Skip to main content

புத்தர் தமிழர் சிங்களர் - III

புத்தர் அவர்களின் பயணம் பற்றிய ஆய்வு நிறைய கதவுகளை திறக்கலாம். தமிழ் மண்ணில் வசித்த புத்த கோஷர் என்கிற புத்த துறவி பிறந்து பின் இலங்கை வந்து நிறையவே புத்தம் படித்தார் என்பது நம்பபடும் வரலாறு.

புத்த மதம் சார்ந்த தமிழ் மனிதர்கள் பற்றி பேசும் போது அவர்களின் இயற் பெயர்கள் நமக்கு கிடைக்காதது சற்று வருத்தம் தரும் செய்தியே. ஆய்வுகள் பெரிதும் இந்த விடயத்தில் சரியான முடிவுகள் தர தவறி  உள்ளன. பிரசன்னா தரரின் மாணவராக இருந்து சீன மக்களுக்கு சஹோளின் புத்த மதத்தை சொல்லி கொடுத்த போதி தர்மரின் இயற் பெயர் - புத்தி தார பல்லவர் என்றும் அவரது தாதனார் பெயர் சிமவர்ம பல்லவன் என்பதும் இன்னும் குழப்பத்தில் உள்ள பெயர்களாகவே உள்ளன. தமிழ் மண் தான் ஆரம்ப காலத்தில் புத்தம் செழிக்க நிறைய உதவி உள்ளது.

தமிழ் மன்னர்கள் எம் நண்பர்கள் என்று அசோகரின் கல்வெட்டு சொல்கிறது. இந்த கல்வெட்டுகளின் வாயிலாக ஆய்வு செய்யலாம்.

புத்தர் காஞ்சியிலும் சென்னையில் எழும்பூரிலும் தங்கி இருந்து இருக்கலாம்.
தென்னாட்டின் கயா என்று சொல்லப்பட்டது சென்னையே.

தன் பயணத்தின் பொழுது அவர் திருச்சி மற்றும் தஞ்சையிலும் தங்கி இருந்து இருக்கலாம். திருச்சி என்கிற பெயரின் பின்னால் இருக்கும் பள்ளி என்பது சமண சமயமோ புத்த சமயமோ தந்த விகுதி.

திருச்சி மற்றும் தஞ்சையில் புத்த சமயம் சார்ந்த வரலற்று ஆதாரங்கள் பெரிதும் கிட்டியதாய் தெரியவில்லை.

காஞ்சியை பற்றிய குறிப்புகள் சீன நாட்டின் புத்த வரலாற்றில் பெரிதும் உள்ளன. பல்லவர்கள் பற்றிய குறிப்புகளும் தென்படுகின்றன.

தமிழ் மண்ணில் பல்லவர்களும் சோழர்கலுமே அதிகமாக புத்தம் வளர உதவி உள்ளனர்.

ஆரம்ப காலத்தில் புத்தம் வளர பல்லவ அரசர்களே பெரிதும் காரணமாக இருந்து உள்ளனர். பின்னர் சோழர்கள். புத்தர் காஞ்சியில் தங்கி இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம்.

அசோகரின் மகன் என்று சொல்லப்பட்டு மகிந்தர் மதுரையை ஒட்டிய அறிட்டபட்டி என்கிற இடத்தில் தங்கி இருந்தே இலங்கைக்கான தன் பயணத்தை திட்டம் இட்டதாக சொல்லப்படுகிறது.

புத்தரும் நாகையில் இருந்தே இலங்கை பயணித்திருக்க வாய்புகள் உண்டு. சூடாமணி விகாரம்  என்ற ஒன்றை ராஜன் ராஜன் காலத்தில் சாவக மன்னன் நாகையில் கட்டினான். அதற்கு     ராஜ ராஜன் முழு அனுமதியும் ஆதரவும் தந்தான் என்பது சோழர் கால வரலாறு.

புத்தர் அவர்களின் தாக்கம் தமிழ் மண்ணில் நிறையவே உண்டு. சன்மார்க்கம் என்கிற மதமாக இந்தியாவில் இருந்து ஆறு மதங்கள் இணைந்து உருவான போது - அதில் புத்தமும் இருந்து இருக்கலாம். அதை நாத்திகம் மதம் என்று குறித்து இருக்கலாம்.

குமார் வழிபாட்டை ஏற்றவர்கள் புத்தம் ஏற்றவர்கலாக்வும் இருந்து உள்ளனர். புத்த முருகர்கள் அணிகலன் இன்றி இருப்பர்.

அப்படி இரண்டு முருகர்கள் உள்ளதாக நான் கேள்வி பட்டேன். அதில் ஒன்று திரு வேங்கடதிலும் இன்னொன்று பழனியிலும் இருப்பதாக சொல்பவர்கள் உண்டு.

திருப்பதியில் இருக்கும் முருகர் அல்லது வேங்கடநாதர் அணிகலன் அணியாத ஒரு புத்த நிலை சிலை என்கிற சர்ச்சைக்கு உரிய வாதம் உண்டு. வியாழக்கிலமியில் அதி காலையில் திருவேங்கடம் சென்றால் அணிகலன் அணியாத அந்த வேங்கடநாதனை தரிசிக்கலாம் என்பதும் செவி வழியாக நான் அறிந்தேன். மேலே குறிப்பிட்டு உள்ள வாசகங்கள் வரலாற்றை தேடவே அன்றி யாருடைய நம்பிக்கையையும் சிறிதும் குற்றம் காண அல்ல.

பழனி முருகர் புத்த நிலையில் இருக்கிறார் என்பது - போகரும் போதி தர்மரும்
ஒன்றே என்று சொல்லப்படும் ஆய்வுகளும் உண்டு.

போகரின் சீடரும் போதி தர்மரின் சீடரும் ஒருவர்தான் என்றும் சொல்லப்படுவது உண்டு. போகரின் சீடர் பெயர் புலிப்பாணி. போதி தர்மரின் சீடர் பெயர் யோ. புலி போல் செயல்படுபவன் புலிப்பாணி. குங் ப்ஹு காலையில் கை தேர்ந்த யோ விலங்குள் போல் தற்காப்பு கலை புரிபவன்.

புத்தரை பொறுத்த வரை தமிழ் மண் வழியாகவும் தமிழ் மொழி வழியாகவும் தன் கருத்துக்களை பரப்பி இருக்கலாம். பின்னல் புத்தர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தமிழைத்தான் பயன்படுத்தி உள்ளனர்.

தமிழ் என்கிற வாகனத்தில் பயணித்த புத்தம் - தமிழர் பலரின் காரணமாக சீனம், தாய்லாந்த், இந்தோனேசியா என்று சென்றது.

தாய்லாந்து ராமாயணம் தமிழ் ராமாயணத்தின் புத்திசாலிதனமான வடிவமாக தெரியும். அதற்கு ராமகியான் என்று பெயர்.

தமிழ், தமிழோருடு புத்தம் தொடரும்

Comments

  1. இலங்கையில் புத்த விகாரைக்குள் அத்தனை இந்து மதக் கடவுளர்களும் இருப்பார்கள்.கதிர்காமக் கந்தனைத் தங்கள் கடவுள் என்றும் சொல்கிறார்கள் !

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மைதான். சமண தளங்களில் நிறைய இந்து கடவுளர்கள் உண்டு. அவ்வாறே புத்தமும்.
    காரணம் ஆரம்ப நாட்களில் அவை மதங்கள் அல்ல - வாழ்க்கை நெறி தான்.

    சமணர்களின் வாழ்வியல் போதனயாளர்களில் மிக முக்கியமானவராக திருவள்ளுவர் சரவணா பேல கோளாவில் கணிக்கபடுகிறார்.
    இந்த தளம் கர்நாடகாவில் உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆங்கிலத்தில் எழுதுங்கள்

