இப்படி ஒன்றை எழுதலாம் என்று எனக்கு ஒரு ஆசை. முடிந்தவரை எழுதவும் முற்சிக்கிறேன். தமிழ் நாடு என்று ஒன்று ஆரம்ப காலத்தில் இல்லை. தற்போதைய கர்நாடகம்தான் கிஷ்கிந்தை என்கிறார் ஒரு நண்பர். இந்த கிஷ்கிந்தையை சார்ந்தவர்களே குரங்குகள் என்று ராமாயணத்தில் சொல்லபட்டிருதாக அவர் சொல்வதற்கு பதில் எங்கள் மண்ணின் மைந்தர் அனுமன் என்றார். அனுமநிடத்தில் சீதை உள்ள இலங்கை எங்கு உள்ளது என்று ராமன் கேட்க அது சேர நாடு, பாண்டிய நாடு சோழ நாடு எல்லாம் கடந்தால் ஒரு கடல் வரும் அதை தாண்டினால் இலங்கை வரும் என்று அன்மான் சொல்கிறார். இது தான் தமிழ் நாட்டை பற்றி ராமாயணம் சொல்லும் செய்தி. சரி சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் என்ற பெயர்கள் எப்படி உறவாகி இருக்கும் ? என்று ஆய்வு செய்வது அவசிய படலாம். ஆனால் அவை நம் ஆய்வின் நோக்கம் அல்ல. நான் முதலில் தமிழ் மண்ணின் எல்லைகள் என்று விடுதலைக்கு முந்தய இந்தியாவில் பாரதி சொன்ன வேங்கடத்தையும் குமாரியையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகளை சுட்டி காட்டுங்கள். திருத்துங்கள். விமர்சனங்கள் வரவேற்கப்படும்! திருபதி என்கிற தற்போதய நகரத்தின் ஆரம்ப காலத்திய பெயர் திருப்தி...