Skip to main content

Posts

அரசியல் அவியல் : தன்மானம் காத்த தமிழர்கள்

அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான். மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?) தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம்.  இப்போதும் விளையாடி உள்ளார்கள்.  காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு.  தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும்.  காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம்.  இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது. ...

அப்பாவும் அவர் நண்பர்களும்

நே ரமும் வேலையும் இந்தியாவில் போட்டி போட்டுக்கொண்டு நம்மை தின்கின்றன. அதுவும் அலுவலகங்கள் வேறு மாவட்டத்தில் இருப்பது போலத்தான் உள்ளது இங்கு. சென்னை வந்த நாட்களில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் அதிகம். அலுவலக நாட்காளில் நம்முடைய சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கை ஆகிவிடுகிறது. சனிக்கிழமை அயர்ச்சியை போக்கவும் ஞாயிறு தொலைக்கட்சிகளில் தொலைந்து போகவும் என்று வாழ்க்கையை கவனிப்பார் அற்ற குழந்தையாக விட்டு விடுகிறோம். நம்முடைய குழந்தை வளர்ப்பு நாளைய நாட்டின் நிலையை நிர்ணயிக்கும் என்கிற நிலை நம்மில் பலருக்கு உரைத்ததாய் தெரியவில்லை. குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் எந்திரங்கள் என்கிற நிலை இன்னும் மாறவில்லை. அப்பாவின் நண்பர்களை சந்தித்தேன். வழக்கம் போலவே கவிதை சமுதாய தொண்டு அப்புறம் என்றும் மாறாத நகைச்சுவை. அப்பாவின் நண்பர்களில் ஒருவர் மின்னல் பிரியன் - செயற்கை கால்கள் செய்து தருகிறார். இவருடைய பணிக்கு உதவ நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் - 9842293774  - நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளலாம். என் அலுவலக நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்ல சொன்னார். மனித தேனீ திரு சொக்கலிங்கம் அவர்கள...

கணினி : உயிரை தின்னும் கண்ணி நீ ? - I ( Super Computer)

எதோ ஒரு ராணுவ தலைமையகம். இந்தியா. மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டிடதிற்குள்ளும்தான். மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம்  வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t  ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன். வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு  வழியாக இளைஞனின்  முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. "ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள். விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. "ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது. தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ... அந்த பெண்ணை பார்த்தான். கண்களை மூடினான். மனக்கண்ணில் ... காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள் ...

மீண்டும் ஒரு தொடர் கதை

நீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை. என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர். உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன.  கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள். இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு. கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்...

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர். கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது. கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை. கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன. இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன. உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்ட...

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார். பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன். பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள். புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர்...