எதோ ஒரு ராணுவ தலைமையகம்.
இந்தியா.
மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது.
அந்த கட்டிடதிற்குள்ளும்தான்.
மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம் வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன்.
வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு வழியாக இளைஞனின் முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது.
"ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள்.
விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு.
"ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள்.
அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது.
தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ...
அந்த பெண்ணை பார்த்தான்.
கண்களை மூடினான்.
மனக்கண்ணில் ...
காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள் பின்னோக்கி நகர்ந்தன வேகமாய்.
அவனுடைய கால்கள் பின்னோக்கி நகர்ந்தது வேகமாய்.
மூன்று மாதங்களுக்கு முன்னர்.
நியூ யார்க் நகரம்
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்.
சுரங்க பாதைகளில் தொடர்வண்டிகள் மக்கள் கூட்டத்துடன் சீரும் பாம்புகளாய் பறந்தன.
அதில் ரூபனும் இருந்தான். ரூபன் நிரஞ்சன் இந்திய வம்சாவளி கொண்ட அமெரிக்க அறிவியல் வல்லுனன்.
தொலை பேசி கினுகினுத்தது....
"ரூபன் நிரஞ்சன்" - ரூபன் தன்னை அடையாளபடுத்திக்கொன்டான்.
அந்த தொலை பேசி அழைப்பு தான் அவனது வாழ்வை முழுமையாக மாற்றி விட்டு இன்று நாட்களை முழுங்கி விட்டு போய் உள்ளது.
அந்த அழைப்பை செய்தது இந்திய இராணுவம். அந்த அழைப்பு என்ன வென்றால் .....
தொடரும்
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
4 மறுமொழிகள்:
நல்ல தொடக்கம் கார்த்திக்.... தொடருங்கள்
HAPPY NEW YEAR, KARTHIK!
//அந்த அழைப்பை செய்தது இந்திய இராணுவம். அந்த அழைப்பு என்ன வென்றால் .....//
aahaa..eppadi aniyaayathukku suspense...
Happy new year
thanks
அருண் பிரசாத்,
Chitra
அப்பாவி தங்கமணி
Post a Comment