Bookmark and Share
தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Wednesday, September 8, 2010

பெருகிவரும் சிறுவயது தற்கொலைகள்

பள்ளி செல்லும் சிறுவர்கள் செய்து கொள்ளும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர் திட்டினார். நண்பன்  கேலி பேசினான். நடத்துனர் கடினமாக பேசினார் - என்று காரணங்கள் பல.

நடத்துனர்கள் மாணவர்களை சரியாக நடுத்துவது இல்லை என்று சிலர் என்னிடம் பேசும்போது சொல்லினர். அவர்கள் சொல்வது உண்மையோ என்று நினைக்கிற சம்பவங்களை நானும் நேரில் பார்த்தேன். இது வருத்தம் அளிக்கிறது.

ஆசிரியர்கள் அடிப்பது எல்லாம் இப்போது குறைந்தே உள்ளது என்று நம்புகிறேன். ஆசிரியர் திட்டினார் என்கிற காரணத்தால் தற்கொலை என்பது சரியான ஒன்றா - ஆசிரியர்கள் சிலரை மிக மோசமான தண்டனைக்கு உள்ளாக்குவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு தவறு. ஆனால் அவர் கடிந்து கொள்ளக்கூட கூடாதா என்பது விவாத பொருள். மண்டியிட்ட நாட்கள் எனக்கு நினைவில் இன்றும் உண்டு.

நண்பர்கள் கேலி பேசினர். இது மிகவும் வருத்தம் தரும் விடயம். நண்பனே எதிரி ஆவது - நல்லது அல்ல. சக மாணவன் அல்லது மாணவன் என்றே அவர்களை அழைக்க வேண்டும் - அவர்கள் நண்பர்கள் அல்ல.

இன்னும் ராகிங் கொடுமை இருக்கிறது - அதுவும் அண்ணா பல்கலையில் கூட என்கிற செய்திகள் வருத்தம் அளிக்கிறது.

எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம். மொஹெஞ்சதரோ நிலத்திற்கு அந்நிய படைகள் வந்தபோது - போருக்கு ஆயத்தம் அற்ற நிலையில் இருந்த ஒரு பண்பு உயர் கூட்டம் என்றே திராவிட மக்கள் வர்ணிக்கப்படுகின்றனர்.

மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும்.

6 மறுமொழிகள்:

ஹேமா said...

கார்த்திக்...நீங்கள் சொன்ன கடைசி வரி உண்மை.வாழ்வை எதிர்க்கும் சமாளிக்கும் அல்லது எதிர்பார்க்கும் மனநிலை இருந்துவிட்டால் இப்படியான சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை.

தமிழ் உதயம் said...

மனநிலையில் நாம் வலிமை இழந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். இவை மாறவேண்டும். ///

புற அழகிற்கு காட்டும் அக்கறையை, மனம் வலிமையடைய காட்ட வேண்டும். குறைகளை கண்டு பிடித்து தீர்க்க வேண்டும்.

Chitra said...

எதிர்த்து போரிடும் மனநிலை நம்மிடம் இல்லாமற் போவது வருத்தம்.


......ஒருவரின் பேச்சு, ஒருவரை மேன்பட வைக்க வேண்டுமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் விதமாக அல்ல. உறுதியான மனநிலை பெறுவது, ஒருவரின் தனிப்பட்ட personality யா? இல்லை, வளர்ப்பு மூலம் - பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்லி கொடுத்து - வருவதா என்று தெரியவில்லை. நல்ல இடுகை.

வானவன் யோகி said...

நன்றி சோதரா,...

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற மனநிலையில் மட்டுமல்ல,வேதமாகவே கைக்கொண்டிருந்துள்ளனர் நமது மூதாதைகள்.

ஆனால் நமது மக்கள் போதிய மனோவலிமை பெற்றிருக்கவில்லையெனவே எனக்குத் தோன்றுகிறது.

ஏனெனில் ஆரியக்கலப்புக்கு முன்போ,பிறகோ,ஒன்றல்ல,....ஓராயிரமல்ல,...
முப்பத்து முக்கோடி தேவர்கள்(90கோடி) முதல் இன்றைய இந்திய மக்கள் தொகை அளவில் தெய்வங்களை வைத்து இவர்களெல்லாம் உன்னைக் காப்பாற்ற உள்ளபோது எதற்கு பயம் என்று அவர்களுக்கு ஒரு மனோவலிமை உண்டாக்கப் புணையப்பட்ட பொய்களோ..!!?? என்ற ஒரு குழப்பம் எனக்கும் உண்டு.

உலகெங்கும் சென்றும் இன்னும் ஆங்கிலேயர்கள் பெற்ற வலிமை போன்று நாம் இன்னும் பெறவில்லை என்பது கண்கூடு.....

பல ஆலோசனைக்காரருள்ளவனை அழிக்கமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டால் இது போன்ற தவறான செயல்கள் நடக்காது.

வாழ்த்துக்கள்..வாழ்க...வளர்க..

'பரிவை' சே.குமார் said...

நான் சகோதரி ஹேமாவின் கருத்தையே Repeatuகிறேன்.

Karthick Chidambaram said...

நன்றி ஹேமா
நன்றி தமிழ் உதயம்
நன்றி Chitra
நன்றி வானவன் யோகி
நன்றி சே.குமார்

Post a Comment

Related Posts with Thumbnails

Pages

Powered by Blogger.

நான் தொடர்பவை