ஒரு கட்டிட கலை வேறு நாடுகளை நிலங்களை சென்று அடைய வேண்டும் என்றால் - அதற்கு அந்த மக்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வர்த்தகர்களும் அரசர்களும் செய்த மிகப்பெரிய பங்களிப்புகளில் இதுவும் ஒன்று. மயன்களின் கட்டிடகலையும் அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்கிற ஆய்வு நிலையை தொட்டது. தமிழ் வணிகர்களில் பலரும் நாம் அறிந்தவர்களாக இல்லை. ஏலேல சிங்கர் என்று சொல்லப்படும் வள்ளுவரின் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிகரும் சிலப்பதிகாரத்தில் வரும் மாசாத்துவான், மாநாய்க்கன் என்கிற வணிகர்கள்தான் நாம் அறிந்தவர்கள். இந்த வணிகர்களின் கட்டிடகலை ஆய்வுக்கு உரியது. இவர்களின் இல்லம் ஒன்றில் தங்க கலசம் இருந்ததாகவும் அதனால் அரசர் கோபம் கொண்டதாகவும் செய்தி உண்டு. கலசம் என்பது கோயில்களில் மட்டும் வைக்கப்படும் வடிவமைப்பாக இருந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இஸ்லாமிய கட்டிட காலையில் இது மிகசாதரனமாக உண்டு. இந்த வணிகர்களின் கட்டிடக்கலையில் இஸ்லாமிய தாக்கம் உண்டு என்று படித்த ஞாபகம். இது வேறு விதமாக இருந்தாலும் இருக்கலாம். வ (கால் பாகம் ? ) என்கிற எழுத்துடன் கூடிய சிற்ப வேலை கூடிய தூண்களை நான் பார்த்து உள்ளேன்.