Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, December 11, 2010

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும்.

வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது.

தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள்.

இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு.

கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு.

இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம்.

வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை  நான் பார்த்து உள்ளேன்.

இவர்களில் பெரும் பகுதியினர் சமண அல்லாத புத்தம் சார்ந்தும் இருந்து உள்ளனர். ஒரு நிலையில் சைவர்களாக  மாறி உள்ளனர்.

இவர்களின் பூசை தளங்களில் இந்த தாக்கம்   தெரிகிறது. முதலில் தங்களை பார்த்துக்கொள்வது பின்னரே இறைவனின் படங்களை பார்ப்பது என்பது சைவம் சாராத  இவர்களின் முந்தய மதங்களின் தாக்கமாகவும் இருக்கலாம்.

சாந்தோ சுன்னாம்போ அல்லாமல் வேறு கலவைகள் கொண்டு இவர்கள் கட்டிடம் கட்டிய கலை ஊமைத்துரையின்  கோட்டை கட்டிய முறையோடு கொஞ்சம் ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன்.

இவர்களின் கட்டிட காலையில் மரவேலைப்பாடுகள் அதிகம் பேசப்படுபவை. மரம் என்கிற காரணத்தாலேயே அழிந்து போன பூம்புகார் நகரத்தின் இவர்களின் கட்டிட கலையின் மிககப்பெரிய பகுதி காணாமல்  போய்   இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்கள் பிற்காலத்தில் மரவேளைப்படுகளுக்கு மாறி இருக்க வேண்டும்.

தொடரும்

6 மறுமொழிகள்:

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களை குறிப்பு போல் எழுதினால் எந்த வித தாக்கத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளும் உள்ளூம் புறமும் வெளியே வாருங்களேன்.

வணிகர் என்றால் பூம்புகார் குறித்து நடந்த வாணிபங்கள் குறித்து கொண்டு செலுத்த முடியும்.

ராஜராஜ சோழன் கட்டிடக்கலையை கோவிலைப் பற்றி விஸ்தாரமாக எல்லோருமே விவரிக்கிறார்கள். ஆனால் எப்படி சாத்யமானது? அடிப்படை மக்களின் பங்களிப்பு என்ன? போன்ற விசயங்களை முழுமையாக புரிதல்களை தேடிக் கொண்டுருக்கின்றேன்.

ம.தி.சுதா said...

நல்ல மொழி நடையில் நகர்த்துகிறீர்கள் நன்றி சகோதரா....

மதி.சுதா.

நனைவோமா ?

'பரிவை' சே.குமார் said...

நல்லா போகுது உங்கள் வரலாற்றுப் பதிவு... இன்னும் எழுதுங்கள்.

ஹேமா said...

இப்போ எங்கள் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகளோடு உயர்ந்த கோபுரங்களோடு ஐரோப்பிய நாடுகளில் உருவாகி வருவது போல !

Priya said...

எளிய நடையில் நன்றாக எழுதி இருக்கிங்க... தொடர்ந்து எழுதுங்கள்!

வானவன் யோகி said...

\\ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும்\\

இதுபோன்ற வணிகர்களைத் தெரிந்துவைத்துள்ளதற்குப் பாராட்டுக்கள்.

மன்னர்கள் போல் வணிகர்களும் வாழ்ந்தார்கள் என்பதை வணிகத்தின் மூலம் சம்பாதித்த அரண்மனை போன்ற செட்டிநாட்டின் வீடுகளே சாட்சி.

ஆனால் இதே வணிகநோக்கில் நமது அரசியல் வியாதிகள் இந்தநாட்டைச் சூறையிடும் காட்சியைக் கண்டும் காணாமல் அவர்களின் ஊது குழ்ல்களாக கல்வியாளரும், நீதிமான்களும் மாறி நிற்பதைக் காணும் போது எமதுள்ளம் பூரிப்படைகிறது.!!!!!????

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை