தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Wednesday, May 19, 2010

த நா தள வரலாறு: குங் ப்ஹு தந்த காங்-ஷி

இப்படி ஒரு ஊர் தமிழ் மண்ணில் இருப்பது உங்களுக்கு தெரியுமா ? அது என்னங்க காஞ்சிதானே தெரியும் இது என்ன காங்-ஷி என்று யாரவது கேட்டால் அவர்களுக்கான பதில் - ரெண்டும் ஒன்றுதான்.

நமக்கு காஞ்சியை பல்லவ மண்ணின் தலைநகராய் தெரியும். உங்களுக்கு தெரியுமா சீனர்கள் தங்கள் வரலாற்று புத்தகங்களில் நம் காஞ்சியை பற்றி எழுதி உள்ளது.
உலகம் பெருமையோடு சொல்லும் சீனர்களின் குங் ப்ஹு என்கிற தற்காப்பு கலையின் தந்தையின் தாயகம் காஞ்சி. குங் ப்ஹு என்கிற இந்த அறிய கலை தமிழர் ஒருவரால் உருவாக்க பட்டது. அவர் பல்லவ குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பெயர் போதி தர்மர். போதி தர்மர் என்கிற புத்த துறவி காஞ்சி மண்ணில் இருந்து புறப்பட்டு சீனம் அடைந்த பின் சீனர்களுக்கு கற்று தந்த தற் காப்பு கலைதான் குங் ப்ஹு. குங் ப்ஹுவின் தாய் என்று பல தமிழ் கலைகளை சொல்லலாம். அவை - வர்மம், சிலம்பம் மற்றும் கலரிபட்டு. இன்று கலரி மலையாள மண்ணில் உள்ளது. தமிழ் மண்ணில் சிலம்பம் எதோ உயிரோடு உள்ளது. ஆனால் குங் ப்ஹு உலகம் அறிந்த கலையாக உள்ளது.

தமிழனின் பெருமை  குங் ப்ஹு என்று சொல்ல முடியாது - அது சீனர்களின் பெருந்தன்மை என்று தான் சொல்ல வேண்டும் - அவர்கள் அதை இன்றும் காத்து வருகின்றனர்.

காஞ்சிக்கு போனால் - போதி தர்மர் எந்த இடத்தில் பிறந்திருப்பார்- எங்கே புத்தம் பற்றியிருப்பார் என்றும் கேளுங்கள். நம் வரலாற்றை நாம் தான் தேடவேண்டும். தேடுங்கள்நண்பர்களே.

தொடரும் -

0 மறுமொழிகள்:

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை