Skip to main content

இந்தியாவிற்கான பயணம்

எதிர்பார்த்து கேட்ட ஒன்று. கடைசியில் அமெரிக்க அரசாங்கத்தின் கருணையால் நடந்து விட்டது ( விசா முடிஞ்சுருசுல ).

இந்த முறை விசா நீடிப்போ, மீண்டும் விண்ணப்பிக்கும் என்னமோ இல்லை என்று சொன்னபோது மேலாளர் ஒரு மாதிரி பார்த்தார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் - நான் ரசித்த மண் அமெரிக்கா. நீங்களும் வாருங்கள் எங்கள் ரத்த கொடை நாளுக்கு. தொடர் நடை பயணத்திற்கு என்று தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட மனிதர்கள்.

ஏதாவது தவறாக செய்தால் அறைக்கு அழைத்து - நீ ஏன் இப்படி முயற்ச்சிக்க கூடாது. என்று எடுத்து சொன்ன வெள்ளைக்கார மேலாளர்.அவர் ஒரு இஸ்ரேலியர். நல்லது செய்தால் ஊரையே கூட்டி பாராட்டும் நல்ல மனிதர்.
அமெரிக்கர்களிடம் நிறையவே கற்றுக்கொண்டேன். அவர்களின் தேவைகள், சிந்திக்கும் தன்மை எல்லாம் வேறுபட்டதாக இருந்தது. காரணம் அவர்கள் வளர்க்கப்பட்ட முறை.

திருமணத்திற்கு பின்னும் பெற்றோருடன் வாழ்வீர்களா ? எப்படி இது என்று கேட்ட ஆப்பிரிக்க அமேரிக்க நண்பர்.மீண்டும் வா ... என்று தன் தனிப்பட்ட தொலைபேசி மற்றும் தொடர்புகளை தந்து உச்சி முகந்து அனுப்பிய சீனர்.எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்த கிரேக்கர்.கை குலுக்கி விட்டு நிறுவனம் மாறினாலும் தொடர்பில் இருக்கும் ஐரிஷ்க்காரர்.  இந்தியர்கள் என் நண்பர்கள் என்று சொல்லும் போலிஷ்காரர் ( போலந்தை சேர்ந்தவர்).
சிங்கை வழியாக பயணம் மேற்க்கொள்ள சொன்ன மலையாள நண்பர்.அமெரிக்கா திகட்டவில்லை. வேறு நாடு பயணிப்பேன் அடுத்த முறை என்ற போது - ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை விளக்கி அந்த நாடுகளுக்கு செல்ல சொன்ன ஜேர்மன் காரர்.
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிவிட்டு இன்று நான் வேலை பார்க்கும் கட்டடத்தில் பணியாற்றும் அந்த மனிதர்  நிறைய முறை என்னிடம் இந்திய வரலாற்றை கேட்ப்பார்.

நீ நன்றாக படம் வரைகிறாய் - ஏன் நீ ஊடக தொழிலுக்கு செல்லக்கூடாது ? என்று கேட்ட கிரேக்கர்.நீ ஆய்வுத்துறைக்கு செல் - என்று சொன்ன வெள்ளை நண்பர்.  ( யாரும் நீ தகவல் தொழில்நுட்பத்தில் இரு என்று சொல்லவில்லை :((()

இனிதே ஆரம்பம் ஆகிறது என் இந்திய பயணம் 10 ஆம் நாள் அதிகாலை சிங்கை வழியாக மதுரை பயணம்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் வருவேன். மீண்டும் சென்னையில் வாழலாம்.

பதிவெழுத நேரம் கிட்டுமா என்பது மட்டுமே தெரியவில்லை. கிட்டும் என்று நம்புகிறேன். உலக தலைவர்கள் படுகொலை தொடரை இயன்றவரை எழுதி முடிக்க முயல்வேன்.

சென்ற பதிவில் அருண் பிரசாத் கொலைக்கான காரணங்களை கேட்டார். வரும் பதிவுகளில் தெரிந்த காரணங்களை எழுத முயற்சிக்கிறேன்.
நாளையும் நாளை மறுநாளும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

Comments

  1. வாழ்த்துக்கள் கார்த்திக்.

    எந்நாடு என்றாலும் நம்மூரை போலாகுமா?

    எங்கு சென்றாலும் பதிவுலகத்தையும், எங்களை போன்ற நண்பர்களையும் மறந்துடாதிங்க.

    கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுவீங்கனு நம்புறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கார்த்திக்.
    கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
  3. நன்றி அருண் பிரசாத். நானும் அவ்வாறே நம்புகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி கலாநேசன்

    ReplyDelete
  5. சகல நாட்டவரையும் கவர்ந்தவறாக இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கார்த்திக்.
    தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
  7. ஹ்ம்ம்... அமெரிக்கா-வில் உங்கள் அனுபவம் குறிப்பிட்டது அருமை..
    தொடர்ந்து எழுதுங்கள்...கார்த்திக்..!
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி
    @தமிழ் உதயம்
    @சே.குமார்
    @ராம்ஜி_யாஹூ
    @Ananthi

    ReplyDelete
  9. Neatly written article :)

    ReplyDelete

Post a Comment