Skip to main content

Posts

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 10

நான் சத்யா. அந்த கருப்பு ஆட்டை எங்கள் வழி காட்டியாக வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் வழியில் பயணித்தோம். எங்கள் ஜீப் அந்த காட்டு மலை பகுதிக்குள் சீறி பாய்ந்தது. பின்னல் எங்கள் படை. நாங்கள் அவன் சொன்ன இடத்தில் நிறுத்தினால் - அங்கே யாரும் இல்லை. "எனக்கு தெரியாதுங்க" - அவன் அலறினான். என் கை துப்பாக்கி அவனை பதம் பார்க்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து அந்த பழங்குடியின ர் அந்த பக்கம் வந்தனர். நாங்கள் அவர்களை வழி மறித்தோம். அவர்கள் கையில் குருவி சுடும் துப்பாகிகள் இருந்தன. "எங்கே மாடசாமி ?" - கேட்டேன் "தெரியாது சாமி" - அவர்கள் சொன்னார்கள். நான் இளைய பெருமாளை அழைத்தேன். இந்த கருப்பு ஆட்டை தீர்த்து கட்டிவிட திட்டமிட்டோம். நாங்கள் எங்கள் துப்பாகிகளை பயன்படுத்தினோம். அந்த கருப்பு ஆடும் மற்றும் சிலரும் எங்கள் தரப்பில் இறந்தனர். அந்த பழங்குடி கூட்டத்தில் எல்லோரும். யுத்தம் முடிந்த மாதிரி இருந்தது. மாடசாமிக்கு யார் அதரவு அளித்தாலும் தீர்த்துக்கட்டவேண்டியததுதான். இந்த பழங்குடி கூட்டமும் அவனின் ஆதரவு கூட்டாம் தான். நான் எங்கள் குழுவை பார்த்தேன். அவர்கள...

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 9

மீ ண்டும் நான் பைரவி. அந்த சத்தம் கேட்ட பிறகு நான் தரதரவென பாறைக்கு அந்த பக்கம் இருந்த ஒரு பெண்ணால் இழுத்து செல்லப்பட்டேன். எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் மாடசாமியின்  ஆட்கள். ஒரு நிலையில் என்னை இழுத்து சென்ற பெண் அடிவாயிற்றை பிடித்திக்கொள்ள. பாம்பட பாட்டி எங்கள் எல்லோரையும் பக்கத்தில் இருந்த குகைக்கு. என் காலில் ரத்தம் சொட்டியது. அந்த இளம் பெண் இழுத்ததில் என் கால் அருகில் இருந்த மரக்கிளையில் குத்தி ரத்தம் பட. என் சேலைத்தலைப்பை கிழித்து காலில் கட்டிவிட்டால் அவள் அப்போது. பத்தி சேலை தலைப்பு இன்னும் பாறையில் கிடக்கும். குகை இருளாக இருந்தது. இப்போது சத்தம் எதுவும் இல்லை. அந்த  இளம் பெண் சுருண்டு படுத்துக்கொண்டாள். மாடசாமியின் ஆட்களில் ஒருவன் வெளியில் போய் சில கிளங்குகளுடன் வந்தான். பாட்டி சமைத்தாள். சாப்பிட என்னிடம் நீட்டினால் பாட்டி. நான் மறுத்தேன். "சரி! அந்த புள்ளைக்காவது கொடு" நான் வாங்கிக்கொண்டேன். அவளிடம் நீட்டினேன். அவள் கண் விழித்தாள். சிநேகமாய் புன்னகைத்தாள். "தாங்க ராக்காயியக்கா" - வாங்கிக்கொண்டாள். வெளியில் மழை ஆரம்பம் ஆகி இருந்தது. ஓவென்...

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 8

க ரும் பாறை கருனைன்றி என் கண்களுக்கு முன்னால். அதில் அந்த சேலை தலைப்பு ரத்தக்கறையுடன். என் இதயம் என்னிடம் இல்லை. மெல்ல அதன் அருகில் சென்றேன் சேலை தலைப்பை எடுத்தேன். "மாட.....சாமி......" - நான் அலறினேன். காடு முழுக்க அது எதிரொலித்தது. நெஞ்சு வெடிக்க கதிரினேன். என் கை துப்பாக்கியை எடுத்து வானம் நோக்கி சுட்டேன். வேறு என்ன செய்ய முடியும் அருகில் இருப்பவர்கள் எல்லாம் எங்களவர்கள். எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் அதிர்ச்சி இருந்தது. என்னை விட அவர்கள் எல்லோரும் ஒரு அடி தள்ளியே இருந்தனர். நான் அங்கு வேதனையின் வலியில் துக்கத்தின் விழிம்பில் நின்று கொண்டிருந்தேன். என் கால்கள் வலு இழந்துகொண்டிருந்தன. நான் அந்த கரும்பாரையில் அவளுடைய சேலை தலைப்புடன் அமர்ந்தேன். அருவி என் கன்னத்தில் அறைந்தது. இந்த நதி அவளுக்கு நடந்த கொடுமையை பார்த்திருக்கும். நான் கண்களில் வைத்துக்கொண்டேன் அந்த சேலை தலைப்பை. வானத்தை பார்த்தேன். சூரியன் உச்சியில் இருந்தான்.நெஞ்சுக்குழிக்குள் அந்த நினைவுகள் விழுந்தன. அவளை நான் முதன் முதலில் பார்த்த நாள். எங்கள் திருமணம் ஒரு நிச்சயக்க...

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 7

நா ன்  சத்யா. எங்கள் திருமண வாழ்வின் மிக பெரிய துயரம் அது. கட்டியவளை   ஆறே மாதங்களில் பறி கொடுத்து விட்டு நிற்கிறேன். கட்டியவளை காப்பாற்ற முடியாத ஆண்மகன் நான். இந்த செய்தியை சொன்னவுடன் பெருமாளும் மற்றவர்களும் மௌனமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இருட்டு காட்டில் நாங்கள் புரியாமல் நின்று கொண்டு இருந்தோம். என்ன செய்வது ? எங்கள்தேடலில் எங்கும் அவள் கிடைக்கவில்லை. இருட்டு  காட்டுக்குள் குருட்டு பூனை திருட்டு மனிதர்களை தேடி அலைந்தால் இது தான் நடக்கும். விடிந்து விட்டது. சில காவலர்களுக்கு தூக்கம் கண்களில் ஆட்சி செய்ததது. எங்கள் படை குடில் அமைத்து கொண்டது. தூங்கினோம். நான் இந்த வேட்டைக்குத்தான் வந்தேன் ஆனால் தற்போது லட்சியம் மாறி உள்ளது. பறவைகள் இறை தேட பறந்தன. கதிரவன் பூமிக்கு வணக்கம் சொன்னான். இப்போதுதான் சிலர் தூங்கினர். தூக்கம் எனக்கு வரவில்லை. தொலைத்து நான். அழைத்து வந்தது தொலைத்து விடவா ? கண்களின் ஓரத்தில் கண்ணீர் சம்மனமிட்டது. ஒரு சிறுமி சுள்ளி போருக்க வந்தாள். குடில்களை பார்த்தவுடன் ஓடினாள். அவளோடு ஒரு இளம் பருவ மங்கை.இருவரும் இந்த மலை வாழ் மக்கள். கருதமேநியின...

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 6

அட! அவன் அல்லவா  இவன் ? மனதுக்குள் வெடி வெடித்தது. இவன்தான் மாடசாமி. இரவின் மடியில் படுத்து உறங்கியது எனக்கே தெரியாது. முகத்தில் கதிரவன் ஒளியை காய்ச்சி ஊற்றிக்கொண்டிருந்தான். கண் விழித்தேன். பாறைகளுக்கு நடுவே நான் படுத்து உறங்கிகொண்டிருந்தேன். எழுந்து பார்த்தால் யாரும் இல்லை. ஓடி விடலாம் என்று நினைத்தால். படுபாவி அவன் வந்து நின்றான். "என்ன சாப்புடுவீக ?" - அவன் முரட்டுதனமாய் கேட்டான். "என்ன ஏன் கடத்தின ?" "அங்கனக்குள்ள தண்ணியும் சோறும் இருக்கு. சாப்புடுங்க" சொல்லிவிட்டு போய் விட்டான். என்னை கட்டி போடவில்லை. மிரட்டவில்லை. ஆனால் அவனுக்கு தெரியும் நான் தப்பிக்க முடியாது என்று. அவன் ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நான் எதுவும் பண்ணமுடியாது ஆனால் சத்யா எப்படியும் என்னை காப்பாற்றுவார். அருவி பாறைகளில் மோதி கூச்சல் இட்டுக்கொண்டு இருந்துது. என் மீதும் தண்ணீர் துளிகள் விழுந்தன. வயிறு  கிள்ளியது. சாப்பிட நினைத்தது.சாப்பாட்டுக்கு பக்கத்தில் பல்பொடி.பல் விளக்கினேன்.  சாப்பிட மனமில்லை. போலீஸ் ஜீப்புகள் வனப்பகுதிக்குள் என்னை தேடி சுற்றிகொண்டிருக்கும். நான...

கராடே கிட்: சீனமும் அமெரிக்காவின் வலியும்

வெள்ளி மாலை இந்த திரைப்படம் செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம். ஏற்கனவே வந்த கராடே கிட் படங்களை பார்த்தவன் என்பதோடு மட்டும் அல்லாமல் - ஜாக்கி இருக்கிறார் என்பதாலும் - இந்த படம் நாங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் வந்து இருந்தது. மாலை நேர மயக்கத்தில் - வாரக்கடைசியின் துவக்கத்தில் திரைப்படம் பார்ப்பது மகிழ்ச்சி தருவது. நாங்கள் திரை அரங்கம் நோக்கி பயணித்தோம். திரை அரங்கில் கூட்டம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது. திரையில் படம் ஆரம்பிக்கையில் என் கண்களில் விழுந்த ஒன்று - படம் தயரிதவர்களில் ஒருவர் வில் ஸ்மித். அமெரிக்காவை பிரதிநிதுவபடுத்தும் மக்களில் நம் வண்ணத்தோடு ஒத்து செல்லும் இந்த ஆப்ரிக்க அமெரிக்கர்கள் நிறைய. நம்மவர்களும் இப்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஆகிவருகின்றனர். திரையில் படம் விரியும் போதே - நாயகனின் ( சின்ன பயங்க  ) தந்தை மரணடைந்துவிட்டார் என்பது வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டுவிடுகிறது. அப்போதே சரன்யவோ, மனோரமாவோ, சுஜாதாவோ தான் நாயகனின் தாய் என்று மூளை நினைக்க - தாயாக வேறு ஒருவர் வர - நாம் பார்ப்பது இங்கிலீஷ் படம் என்று மூளை சொன்னது. சீனாவிற்கு...

ஒரு அரவமில்லா காட்டில் ... பகுதி 5

எ ன் பெயர் பைரவி. நான் சத்தியமூர்த்தியின் மனைவி. நாங்கள் அந்த நாட்களில் தேனீ பகுதிக்கு சென்றோம். அந்த வெள்ளம் நிறைந்த காட்டு மலை பகுதியில் எங்கள் வண்டி பயணித்த போது இவர் இறங்கிஏதோ கத்திக்கொண்டு இருந்தார். நான் பயத்தில் உறைந்து இருந்தேன். துப்பாக்கி சூட்டுக்கிடையில்  எங்கள் பயணம் இருந்தது. எங்களுக்கு என்று மிக அழகான ஒரு வானமும், வனமும் அதன் அருகில் ஒரு வீடும் இருந்தது. மென்மையான ஓட்டி தரை. நெஞ்சம் கவரும் சூழல். இங்குதான் எங்கள் வாசம் என்கிற போது மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. எங்கள் வாழ்வின் தேனிலவு இது என்று இதயம் சொன்னது. ஆனாலும் துப்பாக்கியும் கையுமாக இவர் சுற்றினார். தடினமான ஜெர்கின் - தடினமான பூட்ஸ் என்று எல்லாம் இவர் இதயம்  போலவே. ஆனாலும் இவர்என் செல்ல காதலர். அந்த நாள் எனக்கு நிறையவே  ஞாபகத்தில் உள்ளது. இரவு பொழுது. நிலவு இந்த மண்ணில் குளுமை தந்துகொண்டிருந்தாள். பொன்னிற நிலவு சிதறிய நட்சத்திரங்களும் ஒரு அழகிய ஓவியம் போல இருந்தது. இவர் காவல்நிலையத்தில் இருந்தார். வருவதற்கு தாமதம் ஆகும் என்று தொலை பேசி அழைப்பு விடுத்து சொன்னார். இவர் தொலைபேசி அழைப்ப...