Skip to main content

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார்.

பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன்.

பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள்.

புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர். புத்த மத்ததில் அப்போது கடவுளர் கிடையாது. ஆனாலும் புத்த மதம்  சார்ந்தோர் இந்து மத கடவுளரை வழிபட்டு உள்ளனர். முருகன் அவர்களின் கடவுளர்களில் உண்டு. தற்போது சமண மதம் சார்ந்த என் நண்பர்கள் சிலர் திருமகள் திருநாள் ( தீபாவளி அன்றோ அல்லது முந்தய நாளோ ), அனுமன் பிறந்தநாள் என்று கொண்டாடுகின்றனர். அது போல புத்தம் இருந்து இருக்கலாம்.

பல்லவர்களிடம் வட இந்திய மார்க்க தாக்கங்கள் உண்டு. அவர்கள் மாபாரதத்தை தங்கள் மக்களுக்கு கற்களில் ஆவன படுத்தினர்.  புதுச்சேரிக்கு அருகில்தான் அவர்களின் கற்கோயில் முதலில் கட்டப்பட்டது.

பல்லவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் சோழர்கள் வந்தனர். ஆனாலும் அவர்கள் அதை மனம் உடன்படாமலே  ஒத்துக்கொண்டனர். சில தருணங்களில் சோழர்களின் இருப்பை பல்லவர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில்தான் பேரரசர் என்கிறவர்கள் பல்லவர்கள் அவர்களின் பெரும் செயல்கள் போற்றத்தக்கவை என்கிற மன நிலை கொஞ்சம் கொஞ்சமாய் வந்து உள்ளது. பல்லவர்கள் போல் செயல்பட விருப்பம் கொண்டு இருக்கலாம். இதில் முழுமையும் உடன்பட இயலாவிட்டாலும் - பல்லவர்களின் கலையை அதுவும் கற்கோயிலை கடைபிடிக்க பாண்டியர்களும் பல்லவர்களும் விருப்பம் கொண்டு உள்ளனர். சேரர்கள் இந்த தாக்கத்தில் சிக்கி கொள்ளவில்லை.

இப்படிதான் காஞ்சியின் கோயில்களின் தாக்கம் தஞ்சையின் கோயிலில் உள்ளது என்று நினைக்கிறேன்.

பல்லவர் கோயில்கள் இடிக்க முடியாவண்ணம் இருந்தன என்பதை நோக்கும் போது இது ஏன் அரண்மனைகளுக்கு பின்பற்ற  படவில்லை    என்கிற சிந்தனயும் வந்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Comments

  1. Historical Pathivu...
    ariinthukolla vendiya pathivu...
    thodarungal.

    ReplyDelete
  2. புதிய தகவல்கள் கார்த்திக்... தொடருங்கள்

    ReplyDelete
  3. அனுமன் பிறந்தநாள்...புதுத்தகவல் கார்த்திக் !

    ReplyDelete
  4. சுவாரசியமான கேள்வியுடன் முடித்து இருக்கீங்க....சீக்கிரம் தொடருங்க.

    ...Welcome back!

    ReplyDelete
  5. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  6. வித்தியாசமாகத் தான் இருக்கிறத வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி அருண். அறிமுகபடுத்தியமைக்கு.
    நன்றி சே.குமார்
    நன்றி ஹேமா. அமெரிக்காவில் நான் இருந்தபோது சமண நண்பர்கள் கொண்டாடினர்.
    நன்றி சித்ரா
    நன்றி ம.தி.சுதா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு: கானாடுகாத்தான் யார் ?

மதுரையின் வரலாற்றை படிக்கிற தருணத்தில் சுந்தர பாண்டியன் பற்றி சொல்லும் போது - சோ நாடு  வழங்கிய பாண்டியன் என்று படித்த ஞாபகம். சோழ நாடு, சோ நாடு என்றே அழைக்கப்பட்டு இருந்தது. நாம் பேசும் பல வார்த்தைகளில் இன்று ஒலி எழுப்பும் பல எழுத்துக்கள் ஒரு காலத்தில் மௌன எழுத்துக்கள்.

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.