நண்பர்கள் சிலர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்று கேட்டு உள்ளனர். சிலர் தொழில்நுட்பம் பற்றியும் எழுத சொல்லி உள்ளனர். நான் ஆய்வாளன் என்கிற மாதிரி சில நண்பர்கள் என்னோடு பேசினார். ( இன்னுமாயா உலகம் நம்மள நம்புது ?). என்னுடைய ஆய்வுகளை (?) அவர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள விருப்பம் தெரிவிகின்றனர் ( ஏன் இந்த வீண் வேலை ) ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் ஒரு நண்பர் ஆய்வுக்கு அங்கே வந்தால் சொல்ல சொன்னார் ( அதெல்லாம் நடக்குற காரியமா ? ) சென்னை வரும் போது - இந்த முடிவுகளில் பயணிக்க விருப்பம் உண்டு. நான் இது வரை பெரிதாக ஆய்வு எல்லாம் செய்ய வில்லை. பெரும்பாலும் படித்தவை மட்டுமே. அதுவும் நான் நிறைய படித்தவன் என்று சொல்வது எல்லாம் இல்லை. Lenz101.com   என்கிற இணையபக்கம் ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. இந்த இணையபக்கம் துவக்கியதன் நோக்கமே வரலாற்றை படிக்கவே. ஆனால் சோம்பல் அதை முடக்கி போட்டு உள்ளது. மீண்டும் அக்டோபரில் தூசி தட்டலாம் என்று எண்ணம். இதனால் சகலருக்கும் சொல்வது என்ன வென்றால் -  நான் அடுத்த மாதத்தில் இருந்து ஆங்கிலத்திலும் எழுதலாம். படிக்க வாருங்கள்.

பெயரில் ஜீவன் இருக்கிறது ! (சிறுகதை)

நேற்றைக்கு நடந்தது போல் இருக்கிறது. ரேவதிக்கு குழந்தை பிறந்தது. ரேவதி என் மனைவிதான். ஆண் குழந்தை. சுகமாய் நடந்து இருக்க வேண்டிய பிரசவம் என்று நினைக்கிறேன். ஆனால் வயிற்ரை கீறிதான் எடுத்தார்கள். அதற்குள் ஒரு கலவரமே நடந்துவிட்டது. நாமே ஒரு நேரம் பார்க்கவேண்டுமாம் வயிற்ரை கிழிக்க. நல்ல காலம்டா! ஆமாங்க! அதேதான்!. நல்ல காலம் பார்த்தோம். வட்டம் போட்ட ஜோசியம். கட்டம் போட்ட ஜோசியம் என்று ஏகப்பட்ட ஜோசியம் பார்த்தோம். நிறைய நிறை குறை எல்லாம் ஆராய்ந்து ஒரு நேரத்தை நோட் பண்ணி கொடுத்தோம். வயித்த எந்த எடத்துல அறுக்கிறது என்று வாஸ்து தான் பார்க்கல. ஒரு நல்ல நேரத்துல புள்ளைய வெளியில எடுத்தாச்சு. அடுத்த ரகளை ஆரம்பிச்சாச்சு. என்ன பெயர் வைக்கலாம் ? இதுக்கும் ஒரு ஜோசியர் வந்தார். ஜோசியருங்க காட்டுல நல்ல மழை. நேம்-ஆலாஜி ஸ்பெசலிஸ்ட்; நியுமேராலாஜி அனலய்ஸ்ட்; எங்க ஆபிஸ் பழய டைபிஸ்ட். எங்க ஆபிஸ்ல தப்பு தப்பா டைப் அடிச்சப்போ அவன் பேரு தியாகராஜன். இப்ப யோகராஜன். பத்து விரல்லயும் மோதிரம். அதிர்ஷ்டமாம். “என்னங்க புள்ளைக்கு ‘ஷு’ -ல ஆர்மபிக்கிற பெயர் வைக்கணுமாம்” – ரேவதி சொன்னாள். நம்ம யோகராஜன் பர...

த நா வரலாறு : திப்புசுல்தான் ஒளிந்திருந்த திண்டுக்கல்

இந்த இடுக்கயோடு த நா வரலாற்றை கொஞ்சம் இடை நிறுத்தலாம் என்று எண்ணம். இன்னும் நிறைய எழுத வேண்டி உள்ளது.ஆனால் அதற்கு இன்னும் ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் ஆழமாய் எழுத வேண்டும்.