முதன் முதலில் தீபவம்சம் என்கிற நூல் தான் சிங்கள இனம் பற்றிய வரலாற்றை பதிந்தது. வரலாறு என்பது பல விபத்துகளை சந்திப்பது. உண்மையின் பலவீனம் அது திரிக்கபடுவது, மறைக்கபடுவது, மறக்கடிக்கபடுவது என்று மகாத்மா காந்தி சந்தை ஞாபகம். இந்த தீவின் வம்சம் நாங்கள் என்பதை சொல்ல நினைத்தது தீபவம்சம். எல்லா இனங்களும் தங்களின் பெருமைகளை சொல்லவே முற்படும். ஆனால் பல இனங்கள் இவற்றை ஒற்றை நூலில் சாதிப்பது இல்லை. புத்தம் மற்றும் கிருத்துவம் ஆகியவை ஒற்றை புத்தகத்தில் நிறைய வரலாற்றை அல்லது புராணத்தை ஒரு புதினத்தை போல அல்லது ஒரு தொகுக்கப்பட்ட பதிவை போல வழங்க விளையும். இது அவர்களை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வழி அமைத்து தரும். இந்த உக்தி பாராட்ட தக்கது. இதில் நிறைய லாபங்கள் உண்டு. ஆனால் தீபவம்சம் - ஒரு சமய புத்தகம் அல்ல. தீபவம்சம் தான் முதன் முதலில் மண்ணின் மைந்தர்கள் பற்றியும் வந்து குடி அமர்ந்தவர்கள் பற்றியும் சொல்கிறது. குடி அமர்ந்த சிங்களர்கள் உயர்ந்தவர்கள் என்கிறது. இங்கேதான் சிங்கள வரலாறு கொஞ்சம் நாடக தன்மை கொள்கிறது. சிங்களம் என்கிற மொழியும் சிங்களம் என்கிற இனமும் பின்னால் உருவானவை. ...