தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Wednesday, February 16, 2011

அப்பாவும் அவர் நண்பர்களும்

நேரமும் வேலையும் இந்தியாவில் போட்டி போட்டுக்கொண்டு நம்மை தின்கின்றன. அதுவும் அலுவலகங்கள் வேறு மாவட்டத்தில் இருப்பது போலத்தான் உள்ளது இங்கு.

சென்னை வந்த நாட்களில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் அதிகம்.
அலுவலக நாட்காளில் நம்முடைய சொந்த வாழ்க்கை நொந்த வாழ்க்கை ஆகிவிடுகிறது.

சனிக்கிழமை அயர்ச்சியை போக்கவும் ஞாயிறு தொலைக்கட்சிகளில் தொலைந்து போகவும் என்று வாழ்க்கையை கவனிப்பார் அற்ற குழந்தையாக விட்டு விடுகிறோம்.

நம்முடைய குழந்தை வளர்ப்பு நாளைய நாட்டின் நிலையை நிர்ணயிக்கும் என்கிற நிலை நம்மில் பலருக்கு உரைத்ததாய் தெரியவில்லை.
குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் எந்திரங்கள் என்கிற நிலை இன்னும் மாறவில்லை.

அப்பாவின் நண்பர்களை சந்தித்தேன். வழக்கம் போலவே கவிதை சமுதாய தொண்டு அப்புறம் என்றும் மாறாத நகைச்சுவை.

அப்பாவின் நண்பர்களில் ஒருவர் மின்னல் பிரியன் - செயற்கை கால்கள் செய்து தருகிறார். இவருடைய பணிக்கு உதவ நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் - 9842293774  - நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளலாம். என் அலுவலக நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்ல சொன்னார்.
மனித தேனீ திரு சொக்கலிங்கம் அவர்களை கண்டேன். அடையாளம்  கண்டுகொண்டார். அப்பாவிடம் இன்னும் அந்த காமராஜர் பக்தி அப்படியே உள்ளது. அப்பா - திரு மொரார் மற்றும் திரு ஜெய்பீ அவர்களின் பின்னல் நின்ற அந்நாளைய இளைஞர். (கலைஞரின் இளைஞர் இல்லை ).
இடையே கிடைத்த நேரத்தில் வருகிற உலக கோப்பைக்கு என்று நான் உருவாக்கிய பதிவுப்பக்கம். அதையும் கொஞ்சம் பாருங்கள். http://odidays.blogspot.com

இனி தினம் எழுத முயல்கிறேன். கொஞ்சம் அரசியலும் எழுதுகிறேன் இங்கு - http://lenz101.com
 

4 மறுமொழிகள்:

Chitra said...

சனிக்கிழமை அயர்ச்சியை போக்கவும் ஞாயிறு தொலைக்கட்சிகளில் தொலைந்து போகவும் என்று வாழ்க்கையை கவனிப்பார் அற்ற குழந்தையாக விட்டு விடுகிறோம்.

நம்முடைய குழந்தை வளர்ப்பு நாளைய நாட்டின் நிலையை நிர்ணயிக்கும் என்கிற நிலை நம்மில் பலருக்கு உரைத்ததாய் தெரியவில்லை.
குழந்தைகள் மதிப்பெண் வாங்கும் எந்திரங்கள் என்கிற நிலை இன்னும் மாறவில்லை.


...... so sad! Hope things get changed soon.

கலாநேசன் said...

welcome back

ம.தி.சுதா said...

நல்லாயிருக்கதுங்க... வருகைக்கு வாழ்த்தக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Pari T Moorthy said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/2.html

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை