Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Tuesday, May 24, 2011

புத்தர் தமிழர் சிங்களர் - V

சிங்களர்கள் என்று ஒரு மொழி இனம் உருவாக வேண்டிய நிலையை சங்க மித்திறரின் வரவோடுதான் பார்க்க வேண்டும்.

தேவனை நம்பிய(து) ஈசன் ( நம்பி ஈசன் என்கிற குடும்ப பெயர் இன்றும்  கேரளா மண்ணில் உள்ளது) என்கிற தமிழ் அரசரின் இதயத்தில் புத்த ஆட்சி என்கிற கருத்து இயல் விதைக்க பட்டது சங்க மித்திறரின் வரவில்தான்.

புத்தரின் பல்லையும் போதி மரத்தையும் காக்க அப்படி ஒரு நிலைப்பாடு தேவை என்கிற நிலைப்பாடு அப்போது சங்கமித்ரருக்கு தோன்றி இருக்க வேண்டும்.

மூத்த சிவன் வழி வந்தவர்கள் புத்த ஆட்சியை நிறுவ முனைந்தனர். சின்ஹலம் இந்த தருணத்தில் எங்கே இருந்தது என்கிற கேள்வி எனக்கு இன்னும் உண்டு. பாலி, வடமொழி மற்றும் தமிழின் அடிப்படையில் ஒரு மொழி உருவாக்கம் நிகழ்ந்தது. அதுவே சின்ஹலம் ஆனது.

இன்று பெருமையோடு பேசப்படும் சில சிங்கள கருத்து இயல்கள் சிங்களமே இல்லை என்பது சில சிங்கள ஆய்வாளர்களின் கருத்தும்.

ராவணனின் வழி வந்தவர்களும் - கும்ப கர்ணனின் வழி வந்தவர்களும் என்று பெருமை பகன்றவர்கள் பலர் சிங்களர் ஆகினர். சிங்க கோடி என்பது கும்ப கர்ணனின் கோடி என்றும் சில கருத்துகள் உண்டு.

சிங்கள மொழியின் உருவாக்கம் புத்தம் என்ற மாதத்திற்கான ஒரு பாதுகாப்பு மொழியாக உரு பெற்றது. சங்கமித்திரர் - புத்தரின் பல்லையும் போதி மரத்தை காக்க நிறைய சிந்தித்து இருக்க வேண்டும்.

இலங்கை வந்த புத்த கோஷர் போன்றவர்கள் - சிங்களத்தை கற்றுக்கொண்டனர். சிங்களம் கிட்டத்தட்ட பாலியின் இடத்தை எடுத்துக்கொண்டது. இதன் காரணமாகவே தமிழகத்தில் வடமொழி இருக்கும் அளவுக்கு கூட தனி பாலி இலங்கையில் இல்லை.

தேவநம்பி  ஈசருக்கு வந்த புத்த ஆட்சி - ஒற்றை ஆட்சி என்கிற கருத்து பெரிதும் வட தீவில் ( வட  இலங்கை) எதிர்க்க பட்டு உள்ளது. இதன் பொருட்டு சிவ இலங்கையும் ( சிலோனின் வேர் வார்த்தையாக இது இருக்கலாம் என்பது என் கருத்து) கேள தீவும் முகிழ்ந்தன.

சோழர்கள் பற்றி குற்றம் சொல்லும் சிங்கள மக்கள் திரளில் - ராஜராஜனுக்கு பட்டம் சூட்ட விழைந்த புத்த சிங்கள பிக்கு என்கிற ஒரு கருத்து புறம் தள்ளபட்டு உள்ளது.

தமிழர்கள் என்பதை விட சிங்களர்கள் தங்கள் எதிரிகளை சோழர்கள் என்கிற வட்டத்திற்குள் அடைக்க முற்ப்பட்டனர். தமிழோ அல்லது வேறு பூர்விக மொழியோ பேசியவர்களே சிங்கள மொழி பேசும் மக்கள் ஆகினர்.

மகிந்தர் என்று அழைக்கப்படும் அசோகரின் மகன் தமிழ் நாட்டில் பாண்டிய மண்ணில் மதுரைக்கு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் இருந்தே இலங்கைக்கான தன புத்த மதம் பரப்பும் பயணத்தை தொடங்கினார். வஞ்சி, காவிரி பூம்பட்டினம், காஞ்சி, தற்போதய சென்னையின் எழும்பூர், அம்பாசமுத்திரம் ஆகிவை அந்த சமயத்தில் புத்த நிலையங்களாக மாறி இருந்தன.

புத்தத்தின் கடைசி பிடியாக இந்தியாவில் சேரர்களின் கணவாய் பகுதியும் ( இது சிக்கிம் என்பது சிலரின் கருத்து), பாண்டிய நாடும், பல்லவ நாடும், சோழ நாடும், மகதமும் மட்டுமே இருந்தன. இதில் மகதம் மட்டுமே தமிழ் இல்லாத பகுதி.

புத்த மதம் இருந்த பகுததிகளில் எல்லாம் தமிழ் தாக்கம் உண்டு. இன்றும் தமிழின் தாக்கம் புத்த மதம் உள்ள இடங்களில் வழங்க படும் மொழிகளில் உண்டு. வாங்க மொழி கூட தமிழ் மற்றும் சீன கலப்பில் உருவாகி இருக்க வாய்ப்புகள் உண்டு - இது ஒரு புத்த ஆட்சியில் நடந்த ஒன்றே.

தமிழ் மண்ணில் இருந்தே சீனம், ஜப்பான் மற்றும் தாய் லாந்து நாட்டிற்கு தமிழ் புத்த துறவிகள் சென்று உள்ளனர்.

சிங்களம் மொழியின் அடித்தளதிலும் தமிழ் உண்டு. புத்தரின் வருகை சிங்கள வரலாற்றின் படி கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கவே.

தேவநம்பி ஈசர் வெற்றி பெற முடியாததை இன்னொரு புத்த மத அரசன் வேன்றேடுத்தான். அவனுக்கு தெய்வம் முருகன். முருகன் ஏற்கனவே தமிழர்களின் சின்னம் - தமிழ் மண்ணில் புத்த மதத்தவர்களும் மற்றவர்களும் வணங்கிய தெய்வம். இந்தியாவில் கூட ஏற்ற தாழ்வு இல்லாது வகையில் ஆறு மதங்களின் சங்கமத்தில் இந்து மதத்தின் ஆரம்ப நிலைய உருவாக முருகரே பயன்பட்டார்.

முருகரின் பிறப்பை குறை சொல்லவதை - வியாசர் தன் பாரத்தத்தில் எதிர்கிறார் - காரணம் முருகர் போற்றுதலுக்கு உரியவர் என்கிறார் அவர்.

இந்த வென்ற சிங்கள மன்னன் கூட சிங்களன் என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிட்ட வில்லை. ஆனால் அவன் தீவிர புத்த மதத்தவன் என்பது மட்டும் கிட்டிய உண்மை. இந்த மன்னரின் பெயர் - துட்ட காமினி. இஷ் என்கிற வடமொழி எழுத்து தமிழ் நிலையில் மாற்றப்பட்டே அவருடைய பெயராக விளங்குகிறது.

ஆனால் துட்ட காமினி காலத்தில் சிங்களம் இருந்து இருக்கலாம் - ஆனால் சிங்களம் துட்ட காமினியின் தாய் மொழியாகவோ - வழக்கு மொழியாகவோ இல்லமார் இருந்து இருக்கும்.

துட்ட காமினி சிங்களர் இல்லை என்றும் சிங்களர் என்றும் இரு கருத்துக்கள் உண்டு. ஆனால் புத்த மத பற்றாளன் இன்பத்தில் மாற்று கருத்து இல்லை.

சிங்கள இனம் - சிங்கள தேவைகள் எப்படி உருவாகின - தேடலாம்.

தொடரும்.

1 மறுமொழிகள்:

ஹேமா said...

ஒரு வித்தியாசமான சரிதம்.அதிசயித்தபடியே தொடர்கிறேன் !

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை