Skip to main content

Posts

தமிழுக்கு என்று ஒரு ஆண்டு!

இது தமிழ் தல வரலாறு தொடரின் பகுதி இல்லை. இன்று தான் தமிழ் செம்மொழி மாநாட்டின் கரு பாடலை பார்த்தேன். ஏற்கனவே கேட்டிருந்தாலும், இந்த ஒலி-ஒளி வடிவம் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் நம்பி பார்த்தேன்.

த நா வரலாறு: ஒன்றுபட்ட தமிழர்கள்

த நா தல வரலாறு எழுதும் எண்ணம் எதோ சிறுபிள்ளைதனமாக தோன்றிய ஒன்றே எனக்கு. அதிலும் எந்த விதமான ஆய்வும் செய்த மனிதன் இல்லை நான். நான் எழுதிய பல விஷயங்கள் நான் கேள்வி பட்டவை மற்றும் சிலர் கூற கேட்டவை அல்லது படித்தவை. பெரும்பாலும் அவை உண்மை என்பதை அறிந்தேன். அவற்றை சில தருணங்களில் படித்தும் உணர்ந்தேன். தமிழ் மண்ணில் தமிழன் ஒற்றுமையோடு வாழ்ந்ததே இல்லையோ என்ற கேள்வி என்னுள் நிறையவே உண்டு. தமிழ் சாதி ஒன்றே என்பதை விட தமிழரில் பல சாதி என்பதே உண்மை. தமிழன் தென் அமெரிக்காவின் முதல் குடி. தமிழன் மொழியை அடிபடையாக கொண்டு தாய் மொழி ( தாய் லாந்தின் மொழி ) தோன்றி இருக்கலாம். தமிழன் பண்பாட்டின் நீட்சி இன்றும் இந்தோனேசியாவில் உள்ளது. தமிழ் நாட்டின் வேட்டிதான் வெளி நாடு போய் லுங்கயாய் வந்தது. தமிழ் எண்களே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் எண்களின் அடிப்படை. தசமத்தை தமிழன் ஏற்றுக்கொண்டான். அதை பதிவும் செய்தான். ஆனால் வால்மிகியின் ராமாயணத்தில் கூட தமிழன் பிரிவுகளாய் சித்தரிக்கப்பட்ட அளவு அவனது ஒற்றுமை என்றும் சொல்லப்படவில்லை. உண்மையில் தமிழன் ஒன்று பட்டு வாழ்ந்ததே இல்லையா ? இந்த கேள்வி கேட்டபோது எ...

த நா வரலாறு : மாமல்லபுரத்துக்கு அண்ணன்

குடை வரை கோயில்கள் தமிழ்மண்ணில் உருவாக பெரும் காரணமானவர்களில் ஒருவர் என்று போற்றபடுபவர் மாமல்லன் என்கிற மகேந்திர வர்ம பல்லவன். மாமல்லபுரத்தை கட்டுவதற்கு முன் மாமல்லன் கட்டியதாக சொல்லப்படுவது மண்டகப்பட்டு குகை கோயில். மண்டகப்பட்டு என்பது புதுவை அருகே உள்ளது. புதுவையில் இருந்து 50  கி மி தூரம் இருக்கலாம்.

த நா வரலாறு: சிங்கம் வைத்த லிங்கம் ?

சில தருணங்களில் அந்த பக்கம் சென்று வந்து உள்ளேன். அதற்கு சமணர் மலை என்று பெயர். மதுரை மாநகரின் புறநகர் பகுதி. அந்த பகுதியை ஒட்டி ஒரு கல்லூரி ஒன்று தற்போது உள்ளது. சமணர்கள் நம் மண்ணில் ஆழமாய் கால் பத்திது இருந்ததன் வெளிப்பாடு அந்த மலை. மக்களோடு வாழாமல் இந்த சமண துறவிகள் வாழ்ந்தது இந்த மலையில். இவர்கள் ஆடை இன்றி வாழ்ந்தமையால் மக்களோடு வாழ்வது அவளவு வசதி படவில்லை. இந்த மலைக்கு அம்மணர் மலை என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.

த நா வரலாறு: கோட்டை இல்லாத ஊரா புதுகோட்டை ?

கடந்த பதிவில் அறந்தாங்கி பற்றி எழுதி இருந்தேன். அறந்தாங்கி கோட்டை பற்றி எழுதும்போதே நினைவுக்கு வந்த ஊர் கிழநிலை கோட்டை. 18  ஆம் நூற்றாண்டின் முடிவில் தென் இந்தியாவின் வரி வசூல் வேந்தர்களான நவாப்கள் தங்கள் அந்திம பொழுதை நோக்கி இருந்தனர். அவர்கள் புத்திசாலிதனமாக ஏற்கனவே தங்களின் வரிவசுலிக்கும் உரிமையை வெள்ளையர்களுக்கு வழங்கி இருந்தனர்.

த நா வரலாறு: வரலாறு தெரியாத தமிழன்

புதுக்கோட்டை மாவட்டம். அங்கே சிலகாலம் என் பள்ளி பருவம் கழிந்தது. நான் வாழ்ந்த ஊரின் பெயர் அறந்தாங்கி. அது என்னடா இடிதாங்கி மாதிரி அறந்தாங்கி என்று நான் பல தருணங்களில் யோசித்து உண்டு. இங்கு தான் அறம் தாங்கபடுகிறதாம். இப்படி ஒரு அழகான பெயர் கொண்ட அறந்தாங்கி தொண்டைமான்களின் ஆட்சியின் கீழிருந்த பகுதி. அறந்தாங்கிக்கு என்று அரச பிரதிநிதிகள் இருந்தனராம்.

த நா தல வரலாறு: சர்ச்சில் அறிந்த திருச்சி

இந்தியாவுக்கு பல பெருமைகள் உண்டு. நான் அயல் நாடு ஒன்றில்  ஒரு விமான சேவை நிறுவனத்தில் பயணிக்கும் போது பம்பாய் சரக்கு என்று ஒன்று மெனு அட்டையில் இருந்தது. இது உலக புகழ் பெற்ற சரக்கு இதை அருந்துவது மரியாதை - கவுரவம் என்கிற மாதிரி எழுதி இருந்தது. அப்புறம் நண்பர் ஒருவர் சொன்னார் அந்த மாதிரி ஒரு போதை பெருமை தமிழ் மண்ணுக்கும் உண்டு என்று. அந்த பெருமையின் பெயர் திருச்சி புகை இலை. சர்ச்சிலுக்கு மிக பிடிக்குமாம். அது என்ன திருச்சி போகயிலை என்று விசாரித்த போது அது திருச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புகை இலையாம். அனால் அது திண்டுக்கலில் பயிரிட பட்டதாம். திருச்சி மண் பலதருணங்களில் பலர் கைகளில் இருந்து உள்ளது. சோழர் தலைநகரம் என்கிற பெருமையும் அதற்க்கு உண்டு. ஆனால் அது ஒரு வளமான இலக்காக பல போர்களிலும் இருந்து உள்ளது. கடைசி போரை கர்நாடக போர் என்று அழைகிறார்கள். அது என்ன கர்நாடக போர் என்று கேட்டால். கருநாடக என்றால் தமிழில் பழைய நாடு என்று பொருள். கருநாகம் என்பதற்கு கூட அப்படிதான் பெயராம். முதலில் காவிரியை ஒட்டி நாடுதான் பழமை நாடு என்கிற கருத்தில் இது உருகொண்டிருகலாம். ராபர்ட் கிளைவ...