Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர்.

கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது.

கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை.

கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன.

இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன.

உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு.

கோட்டைகள் அழிக்கபடுவது - வீழ்ந்த மன்னனின் உடற் பாகம் தொரனவாயிலில் பத்திக்கபடுவது என்கிற நிகழ்வுகளும் தமிழ் மண்ணில் நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

கோயிலுக்கு உரிய மரியாதை கோட்டைகளுக்கு தரப்படவில்லை. அது தரைமட்டம் ஆக்கபடுவது பெருமையாக கருத்தப்பட்டது.  கோயில்களும் நொறுக்கபடுவது  விசித்திர்வர்மனின் காலத்திற்கு  முன் நடந்தே இருந்தது. 

விசிதிரவர்மனின்  முந்தய காலத்தில் கோயில்கள் சாந்து / மண்  கொண்டு கட்டப்பட்டவையாகவும் இருந்து இருக்கலாம்.
கடவுளர்கள் கற்சிலையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல்லவர்கள் குலத்தில் போகர் வந்திருக்கலாம் என்று அவர் பழங்கால முறையில் அதாவது கல் இல்லாத சிலையாக முருகரை பழனி மலையில் படைத்தார் என்பதும் சிந்திக்க வேண்டியது.

Comments

  1. நல்ல வரலாறு ஒன்றை அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  2. கடவுளர்கள் கற்சிலையாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல்லவர்கள் குலத்தில் போகர் வந்திருக்கலாம் என்று அவர் பழங்கால முறையில் அதாவது கல் இல்லாத சிலையாக முருகரை பழனி மலையில் படைத்தார் என்பதும் சிந்திக்க வேண்டியது.


    ...interesting.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு அக்கா...
    நிறைய விஷயங்களை அறிய முடிந்தது.

    ReplyDelete
  4. \\மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு.\\

    முன்தோன்றிமூத்தகுடியாக நாம் இருந்திருக்கும் போது நிச்சயமாக யாது ஊராயிருப்பினும் யாவரும் நமது கேளிர் தவிர வேறில்லை.

    ஆனால் போகர் அவரின் குரு காலாங்கிநாதர் சீனத்தைச் சேர்ந்தவர்கள்.காலாங்கியின் குரு நமது திருமந்திர ஆசான் திருமூலர் என்றும் போகர் 7000 என்ற நூல் கூறுகிறது.

    அவரின் பழனி முருகன் சிலைக்கு,அதன் தொழில் நுட்பம் ”அணுக்கரு” இணைப்பை அடிப்படையாகக் கொண்டது.

    அவ்வளவு முன்னேறிய தொழில்நுட்பம் பழந்தமிழர் சொத்து.ஒரு பதிவே இடும் அளவு நீண்டதாகையால் எனது இடுகையில் விளக்கமாக எழுத விழைகிறேன்.

    தங்களின் பழமை வரலாற்றை மறவா தமிழ் நெஞ்சத்திற்கு எனது வந்தனங்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  5. கார்த்திக்....இருந்திருந்து பதிவு தந்தாலும் சுவாரஸ்யமான பதிவுகள் தாறீங்க !

    ReplyDelete
  6. @வானவன் யோகி - நீங்கள் சொல்லவதில் உள்ள ஒரு கருத்து போதி தர்மரின் வாழ்வோடு ஒத்து இருப்பதாக உணர்கிறேன். இந்த குழப்பத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன். இந்த குழப்பம் உண்மை என்று இருந்தால், பல்லவர்கள் வழி வந்தவராய் போகர் இருக்க வாய்ப்புகள் உண்டு. போதி தர்மரை புத்தி தார பல்லவர் என்று கொரிய திரைப்படம் ஒன்றில் படித்தேன். போதி தர்மரின் வாழ்வுக்கும் போகரின் வாழ்வுக்கும் ஒற்றுமைகள் நிறைய உள்ளன. உங்களை போன்றவர்கள் இதில் நான் தெளிவடைய உதவ முடியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.