Skip to main content

புத்தர் - தமிழர் - சிங்களர் - I

தமிழ் மண்ணாகட்டும் வேறு எந்த மண்ணாகட்டும் வரலாறுகள் நடுநிலை தவறுவது என்பது இயல்பு. உண்மையான வரலாறு என்பது கிட்டத்தட்ட உண்மையாக இருப்பது இல்லை. அதற்காக வரலாறுகள் வெறும் கட்டுகதையாக - வெறும் புதினமாக இருக்க இயலாது. 

தமிழ் மக்கள் திரளில் வணிகர்களில் பெரும்பான்மையினர் ஒரு நிலையில் சமணர்களாக இருந்து இருக்கலாம் என்றும் பின் அவர்கள் சைவர்களாக மாறி இருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. 
இலங்கையை பற்றிய  வரலாறு தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. தங்கள் தமிழ் நாட்டு வரலாற்றை தெரிந்து கொள்ளும் நிலை 
தமிழர்களுக்கு வாய்த்து  இருந்தும் அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. 

புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது வரலாறு. அவர் நாகதீவில் இருந்த
தமிழ் மன்னர்களை சந்தித்தார் என்பது சிலரின் கருத்து. இந்த நாக தீவு இன்றைய இலங்கையின் ஒரு பகுதி என்பது கணிப்பு. புத்தர் தமிழ் மன்னர்களை சந்தித்த போது அவர் என்ன மொழியில் பேசினார் என்பது ஆய்வுக்கு உரியது. 

இயக்கர்கள் ( யட்சர்கள் ) மற்றும் நாகர்கள் இடையே இருந்த எல்லை தகராறு புத்தர் பேச்சுவார்த்தையால் தீர்ந்தது என்கிற கதை கூட உண்டு.

நாகர்கள் பற்றி நிறைய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உண்டு. அதிலும் வணிகர்கள் பலர் நாகர்கள். நாகர்கள் என்பவர்கள் பற்றி நானே ஒரு முறை எழுதி உள்ளேன். நாகர்கள் என்பவர்கள் நகர் அமைத்து வாழ்பவர்கள் என்பது அவர்கள் பற்றி தமிழ் சொல்லும் செய்தி. 

இலங்கையின் இனங்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகின்றனர். தமிழ் நாட்டில் இவர்கள் ஒரு பிரிவாக மட்டுமே கருதப்பட்டனர். இவர்களின் அடையாளங்கள் தமிழ் நாட்டில் இலக்கியங்களுக்குள் மிகுதியாக நின்றுவிட்டது. இவர்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செலுத்தினார்களா என்பது ஆய்வுக்கு உரியது. 

புத்தம் - பல புத்தர்களை தமிழர்கள் என்றே விழிப்பதாக கொரிய ஆய்வு என்று சொல்லி உள்ளது. புத்தி தார பல்லவர் ( போதி தர்மர் ) தமிழர்.  அமிதாப்பா புத்தர் கூட தமிழர் என்கிற எண்ணம் உண்டு. பிரசன்னா தாரர் கூட தமிழராய் இருந்து இருக்கலாம். சாக்கிய முனி கௌதம  புத்தர் தமிழ் பேசி இருக்கலாம். ஆய்வு தேவை.

தம்மபாலர்  தமிழர் என்பதும் சிலர் கருத்து. புத்தம் வளர தமிழ் - தமிழர் பெரிதும் உதவி உள்ளனர். வட மொழி வரவு தமிழ் மக்களிடம் இருந்து இந்து மார்கத்தை எப்படி பாதித்தோ அது போலவே தன் வளர் பருவத்தில் பாலி மொழியை தன் உத்தியோக மொழியாக புத்தம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் - சாக்கிய முனி கௌதம புத்தர் பேசிய மொழி அது என்பது. 

சமயம் சார்ந்த மொழிகள் பெரிதும் அழித்தே வந்து உள்ளன. பாலி என்கிற அருமையான மொழியும் அதற்க்கு விதிவிலக்கு இல்லை.

