Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, August 6, 2010

சிந்தனையில் மூழ்கிய தேவதை ( சிறுகதை )

நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கதை. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
******************
அது ஒரு இருள் பொழுது. அந்த இருள் தேசத்திற்குள் வந்து குத்திதாள் அந்த வெள்ளை உடை தேவதை.

இளம்பெண் அவள். புன்னகை பூத்தாள்.

"உன் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது"

தன் கையில் இருந்த மந்திரக்கோலால் இருளில் ஆசிர்வதித்தாள். அங்கே ஒரு மனித உருவும் மண்டியிட்ட நிலையில் உயிர் பெற்றது.
"நன்றி" - மௌனத்தில் சொன்னான்.

அது ஒரு அதிகாலை வேலை.வரண்ட பூமி.
வந்து விழுந்தான் அவன்.

வரப்பில் ஒருவர் படுத்து இருந்தார். பக்கத்தில் எலிக்கறி.
அவரை எழுப்பினான்.

"காய் ..." - தன மொழியில்  வந்து விழுந்த மனிதன் ஆரம்பித்தான்.
"அட! காயாவது பழமாவது? சொத்துக்கு வழி இல்லாம செத்துக்குட்டு இருக்கோம்"  - வரப்பு மனிதன் மீண்டும் களைப்பில் படுத்தான்.

வானத்தில் இருந்து வந்தவன் கொஞ்ச தூரம் நடந்தான்.
பெட்டி கடைகளில் செய்தி ஏடுகள் தொங்கி கொண்டு இருந்தன. குஜராத்தில் சமயக்கலவரம்.

நடந்தான். இன்னும் சாதியும் மதமும் ... கண்டு நகர்ந்தான்.
பக்கத்து நாட்டில் படுகொலைகள் மறைமுகமாய் இந்திய மண் உதவி ? கேள்வி குறிகளோடு அடி அளந்தான்.

நிமிர்ந்து பார்த்தான். உச்சி வெயில்.
தண்ணீர் தவித்தது.

பெட்டி கடைக்கு போனான்.
தண்ணீர் என்று மௌனத்தில் கேட்டான்.
ஒரு பாலித்தின் பையுக்குள் அடைக்கப்பட்ட நீர்.

குடித்து முடித்தான்.
காசு கேட்டான் கடைக்காரன். வந்தவனுக்கு புரியவில்லை. தண்ணீரை விற்கிறார்கள் ? ஆச்சிரியத்துடன் நடந்தான்.
கடைக்காரன் விட்டான் தொலைகிறது என்று.

மெல்லமாய் கல்வி வர்த்தகம் கடை பரப்பி உள்ளதை ஊருக்கு வெளியே இருந்த கல்லூரி சாலைகள் காட்டின.

நூலகங்களில் கூட்டம் இல்லை. திரை அரங்குகளில் அலை மோதியது.
ஒரு கல்லில் அமர்ந்தான். ஊர் பரபரப்பை ஓடிக்கொண்டு இருந்தது.

தான் என்ன தவறு செய்த்தோம்? மனது அவனிடம் கேட்டது.
காந்தி அடிப்படை கல்வி கோரினார். இங்கே கல்வி வர்த்தகம்.
நீருக்கு விலை. உயிரோ மலினம். சாதியையும் மதமும் இன்னும் விசமாய் மனிதனை பிரிக்கிறது. காந்தி ஒருங்கிணைந்த இந்தியா கேட்டார்.
இங்கே ?. வேளாண்மை வேகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வாழ்கிறது. குழம்பிப்போய் பார்த்தால் - நாங்கள் அடுத்த வல்லரசு என்று முழக்கங்கள்.

பார்க்கவே பிடிக்கவில்லை ஆனால் ஒரு நிம்மதி. வந்த இடத்திற்கே போய் விட நினைத்தான்.

இருளின் தேசத்தில் மீண்டும் அவன். எதிர்பார்த்து காத்திருந்த தேவதை.
"நன்றா ?" - தேவதை கேட்டாள்
"நிம்மதி அடைகிறேன்" - அவன் சொன்னான்.
"என்ன சொல்கிறாய் ?"
"நான் என்ன தவறு செய்தேன்?"
"கோட்சே " - கோபப்பட்டாள் தேவதை.
"இந்த மன்னிர்க்குதான் விடுதலை வாங்கித்தர நினைத்தார அந்த மனிதர். காந்தி தேசம் ... இப்போது ஒரு குப்பை கூடம்.
வெள்ளையன் போனனான் கொள்ளையன் வந்தான் என்பது தான் கதை. நல்லவேளை காந்தியை கொன்று நான் காப்பாற்றினேன்."

தேவதை சிந்தனையில் மூழ்கினாள். கோட்சே மீண்டும்  உருவம் இழந்தான் இருளில் கலந்தான்.

4 மறுமொழிகள்:

ஹேமா said...

மனிதனை மனிதன் மதிப்பது,மனித நேயம் மறந்து மறைந்து போய்க்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் காந்தி இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.சொன்ன விதம் வித்தியாசமாய் நல்லாயிருக்கு கார்த்திக்.

'பரிவை' சே.குமார் said...

அது சரி,
வித்தியாசமான சிந்தனை...
நல்லாயிருக்குங்க.

அருண் பிரசாத் said...

அருமைங்க. முடிவு எதிர்பார்க்காதது

ஜோதிக்குமார் said...

மிக நல்ல கதை.. நல்ல முடிவு.. ஆனால் எழுதிய விதம் தான் ஏதோ உறுத்தலை தந்தது. ஏதோ திரைக்கதை வடிவம் போல் ‘கட்’ ஷாட்டாக இருந்தது. நடை எளிமையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை