்வு அவர் மனதை இலகுவாக்கும்.
தன குடும்பத்துடன் அந்த நாடக ஆரங்கத்திற்கு வந்தார். மௌனமா அவர் அந்த நாடகம் பார்க்கும் மாடத்தில் அமர்ந்தார்.
அந்த மாடத்திற்கு பாக்ஸ் 13 என்று பெயர்.
மாடத்திற்கு கீழே மக்கள் திரள். ஆர்வமாய் அந்த கூட்டம் நாடகம் பார்க்க திரண்டு இருந்தது.
நாடகம் ஆரம்பித்தது. எல்லோரும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர் - அவனைத்தவிர. மாடத்திற்க்கான கதவு அருகில் வந்து நிட்று கொண்டான்.
தன் கைத்துப்பாக்கியை சரி பார்த்துக்கொண்டான்.
மெல்லமாய் கதவை திறந்தான். தலைவரின் மெய்க்காவலன் அங்கே இருந்தான்.
மெய்க்காவலன் இவனை இன்னும் பார்க்கவில்லை.
துப்பாக்கியில் குறிபார்த்தான். விசையை அழுத்தினான். குண்டு பறந்தது. பட் என்று தலைவரின் கபாலத்தில் பட்டு தலைவர் துடிதுடித்தார்.
கூட்டம் கூச்சலும் குழப்பமுமாய் மாறியது.
உடனடியாக அந்த மாடத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நாடக மேடையில் குதித்தான். வெற்றி முழக்கம் இட்டுவிட்டு ஓடினான். கிட்டத்தட்ட ஒழிந்தான் கொடுங்கோலன் என்கிற மாதிரியான ஒரு முழக்கம் அது.அவனால் வெளியில் ஓடி நதியில் ஒரு படகில் பயணிக்க முடிந்தது.
இதே நேரத்தில் அவனுடய நண்பர்கள் துணை குடியரசு தலைவரையும் வெளியுறவு செயலரையும் கொன்றனர்.
சுடப்பட்ட குடியரசு தலைவர் ஆபிரகாம் லின்கன். கொலையாளியின் பெயர் பூத்.
உள்நாட்டு நெருக்கடியில் அன்று அமெரிக்க பிரிந்து நின்றது.
தொடரும்
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
3 மறுமொழிகள்:
நல்ல தொகுப்பு. இன்னும் தொடரவும்....
பெரும் தலைவர்கள் எல்லோரது நிலைமையும் இப்படித்தானா !
ஏன் கொன்றான் என விலக்கவும் கார்திக் பிளிஸ்.
நல்ல பதிவு
Post a Comment