இயேசு எப்படி மக்கள் மொழியில் பேச முற்பட்டரோ அது போலவே அவருக்கு முன்னர் வாழ்ந்த புத்தரும் மக்கள் மொழியை தேர்ந்தெடுத்தார். 
காளிதாசரின் மேக சந்தேசம் பாலியை மக்கள் மொழி என்றும் வட மொழியை அரசர்கள் அவை மொழி என்றும் சொல்லாமற் சொல்லும். அந்த நூலில் காவலர்கள் பேசும் மொழி பாலியோ பிரகிரதாமோ தவிர வட மொழி இல்லை. 
ஆனால் பாலியும் இன்று நம்மிடம் இல்லை.

தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம். புத்தர் தமிழ் மண்ணில் திருச்சி மற்றும் தஞ்சைக்கு வந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உண்டு. அவலோக தீசர் என்கிற புத்த மத கடவுள் இன்னும் தமிழ் மண்ணில் உண்டு. அந்த இறைவனின் தளம் அம்பாசமுத்திரம் என்பது இன்றும் வாழும் உண்மை. எனவே புத்தர் இங்கு வந்து இருக்கலாம். 

புத்தரின் தமிழ் மண் பயணம் பற்றிய ஆய்வு நிறைய தெரியாத வரலாற்றை கொண்டு வரலாம். 

வரலாறு எப்போது ஒரு சுகமான பாடம். 

தொடரும் 
 
 

Comments

  1. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக !

    ReplyDelete
  2. தமிழ் வார்த்தைகளில் நிறைய பாலி வார்த்தைகளுடன் ஒத்து போகின்றன.புத்தரிடம் பேசும் போது - தமிழ் மன்னர்கள் மற்றும் அறிஞர்கள் - பாலியை பயன்படுத்தி இருக்கலாம்.


    ......சுவாரசியமான புது தகவல்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

இரண்டு மாநிலங்கள் : ஹிந்தியர்கள் கிண்டல்

நான் இதுவரை பார்த்த பல வடஇந்திய நண்பர்கள் இருண்டு மூன்று மாநிலங்கள் பற்றிதான் தெரிந்து வைத்து உள்ளார்கள். அவர்கள் கிண்டல் அடிப்பது இரண்டு மாநிலங்களை தான். சொல்லாமலே பலருக்கு தெரியும். ஒன்று நம் மாநிலம் என்று.

மதராசபட்டினமும் கூவமும் நீங்களும்

அது நீண்ட வருடங்களுக்கு முன்னாள் பார்த்த கலைவாணரின் படம். "என்ன அப்படி பாக்குற அது வைகை ... தண்ணி வெள்ளமா ஓடுத்துலா ?" - கலைவாணர் ஒரு காட்சியில் சொல்லும்  போது  பலரும் சிரித்து விட்டோம். இந்த படம் பார்க்கையில் மதுரையில் இருந்தேன். நாங்கள் பார்த்த வரை வைகையில் தண்ணீர் அதிகம் ஓடவில்லை. கலைவாணரின் காலத்திலும்தான். ஆனால் கலைவாணர் ஓடும் என்று தன நம்பிக்கையை விதைத்து இருந்தார். இன்னும் அந்த நம்பிக்கை விதை மௌனமாய் ஏதோ திரை சுருளுக்குள் சுருண்டு கிடக்கிறது. மதராசபட்டினம் படம் பார்த்தவர்கள் பலரும் சொல்லும் விடயம் - கூவத்தில் படகு விட்டதை. இப்பக்கூட விடலாம்தான். நீங்கள் போகமாட்டீங்க அதான் விடல. அந்த காலத்து சென்னையை / மதராசை காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்ப சென்னை எவ்வளவு அழகா இருக்கு என்கிறார்கள் படம் பார்த்துவிட்டு வருபவர்கள். என் நண்பர் சொல்வார் குழந்தையில எல்லாம் அழகாதான் இருக்கும் வயசாயடுச்சுனா .... போய்டும்பா. சென்னைக்கும் இதுதான் நடந்துவிட்டது என்று யாரும் சொல்லாதவரையில் நலம். விடுதலை பெற்ற தருணத்தில் சென்னை நல்லாத்தான் இருந்தது என்கிற எண்ணம் நிறைய பேருக்கு வருவத...