Skip to main content

Posts

கணினி : உயிரை தின்னும் கண்ணி நீ ? - I ( Super Computer)

எதோ ஒரு ராணுவ தலைமையகம். இந்தியா. மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டிடதிற்குள்ளும்தான். மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம்  வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t  ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன். வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு  வழியாக இளைஞனின்  முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. "ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள். விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. "ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது. தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ... அந்த பெண்ணை பார்த்தான். கண்களை மூடினான். மனக்கண்ணில் ... காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள் ...

மீண்டும் ஒரு தொடர் கதை

நீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை. என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர். உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன.  கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - III

ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன்  என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள். இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு. கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது  வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்...

சோழர்களும் அவர்கள் தோழர்களும் - II

தமிழ் மண்ணின் வரலாற்றில் என்னை கவர்ந்த மாந்தர்களில் ஊமை துரை குறிப்பிட தக்கவர். கட்டபொம்மனின் வீழ்ச்சிக்கு பிறகு ஊமைத்துரை கட்டிய கோட்டையை பற்றி சொல்லும் போது அது ஒரு வார காலத்துக்குள் கட்டி முடிக்க பட்டது என்றும் அதற்க்கு பயன்படுத்தப்பட்ட கலவை கரும்பு முட்டை போன்றவை எல்லாம் கொண்டு இருந்தது  என்று சொல்லப்படுகிறது. கோட்டைகள் பெரும்பாலும் வேகவேகமாக கட்டவேண்டிய சூழ்நிலை இருந்து உள்ளது. அடுத்ததாக வீழ்ந்த மன்னன் கட்டிய கோட்டையில் வென்ற மன்னன் ஆழ விரும்பவில்லை. கோயில்கள் என்று வரும்போது - கோயில்கள் மதம் மாற்ற பட்டு உள்ளன. ஆக சில நேரங்களில் கல் கோட்டைகள் இருந்தாலும் அவை நொறுக்கவே பட்டு உள்ளன. இன்னும் ஒன்று அவசர கதியில் கோட்டைகள் கட்டப்பட்டாலும் அவை வலுவுடனம் பிரங்கி குண்டுகளை தாங்கும்  நிலையில் இருந்தன என்று ஊமைத்துரையின் கோட்டை பற்றி வெள்ளையர்கள் பதிவு செய்து உள்ளன. உலகின் சிறந்த தச்சர்கள், கட்டுமான வல்லுனர்கள் என்று தமிழர்கள் ஒரு காலத்தில் போற்றப்பட்டு உள்ளனர். தேவதச்சர்களாக ராமாயணம் வர்ணிக்கும் மாயன் மற்றும் நீலன் ஆகிவர்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புகள் உண்ட...

சோழர்களும் அவர்கள் தோழர்களும்

பல  நாட்களுக்கு முன்பு  நடந்த உரையாடல் அது. நானும் நண்பர் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். காஞ்சியின் கைலாசநாதர் கோயில் வடிவமைப்பு கலை பற்றி பேச்சு வந்தது. பல்லவர்கால வடிவமைப்பு என்றும் அதன் தாக்கத்தில் உருவானதே தஞ்சை பெரியகோயில் என்கிற கருத்தை நண்பர் முன்வைத்தார். பல்லவர்களின் ஆட்சியின் தாக்கத்தை விட அவர்களின் கலைஆதிக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. மதுரைக்கு அருகில் இருக்கும் வரிச்சூரில் உள்ளதாக சொல்லப்படும் உதயகிரி அச்த்தகிரி ஆகிவையும் பல்லவர்களின் கலை தாக்கம் கொண்டது என்று நானும் நினைக்கிறேன். பல்லவர்களின் கலை தாக்கம் அல்லது கலை தாகம் எப்படி பட்டது என்கிற போது - விச்சித்திர வர்மனின் வரலாறு நினைவுக்கு வருகிறது. அதுவும் விச்சிதிரவர்மன் தன் பெயரை விச்சித்திரவர்மன் என்று சூட்டிக்கொண்டதிற்கு சொல்லப்படும் காரணம் - அதாவது அவனுக்கு முந்தய பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்கள் யாவும் அழிக்க பட்டுவிட்டதாகவும் எனவே அவனது காலத்தில் அவன் கட்டிய கோயில்கள் இன்றும் நிலவுவதே அதற்க்கான காரணங்கள். புத்த மத வழிபாட்டில் ஒரு அளவுக்கேனும் பல்லவர்கள் ஆர்வம் கொண்டு இருந்து உள்ளனர்...

வெற்றி பெற்றவர்கள்

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று ஒருமிகப்பெரிய பட்டியல் இப்போது எல்லாம் தொலைக்காட்சிகளில் குற்றவாளிகள் என்று பெரிது படுத்தபடுகிறது. உண்மையில் நடந்திருப்பது வேதனைக்கு உரிய சுரண்டல். எதை தொட்டாலும் ஊழல் லஞ்சம் என்பது மக்களாட்சியின் இருத்தயம் வெந்து கொண்டு வருவதையே காண்பிக்கிறது. மன்னன் எவ்வழி மக்கள் எவ்வழி என்பது அரசர்கள் கால நடைமுறையாக இருக்கலாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடைமுறைபடுத்தப்படுவதே மக்களாட்சியாக இருக்க வேண்டும். நடைபெறும் நிகழ்வுகளில் மனம் வருத்தப்பட்டேன். பின்னர் சிலரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன். உலகில் வெற்றி பெற்றவர்கள் அல்லது இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் யார்? - என்பதே அந்த கேள்வி. யாரும் எந்த ஒரு போராளியின் பெயரையோ , மனித நேயரின் பெயரையோ  அறிவியல் மனிதரின் பெயரையோ , ஏன் மதபோதகர்கள் பெயரையோ சொல்லவில்லை. எல்லோரும் பணம் படைத்தவர்களின் பெயரையே சொல்லினர். போராளிகள் உருவாவது கட்டாயத்தின் அடிப்படையிலும் பணக்காரர்கள் உருவாவது தன் முனைப்பு ஆசையிலும் என்பதே நான் புரிந்து கொண்டது. வெற்றியின் அளவுகோல் பணம் என்று ஆகிவிட்டது. இன்னும் இம்மாதிரியான ஊளைகள் நிறை...

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.