Skip to main content

மீண்டும் ஒரு கவிதை!

வெண்ணிலா வதனம் கண்டேன்

செந்நிலா அதனில் கண்டேன்.

என்னவோ என்றிருக்க -
திலகம் என்று நீ உரைத்தாய்.



மூக்கின் குழலா ?

மூங்கில் குழலா ?

காற்றை எடுத்து கீதம் தருதே!



அதரங்களா

மதுரங்களா?

தேனின் சுவை கண்டுகொண்டேன்!


கண் விழியா ?

வன் குழியா ?

என்னை இழுக்குதே!


வேதனை நிலையில்

கொத்திதாலும்

வெள்ளரி பழமாய் உன் பேச்சு

குளிரச் செய்யுதே!


(உந்தன்)

சுட்டுவிரல்

அசைவிலே

சுத்துதே

உலகமே!


பட்டு மேனியை

தொட்டு பார்த்தால்

நெஞ்சில் சுகமே!


விட்டு விலகும்

நேரமெல்லாம்

சுட்டு விடுதே

நெஞ்சம்

முழுதும்!

Comments

  1. மீண்டு வரவேண்டும். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. அருமை கார்த்திக், வார்த்தைகளை நன்றாக உபயோகித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. லா லா ளா ளா யா யா, இப்படி வருவது அழகா இருக்கிறது

    ReplyDelete
  4. காதலின் கவிதை.கலக்குறீங்க கார்த்திக்.

    //தென்னங்கல்லா ?//

    இங்க கொஞ்சம் திருத்திடுங்க.கவிதையின் கருத்தையே மாத்திடுது.

    ReplyDelete
  5. ஹேமாவை நான் வழிமொழகிறேன். உங்க எல்லா படைப்புகள்ளையும் நான் அங்கங்க சில எழுத்துப்பிழைகளை பார்க்குறேன். நீங்க Phonoticல அடிக்கிறீங்கனு நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கவனமா அடிச்சீங்கனா நல்லா இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.