Skip to main content

தமிழும் நாமும்

முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும்  வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம்.

நான் சில தருணங்களை நினைக்கிறேன்.

என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான்.

"தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க"

இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க".

மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு.

மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு.

படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும்.

தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.

Comments

  1. நல்லது. பகிர்வுக்கு நன்றி. கடைப்பிடிக்கிறேன்.

    ReplyDelete
  2. good post.... அய்யோ, சாரி...

    அய்யோ.... மண்ணிக்கனும், நல்ல பதிவு

    ReplyDelete
  3. சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.... மற்றபடி, முடிந்த வரை முயல்கிறேன்.

    ReplyDelete
  4. கார்த்திக்...நானும் கூடியளவு வேற்று மொழி வார்த்தைகள் கலக்காமலேதான் கதைத்து வருகிறேன்.என் இயல்பே இப்படித்தான்.

    ReplyDelete
  5. மொழிகள் பல பயில்வோம்..

    பன்மொழிப்புலமை பெறுவோம்.

    யாதும் ஊரே என உலகெங்கும் உலவுவோம்.

    ஆயினும் நாமார்க்கும் குடியல்லோம் எனப் போராடி நம் தமிழ் வளர்க்கும் செந்தமிழ் பேரினம்.

    எம் தமிழர் நீவிர்.. உமது கருத்தே..ஆயினும் எம்மனைவரின்...உளப்பாங்கு உமது வாக்கு..

    வாழ்க..வெல்க..உம்மைப் போன்றோரால் இறும்பூதெய்துகிறோம்....

    ReplyDelete
  6. நல்லது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு தமிழ் தான் எங்கள் மூச்சு... ஏனெனில் தமிழனுக்கு சொந்தமாயிருப்பது தமிழ் மட்டும் தான்...

    ReplyDelete
  8. உண்மைதாங்க கார்த்திக் சில சமயம் ஆங்கிலம் கலக்காம பேசணும்னு உறுதி எடுத்துகிட்டாலும் முடியறதில்ல... இது வருத்தத்திற்கு உரியது தான்... நல்ல பதிவு

    ReplyDelete
  9. நிச்சயம் முயற்சி பண்ணுவோம் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

த நா வரலாறு : அழிக்கப்பட்ட தமிழ் வரலாறு

இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட. மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன். கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே. முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

விஜய் டிவியும் தமிழ் கடவுளும்

என் கண்களில்  விழுந்த செய்தி அது. அப்போது நான் போதி தர்மரை பற்றி ஒரு ஆய்வை செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிலையில் போகரும் போதி தர்மரும் ஒன்றோ என்கிற குழப்பமான நிலை வந்தது. போகர் சித்தர், போதி தர்மர் - புத்தர். சித்தி பெற்றவன் சித்தன் - அதாவது ஆய்ந்து அறிந்தவன். புத்தி பெற்றவன் புத்தன் - அதவாது எப்போதும் விழிப்புடன் இருப்பவன். இவர்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. யோ என்கிற சீடன் போதிதர்மருக்கு இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு. புலிப்பாணி என்கிற சீடனை கொண்டிருந்தார் போகர். இருவரும் ஒருவரே என்கிற கருத்தும் உண்டு. போதி தர்மத்தில் குமாரசாமி அதாவது கௌமார மதத்தின் தெய்வம் வழிபட பட்டு உள்ளதா என்கிற கேள்வி என்னிடம் உண்டு. போதி தர்மத்தவர்கள் போலவே முருகன் சிலைகள் திருப்பதி மற்றும் பழனியில் நிறுவப்பட்டு உள்ளதாம். இதுவும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய ஒன்றே. திருப்பதி புத்த தளம் என்றும் அங்கே இருப்பது முருகன் என்றும் கருத்துக்கள் உண்டு. முருகன் போதி தர்மத்தில் வழிப்படபட்ட தருணத்தில் சாகிய முனி கௌதம புத்தன் தெய்வமாக இல்லாமல் இருந்து இருக்கலாம். முருகனின் அருளின் காரணமாக...