Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Tuesday, May 31, 2011

புத்தர் தமிழர் சிங்களர் - VI

முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது. 

உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம். 
இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும்.

ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல.

தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது. 

குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. 

சிங்களம் என்கிற இனம் இந்த தீவை  ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர  முயர்ச்சிப்பத்தின் வெளிப்பாடாக இது அறியப்பட்டாலும். தமிழர் நலன் தமிழ் பிரச்சனைகள் தீர்க்க புத்தர் வந்ததையும் இதுவே பதிகிறது.ஆனால் நேரடியாக இல்லை.

வேடர்கள் என்கிற இனத்தில் பெருமான்மையினர் சிங்கள மொழி கற்றுகொள்வது. தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் சிங்களம் கற்றும் புத்த விகாரைகளில் இருந்தது ஆகியவை - கொஞ்சம் புறம் தள்ளபடுகின்றன. 

வாகு மன்னர்கள் காலத்தில் - தமிழின் அவசியமும் - ஒற்றை மொழி ஆட்சி இயலாக்காரியம் என்பதும் காலம் உணர்த்துகிறது. ஆனாலும் அவர்களுக்கு சோழர்கள் எதிரிகளே.  

சேர மன்னன் செங்குட்டுவனின் அழைப்பை ஏற்று வாகு மன்னர்களில் ஒருவன் ஆனா கயவாகு வந்தார் என்றும் அவர் பத்தினி வழிபாட்டை தீவில் மேற்கொள்வோம் என்று சொன்னதாகவும் சிலப்பதிகாரம் சொல்கிறது.

பராக்கிரம வாகு ( சிங்களர்கள் பாகு என்கிறார்கள் ) வர்த்தகம்  புரிய தமிழர்களை அனுமத்திததும்; சேரர்கள் மற்றும் பாண்டியர்களிடம் வாகுகள் 
நட்பு கொண்டு இருந்ததும் தெரிகிறது.

சிங்களம் பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பெரும்பகுதி அந்த மண்ணின் மைந்தர்களே. சிங்களம் என்கிற கருத்து இயலின் தந்தைகள் தான் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆக இருக்க வேண்டும். 

புத்தம் அறிய சிங்களம் கற்பது தவறில்லை என்கிற நிலைபாட்டை புத்த கோஷர் என்கிற தமிழர் கொண்டு இருந்த்தது தெரிகிறது. சிங்களம் கற்றுக்கொண்ட நிறைய மனித்தர்கள் தமிழர்கள். சிங்களத்தின் அடித்தளத்தில் தமிழ் இருந்தது.
சிங்கள இனம் என்ற ஒன்றை உருவாக்கிய தீப வம்சம் - பெரும் வெற்றி பெறவில்லை. அதன் தரம் உயர்த்தப்பட்ட வடிவமாய் வந்தது - மகாவம்சம்.

தீபவம்சம் விட்டதை பிடிப்பது அதன் நோக்கமாய் இருந்தது.மகாவம்சம் ஏன் தேவை பட்டது ? தேடுவோம்.

தொடரும்
 
 

1 மறுமொழிகள்:

அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை