தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, March 12, 2011

அரசியல் அவியல் : தன்மானம் காத்த தமிழர்கள்

அரசியல் இப்போதெல்லாம் புரிவதற்கு கடினமாக இல்லை. செய்தியை படிக்கிறவன் அதன் உள்ளர்த்தத்தை சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறான்.

மக்கள் தெளிவாகவே உள்ளனர் அனால் தெளிவான முடிவை எடுக்க அவர்களின் நேர்மை தடுக்கிறது. (நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் ஆனால் பணம் வாங்கியாச்சு; கொடுத்த வாக்க காப்பாத்தனும் இல்லையா ?)

தமிழ் நாட்டில் இப்போது குட்டை குழம்பி உள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் முன்னதாக முடிவு செய்து இருந்தால் நிறையவே விளையாடி இருக்கலாம். 
இப்போதும் விளையாடி உள்ளார்கள். 

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெரிதாக எதுவும் சாத்தித மாதிரி எனக்கு தென்படவில்லை. தில்லி ஒரு விதிவிலக்கு. 

தற்போதைய ஆட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது மன்மோகன் சிங்கக்கு தெரியும். அவருக்கு அதிகாரம் என்ன என்பது உங்களுக்கு தெரியும். 

காங்கிரஸ் உண்மையில் தமிழ் நாட்டில் வளர நினைத்தால் தமிழர்களை பற்றிய சிந்தனை அதிகம் அவர்களிடம் வளர வேண்டும். மக்களாட்சி என்பது என்ன என்பதே தெரியாமல் நம்மில் பலர் உள்ளோம். 

இது தேர்தலை பாதிக்காது என்று ஊழல்கள் பற்றி சொல்லும் போது நாம் ரொம்ப நல்லவர்கள் என்பது தெரிகிறது.

அமெரிக்காவில் ஒரு முதல்வர் ( அந்த ஊரில் ஆளுநர் என்கிறார்கள் ) ஒரு காவல் துறை அதிகாரியிடம் மன்னிப்பு கோரி உள்ளார். 

இது துனைகண்டத்தில் ( இந்தியா, இலங்கை, வாங்க தேசம், பாகிஸ்தான் ) நடக்க வழி இல்லை. நம்முடைய மரபணு அப்படி. பக்கத்தில் ஒரு கூட்டம் முழுமையாக அழிந்தால் கூட நமக்கு தேவை ஆட்சிமாற்றமாக இல்லை. 

கேட்கிற இடங்களை தர கீழே இறங்க தயார் என்கிறது மாநில ஆளும் தரப்பு. வெளியில் வாருங்கள் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்றாலும் நாங்கள் ஆதரவு திரட்டி தருகிறோம் என்று டைம்ஸ் நொவ் தொலைக்காட்சிக்கு அம்மா பேட்டி தரலாம். ஆக தமிழ்நாட்டின் இரு கட்சிகளும் தன்மானத்துடன் தமிழனை காக்கும் தமிழர்களாக உள்ளனர். 

(படம் - இப்போது உயிரோடு இல்லாத ஒரு கட்சியின்  நேற்றைய விளம்பரம். இந்த கட்சியை பற்றி பின்னூட்டமிடுங்கள் )

1 மறுமொழிகள்:

சே.குமார் said...

Nalla pakirvu,.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை