தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Friday, May 21, 2010

த நா வரலாறு: வரலாறு தெரியாத தமிழன்

புதுக்கோட்டை மாவட்டம். அங்கே சிலகாலம் என் பள்ளி பருவம் கழிந்தது. நான் வாழ்ந்த ஊரின் பெயர் அறந்தாங்கி. அது என்னடா இடிதாங்கி மாதிரி அறந்தாங்கி என்று நான் பல தருணங்களில் யோசித்து உண்டு. இங்கு தான் அறம் தாங்கபடுகிறதாம்.

இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியின் கீழிருந்த பகுதி. அறந்தாங்கிக்கு என்று அரச பிரதிநிதிகள் இருந்தனராம்.
அறந்தாங்கியில் ஒரு கோட்டை உண்டு. நான் அறந்தாங்கியில் வாழ்ந்த நாட்களில் ஒரு முறை கூட யாரும் என்னை அங்கே அழைத்து போனதில்லை. கோயிலுக்கும் திரை அரங்குக்கும் அழைத்து செல்லப்பட்ட நான் - இந்த கோட்டைக்கு அழைத்து செல்லப்படவில்லை. அப்பாவின் தீவிர அலுவல் காரணமாக இருந்தாலும் - அதன் பெருமை எனக்கு புலப்பட்டவில்லை. ஒரு முறை ஒரு புதிய திரை அரங்கம் துவக்கப்பட்ட போது - அப்பாவை வற்புறுத்தி படத்திற்கு அழைத்து செல்ல வைத்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.

இந்த கோட்டை பற்றிய பெருமை இந்த ஊரை விட்டு வந்து கல்வி முடித்து வேலைக்கு சென்ற தருணத்தில் தெரிந்தது. இந்த கோட்டையின் வரலாற்றை அறிய முற்பட்ட போது ஆவணமோ சான்றோ ஏன் செவி வழி கதையோ கூட கிடைக்க வில்லை. அரசின் சிற்றரசன் அல்லது வரிவசூல் கண்காணிப்பாளர் ஒருவரின் மாளிகையாக இருக்கலாம் என்றாலும் இந்த கோட்டையின் சில விஷயங்கள் இது மிக விரைவில் கட்டி எழுப்பபடது போல தெரிகிறது. மண்தான் பிரதானம் கல்லோ மரமோ இரும்போ அல்ல. இந்த மாதிரி ஒரு கோட்டையை மிக விரைவில்ஊமைத்துரை  கட்டி முடித்தான் என்று வெள்ளை தளபதிகள் பதிவு செய்து உள்ளனர்.

இந்த கோட்டைக்கும் கட்டபொம்மன் வகை மனிதர்களுக்கும் தொடர்பு உண்டா என்றால் தெரியவில்லை. புது கோட்டை மாவட்டத்தில்தான் கட்டபொம்மன் பிடிபட்டார். அவரது தம்பி உமைதுரையும். அவர்கள் இந்த மண்ணில் இந்த கோட்டையை எழுப்பினாரா ?

இந்த கோட்டை தாங்கிய மனிதர்கள் அறம் செய்யும் மனிதர்களா ? அவர்களை தாங்கியதால் தான் இந்த மண்ணுக்கு இந்த பெயரா ? ஒரு மிகப்பெரிய வரலாறு இந்த மண்ணில் வேண்டும் என்றே புதைக்க பட்டுள்ளுதா ? அரசாங்கத்திடம் எந்தவொரு ஆதாரமும் இருப்பதாய் தெரியவில்லை. ஏதேனும் இந்த கோட்டையில் ஆராய்ச்சி செய்யப்பட்டு உள்ளதா என்றும் தெரியவில்லை. அறந்தாங்கியின்   பெயர் காரணம் கூட முழுமையாக தெரியவில்லை. இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கலாம். அதற்கு பிறகும் அறம் தாங்கி இருக்கலாம். அது ஒரு பெரும் வரலாறாக கூட இருக்கலாம். அறம் என்பது நல்லவர்களை நல்லவைகளைதாங்கியமையால் வந்ததா இல்லை மதம் இதில் உள்ளதா ?

புரிந்தாலும் புரியாவிட்டாலும் இந்த கோட்டை ஆராய்ச்சி முக்கியமாகபடலாம். கட்டபொம்மனுக்கு தொடர்ப்பு இருக்கலாம். வரலாற்றை பல தருணங்களில்  தமிழ் மண்ணில் புதைதிருகிறார்கள். வரலாற்றை தேடுவோம்.

தொடரும்.

4 மறுமொழிகள்:

அறிவன்#11802717200764379909 said...

நண்பர்,கார்த்திக் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி..
ஆனால் பிழையின்றி எழுதிப் பழகினால் நல்லது..
நன்றி..

Karthick Chidambaram said...

நன்றி நண்பரே! Google transliteration பயன்படுத்தவதால் - எழுத்து பிழைகள் உள்ளன. தவிர்க்க முயற்ச்சிக்கிறேன்.

அறிவன்#11802717200764379909 said...

நண்பர் கார்த்திக்,
ட்ரான்ஸ்லிட்ரேஷனுக்கும் எழுத்துப் பிழைகளுக்கும்-எழுத்து பிழை அல்ல எழுத்துப் பிழை-தொடர்பில்லை!
தள வரலாறு அல்ல த வரலாறு.
முயற்ச்சிக்கிறேன் அல்ல முயற்சிக்கிறேன்.

எனவே மொழியை பிழையின்றி அறிந்து பயன்படுத்துதல் முதலில்,எழுதுதல் பின்னர்.ட்ரான்ஸ்லிட்ரேஷன் என்பது ஒரு எழுது கருவி மட்டுமே..
அல்லது என்.எச்.எம் எழுது கருவியை பயன்படுத்துங்கள்..இணையத்தில் இலவசமாகவே தரவிறக்க முடியும்..
நன்றி..

Indian said...

தமிழக வரலாற்றிலான உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகள் கார்த்திக். தொடர்ந்து எழுதுங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை