Skip to main content

த நா வரலாறு : மாமல்லபுரத்துக்கு அண்ணன்

குடை வரை கோயில்கள் தமிழ்மண்ணில் உருவாக பெரும் காரணமானவர்களில் ஒருவர் என்று போற்றபடுபவர் மாமல்லன் என்கிற மகேந்திர வர்ம பல்லவன்.

மாமல்லபுரத்தை கட்டுவதற்கு முன் மாமல்லன் கட்டியதாக சொல்லப்படுவது மண்டகப்பட்டு குகை கோயில். மண்டகப்பட்டு என்பது புதுவை அருகே உள்ளது. புதுவையில் இருந்து 50  கி மி தூரம் இருக்கலாம். மண்டகபட்டுதான் தமிழ் மண்ணின் முதல் குடை வரை கலைநகரம் என்று நம்பபடுகிறது. மண்டகப்பட்டு உருவான பிறகே மாமல்லபுரம் கட்ட மகேந்திர வர்மன் நினைத்ததாய் சொல்லபடுகிறது. காலத்தால் முந்தையது மண்டகப்பட்டு.

மாமல்லபுரத்தை அறிந்த அளவு தமிழ் கூறும் நல்லுலகம் மண்டகபட்டை அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறன்.

மண்டகப்பட்டு கோயில் கட்டும் தருணத்தில் தன்னை விசித்திர சித்தன் என்று மகேந்திரவர்மன் அழைத்துகொண்டான் என்கிறார்கள் சிலர். விசித்திர சித்தன் என்றால் விசித்திரமான கலைகள் கற்று அறிந்தவன் என்று பொருள். ( இவர் பதினெட்டு சித்தரில் உள்ளாரா ? ).

மகேந்திரவர்மனுக்கு முன் பல்லவர்கள் கட்டிய கோயில்கள் அழிந்து போய் இருக்கலாம் ( சில ஆவது ). அழிந்து போகும் கல்லாலும் மண்ணாலும் கோயில் கட்டமாட்டேன் என்று முடிவு எடுத்தானாம் பல்லவன் மகேந்திரவர்மன்.

எனவே குடைவரை கோயில்கள் கட்ட தீர்மானிதானாம். அவனுக்கு பின் பாண்டியர்களும் இந்த குகை வடிவத்துக்கு தாவினராம். தமிழ் நாட்டின் முதல் குகை வடிவகலை மண்டகபட்டாக இருக்கும்.

இதன் மூலம் அறியபடுவது என்னவென்றால் தமிழ் மண்ணிலும் கோயில்கள் அழிக்கபட்டு இருக்கலாம். பாமியன் என்று அழைக்கப்படும் ஆப்கானிய மலை பகுதியின் சிற்ப தோற்றங்கள் ப்ரிஹத் புத்த வடிவத்தில் இருந்து பிரஹதீஸ்வரர் ( பெரு மருது உடயார்) ஆலயம் தன் உருவாக்க தாகத்தை பெற்று இருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்களாம் ( பிர்ஹத் வடிவங்கள் பெரிய சிற்பங்கள் - பாமியான் சிலை 170  அடி உயிரமாம் - பெரு மருது உடையார் சிற்பமும் மிக பெரியது ).

சென்ற பதிவில் பார்த்த உதய கிரி மற்றும் அஸ்தகிரி வரிசூரில் உள்ளவை. அவையும் குகை கோயில்களே.

தொடரும்

Comments

  1. interesting news again..... :-)

    ReplyDelete
  2. Yes! The Story of TN is interesting :-)

    ReplyDelete
  3. ஆன்பர்ரே,

    பொதிதர்மர் ரீன் வரலாறும், போகார் ரீன் வரலாறும் கிட்ட தட்ட ஒன்றுபோல் உள்ளது . பொதிதர்மர் தமிழகத்தில் இருந்து சீனம் சென்ற துறவி . போகார் சீனத்தில் இருந்து தமிழ்ககம் வந்த சித்தர் . இருவருக்கும் ஒரு சீடர் . வைத்தியம் மற்றும் மாத்த்ின் மீது ஈடுபாடு . ஏன் இருவரும் ஒருவராக இருக்க வாய்ப்புகள் இல்லை ? . எனது கருத்து வளைகளில் கிடைத்த தகவலிஇல் இருந்து மட்டுமே .

    அன்புடன்
    ராஜா கந்தசாமி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.