நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர
முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது. உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம். இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும். ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல. தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது. குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. சிங்களம் என்கிற இ