இது தமிழ் தல வரலாறு தொடரின் பகுதி இல்லை. இன்று தான் தமிழ் செம்மொழி மாநாட்டின் கரு பாடலை பார்த்தேன். ஏற்கனவே கேட்டிருந்தாலும், இந்த ஒலி-ஒளி வடிவம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பி பார்த்தேன்.
பாடலை கேட்ட தருணத்தில் நான் ரசித்ததை விட இந்த வடிவில் பார்த்ததும் கேட்டதும் பிடித்திருந்தது. முதலில் இந்த பாடலில் கொஞ்சம் மண் மனம் மங்கி உள்ளது என்கிற கருத்தை புறம் தள்ளி விடமுடியாது என்றாலும் - வடிவமைப்பில் விளம்பர யுத்தி போலவே தெரிந்தது.
தமிழ் மண்ணின் தமிழரின் பெருமை கொஞ்சம் அந்நிய தாக்கத்துடன் சொல்ல பட்டிருந்தாலும் - ரசிக்க முடிந்தது. என்னை ஈர்த்தது.
விமர்சனங்களுக்கு அப்பால் இந்த முயற்சி பாரட்ட பட வேண்டியதே. தமிழர்கள் இன்றும் ஒற்றுமையாய் இல்லை என்பது வேறு. ஆனால் தமிழ் மொழிக்கான விழா என்கிற போது மகிழ்ச்சி இதயம் நிறைத்தது.
அப்பாவி தமிழன் பல தருணங்களில் அழகிய வார்த்தைக்கும் முகத்துக்கும் மட்டும் அல்ல காசுக்கும் விலை போகிறான். தமிழனை திசை திருப்ப பல்வேறு வழிகள் கை ஆளப்படுகின்றன.
ஆனால் இது ஒரு திசை திருப்பலான விழா என்று கூறினால் - கடைசியல் தமிழனை திசை திருப்ப தமிழ் மொழி மாநாடு வேண்டி வந்தது என்றால் மகிழ்ச்சியே.
இதை பார்க்கிற போது என் நெஞ்சில் வந்த ஒரு கேள்வி - தமிழ் செம்மொழி இருக்கை ஏறி அமர்ந்துவிட்டாள். அதற்கு பின் நடைபெறும் பெரும் திருவிழா இது.
ஏன் இந்த ஆண்டை தமிழ் ஆண்டாய் மத்திய மாநில அரசுகள் அறிவிக்க கூடாது? இது ஒரு ஆசைதான். வடமொழிக்கு ஒரு முறை ஒரு ஆண்டு அறிவிக்க பட்டது என் நினைவில் உள்ளது.
இப்படி அறிவித்தால் பிற மொழியாளர்களும் கேட்க கூடும் என்று சிலர் சொல்லலாம். அது நல்லதே! இந்திய மண்ணின் மொழிகளை இந்தியாவில்தான் காக்கவேண்டும். மலையாளத்திற்கு ஒரு ஆண்டு மாரத்திக்கு ஒரு ஆண்டு அறிவித்தால் - அந்த ஆண்டில் அந்த மொழி பெருமை பரப்பபட்டால் நாமும் பிற மொழிகளை அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.
கன்னடத்திற்கு ஒரு ஆண்டு கோரப்பட்டால் - நான் ஆதரிப்பேன். உங்கள் பதில் யான் அறியேன்.
மொழிகள் மனிதர்களின் பண்பாட்டின் பல்லக்குகள். தமிழ் மொழிக்கும் இந்த ஆண்டை ஏன் அர்பணிக்க கூடாது. இந்த ஆண்டில் தமிழ் மண்ணில் எல்லோரும் தமிழில் கை ஒப்பம் இடுங்கள். தமிழர் உடை அணியுங்கள் பொங்கல் தமிழ் புத்தாண்டு அன்றாவது.
மத்திய அரசு அறிவிக்காவிட்டாலும் தமிழக அரசு அறிவிக்கலாம். அரசுகளால் இயலாமற் போனாலும் - நாம் ஏதாவது செய்யலாம். என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.
என்னை எத்தனை பேர் வழி மொழிகிறீர்கள் ?
வாழிய செந்தமிழ்!

நல்ல சிந்தனை ..
ReplyDeleteநான் வழிமொழிகிறேன் ..
அருமையான யோசனை !! ஆனால் எப்படி செயல்படுத்துவது ??
ReplyDeleteநன்றி செந்தில். இந்த சிந்தனையை பரப்புங்கள். இதை செயல்படுத்த - முடிந்தால் நண்பர்களிடம் ஆலோசிக்கவும்.நான் இது தொடர்பான சில வழி முறைகளை ஆராயலாம் என்று உள்ளேன்.
ReplyDeleteபெயர் இன்றி வந்தாலும் ஆதரவு நல்கிய நண்பரே.
ReplyDeleteநாம் எல்லோரும் ஏன் ஏடுகளுக்கு - ஆசரியர் கடிதங்களுக்கு எழுதக்கூடாது - இணையத்திலும் அஞ்சலிலும்.
அருமையான யோசனை. வரவேற்கிறேன்! இந்திய ஒற்றுமைக்கு இந்திய மொழிகளின் புரிதல் அவசியம்.
ReplyDelete