தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, May 16, 2010

த நா வரலாறு : குமரிக்கண்ட மனிதர்களின் முதல் அடி ?

2012 என்று ஒரு ஆங்கில படம். பட்டயை கிளப்பிய படம். இந்த படம் சொல்லும் கதை ஒரு மிகப்பெரிய பேரழிவு. அதில் இருந்து மக்களை காப்பாற்ற நினைக்கும் ஒரு உன்னதமான மனிதன்.

இது போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்தித்த வரலாறு தமிழ் மண்ணிற்கு உண்டு. விவிலியம் நோவ என்கிற மனிதரின் கதை சொல்லும் போது - இப்படி பட்ட ஒரு பேரழிவு பற்றி பேசுகிறது. மச்சாவதாரம் பற்றி பேசும் போது வைணவம் கடற் பேரழிவு ஒன்று நடந்தது குறித்து சொல்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு தள வரலாற்றை தன்னிடம் கொண்டு அமைதி சாட்சியாய் நம்மிடம் வாழும் ஊர் சீர்காழி.

உலகம் ஒரு பேரழிவை சந்திக்கப்போவது குறித்த உண்மை ஒரு உன்னதமான மனிதனுக்கு தெரிகிறது. அவன் வெட்டியானை வேலை செய்திருக்கலாம். அவன் இந்த உண்மை அறிந்த மக்களை காப்பாற்ற தோணி செய்கிறான். மக்களிடம் சொல்கிறான். உலகம் அழியப்போகிறது என்று.

ஒரு கடல்கோள் நடக்கபோவதை சொல்கிறான். பலர் உணர்ந்துகொள்ள மறுத்தாலும் கடைசியில் அந்த நிகழ்வு நடக்கிறது. கடல் கொந்தளிக்க
குமரிகண்டம் திணறுகிறது. தோணியில் மக்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். முடிந்த அளவு எல்லா உயிர்களையும் காக்கிறான் சிவன் என்கிற அந்த வெட்டியான்.

எல்லா உயிர்களில் குறைந்தது ஒரு ஆண் ஒரு பெண் இருக்கிற மாதிரி பார்த்து கொள்கிறான். தோணி கிளம்ப - குமரி கண்டம் நீரில் மூள்கிறது.
நீண்ட பயணத்திற்கு பின் அவன் தொனியுடன் தரை தாட்டிய இடம் சீர்காழி.

சிவன் என்கிற உயிர் காத்த அந்த மனிதனின் பெயர் ஆகுபெயர் ஆகி உயிர் என்று பொருள் கொள்ள ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் அது வடமொழியை அடைந்த போது அது ஜீவன் என்று ஆனது என்று என் தமிழ் ஆசிரியர் சொல்ல கேள்வி. இது மோகன்ஜதரோவுக்கு முந்தய காலமாக இருக்கலாம்.

தொடரும்

6 மறுமொழிகள்:

ராஜ நடராஜன் said...

//ஆனால் இப்படிப்பட்ட ஒரு தள வரலாற்றை தன்னிடம் கொண்டு அமைதி சாட்சியாய் நம்மிடம் வாழும் ஊர் சீர்காழி.//

சீர்காழி மட்டுமல்ல!தோண்டத் தோண்ட புதையலாக நிறைய பின்னோக்கிய செய்திகள் நம்மிடம் தமிழகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.நவீன வாழ்வின் போராட்டத்திலும்,அரசியல் அந்தர்பல்டிகளிலும் நம்மை நாமே அடையாளம் வைக்காமல் செல்கிறோம்.

ராஜ நடராஜன் said...

Go to settings and mark Show word verification for comments? to No.


வார்த்தை உறுதிப்படுத்துதல் பின்னூட்டத்துக்கு தடங்கல்.நன்றி.

Karthick Chidambaram said...

நன்றி நண்பரே - வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும். உங்கள் ஆலோசனை நிறைவேற்றப்பட்டது.

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல முயற்சி கார்த்திக் வாழ்த்துக்கள்

Chitra said...

தமிழ் நாட்டின் தல புராணங்களை எடுத்து சொல்லும் முயற்சிக்கு பாராட்டுக்கள்! அருமையாக இருக்குதுங்க.

Karthick Chidambaram said...

மிக்க நன்றி @சித்ரா, @ கே ஆர் பி செந்தில்
தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை