எதோ ஒரு ராணுவ தலைமையகம். இந்தியா. மெல்லிய மாலை வேலை. இரவின் சாயல் இந்த மண்ணில் இறங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டிடதிற்குள்ளும்தான். மருத்துவ சாய்வு நாற்காலியில் ஒரு இளைஞன். அருகில் அவன் முகம் பார்த்தபடி ஒரு இளம் வாடாமல்லி வண்ண (லைட் பிங்க்) t ஷர்ட் மற்றும் இளம் பச்சை வண்ண குறும் பாவாடையும் அணிந்து இருந்த வெள்ளைக்கார இள நங்கை. இவர்கள் போக ஒரு மருத்துவர் மற்றும் சில படை வீரர்கள் ஒரு படை தலைவருடன். வெளிச்சம், தலைக்கு மேல் இருக்கும் அதி ஒளி விளக்கு வழியாக இளைஞனின் முகத்தில் கொட்டிக்கொண்டு இருந்தது. "ரூபன் ... ரூபன்" - அந்த பெண் பயமும் மென்மையுமாய் அந்த இலைஞநை அழைத்தாள். விழிகள் மெதுவாக திறந்தது அந்த இலைஞகனுக்கு. "ரூபன் ..." கண்ணீர் துளி கண்களின் ஓரத்தில் எட்டி பார்க்க அவள் மெதுவாய் புன்னகைத்தாள். அவன் அவளை பார்த்தான். அங்கு இருந்த ஒரு நாள் காட்டும் கருவி அவன் கண்ணில் விழுந்தது. தன் கை கடிகாரத்தை பார்த்தான். இன்று ... அந்த பெண்ணை பார்த்தான். கண்களை மூடினான். மனக்கண்ணில் ... காலண்டரில் நாள்கள் ஓட்ட ஆரம்பித்தன வேகமாய். கடிகாரத்தின் முற்கள் ...